Tuesday, October 7, 2008

The axe of conversion maiming the Hindus!

Here is given a sample case of what the Christian agenda is doing to our Hinduism, Hindu families and the nation.

The reply is by Sri AMR.
Other queries can be read in Kumudam Jothidam, 10-10-08 issue




கேள்வி : எங்களுக்குத் திருமணமாகி 13 ஆண்டுகளாகின்றன. ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். அவள் தற்போது 6-ம் வகுப்பு படிக்கிறாள். 13 ஆண்டுகளாக நானும்,என் மனைவியும் ஒற்றுமையாகவும் சந்தோஷமாகவும் இருந்து வந்தோம். எங்களுக்குள் பெரிதாகப் பிரச்சினை எதுவும் ஏற்படவில்லை.


நீண்ட நாட்களாகச் சொந்த வீடு அமையவேண்டும் என்ற கனவும் நிறைவேறியது. ஆனால், சொந்த வீடு கட்டுவதற்காகக் கடன் வாங்க நேரிட்டது. சந்தோஷமாக இருந்த எங்களுக்கு முதன்முறையாகப் பணக்கஷ்டம் ஏற்பட்டது. ஆதலால் கடனை அடைக்கவேண்டும் என்று கடினமாக உழைத்தேன். இந்நிலையில் நாங்கள் வசித்துவந்த பகுதியில் `பெந்தகோஸ்தே' என்ற கிறிஸ்தவ மத மாற்றும் அமைப்பு செயல்பட்டு வந்தது. அதை நடத்திவந்தது ஒரு கிறிஸ்தவப் பெண்மணி. கடனால் நாங்கள் கஷ்டப்படுவதைத் தெரிந்துகொண்ட அந்தப் பெண்மணி, எனது மனைவியை அவர்களது பிரார்த்தனைக் கூட்டங்களுக்கு வரும்படியும், அதனால் கடன் தீரும் அதிசயம் நிகழும் (miracle) என்றும் கூறி தினமும் அழைத்துச் சென்றாள். அதனை முழுவதுமாக நம்பிவிட்ட என் மனைவி, அவளுடன் நெருங்கிப் பழகியதுடன் அவர்களது பிரார்த்தனைக் கூட்டங்களுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டாள். பிரார்த்தனை என்று சொல்லிக்கொண்டு அங்கு இந்துமதக் கொள்கைகள் மீது வெறுப்பு வரும்படியும், கிறிஸ்தவ மதம் மட்டும்தான் உண்மையான மதம் என்றும் திரும்பத் திரும்ப போதனை செய்து என் மனைவியின் மனதை அடியோடு மாற்றிவிட்டாள்.


இதனால் என் மனைவி, என்னையும் என் பெண்ணையும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறும்படி தினமும் சண்டை போட்டு வந்தாள். `எக்காரணத்தைக் கொண்டும் நான் மதம் மாறமுடியாது' என்று மறுத்துவிடவே, அந்த பெந்தகோஸ்தே அமைப்பினை நடத்திவரும் கிறிஸ்தவ மத போதகர்களுக்குக் காவல்துறையினரிடம் நிலவிய செல்வாக்கைப் பயன்படுத்தி என்மீது `வரதட்சணைக் கொடுமை செய்கிறார்' என்று புகார் செய்து, என்னைக் கைது செய்ய முயற்சி செய்தார்கள். அதிலிருந்த தப்பித்துக்கொள்ள, நான் கடன் வாங்கிக் கட்டிய வீட்டிலிருந்து வெளியேறி நீதிமன்றத்தில் தஞ்சம் புகுந்தேன். தற்போது வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. எனக்கு நிச்சயம் நியாயம் கிடைக்கும் என நம்புகிறேன்.


மதமாற்றம் மூலமாக ஏற்படும் கொடுமைக்கு என் துன்பமே ஓர் உதாரணமாகும். இதனை நீங்கள் வெளியிடுவதில் எனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. அவ்விதம் வெளியிடுவதில் எந்தத் தவறும் இல்லை. இந்த வழக்கு எவ்விதம் முடியும்? எனது துன்பங்கள் எப்போது தீரும்?


பதில் : `இந்துக்களை மதம் மாற்றம் செய்யும் உரிமை எங்களுக்கு உண்டு. இதனைத் தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்' என்றுதானே இன்று கிறித்தவ அமைப்புகள் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளன. அவ்வளவு ஏன்? பெரும்பான்மையான கிறிஸ்தவர்களைக் கொண்ட அமெரிக்க நாட்டின் `செகரட்டரி ஆஃப் ஸ்டேட்' திருமதி. காண்டலீஸா ரைஸ் மற்றும் ஸ்டேட் டிபார்ட்மெண்ட், குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுகள் மதம் மாற்ற தடை சட்டத்தை நிறைவேற்றியுள்ளதற்காக கண்டனம் தெரிவித்துள்ளனர். அதாவது, `இந்துக்களைக் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவோம். அதற்கு எங்களுக்கு உரிமை உண்டு' என்று முழங்கியுள்ளனர். ஆணவம் அவர்கள் கண்களை மறைக்கிறது.



பல்லாயிரக்கணக்கில் இந்துக்கள் கொல்லப்பட்டபோது அதுபற்றி அமெரிக்கா சிறிதும் கவலைப்படவில்லை. இந்துக்களின் வாழ்க்கை நெறிமுறை அழிக்கப்படுவதைப் பற்றியும் அமெரிக்காவிற்குக் கவலையில்லை. ஆனால், அவர்களது கிறிஸ்தவ மதம் பரவவேண்டும். காரணம், அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷும் ஒரு காலத்தில் கிறிஸ்தவ மதபோதகராக இருந்தவர்தான்! உலகில் ஒவ்வொரு நாடும் தனது மதத்தைத்தான் பரப்பி வருகின்றது. எந்த நாடும் மதசார்பற்ற நாடு என்று தன்னைக் கூறிக்கொள்ளவில்லை. அத்தகைய கொள்கையை அனுஷ்டிக்கவும் இல்லை. இவற்றைப் பார்த்தும்கூட இந்துக்களாகப் பிறந்து, இந்து தாயின் பாலைப் பருகி இந்துக்களாக வளர்ந்த நமது அரசியல் கட்சியினரும், தலைவர்களும் தன்மானம், மனசாட்சி ஆகிய இரண்டினையும் துச்சமெனத் தூக்கியெறிந்துவிட்டு, அற்ப ஓட்டு வங்கிக்காக மதமாற்றத்தை ஆதரித்தும் இந்துக்களைக் காட்டிக் கொடுத்தும் நடந்துகொள்வது மன்னிக்கமுடியாத மிகக் கொடிய துரோகமாகும். போரிடாமல், ரத்தம் சிந்தாமல் நாட்டைப் பிடிக்கும் ராஜதந்திரம்தான் மதமாற்றம் என்பது! இதற்கு மத அடிப்படையில் பாகிஸ்தான் உருவானதே ஓர் உதாரணமாகும்.


நம் அரசியல்வாதிகள் சேர்த்த செல்வம், குவித்த செல்வாக்கு, அரசியல் புகழ் ஆகிய அனைத்தையும், காலன் வந்து இவர்களைக் கூட்டிச் செல்லும்போது அவை அனைத்தையும் விட்டுவிட்டுத்தான் செல்லப்போகிறார்கள். ஆனால் மாபெரும் இந்து சமூகத்திற்கு இவர்கள் செய்துவரும் துரோகம், சரித்திரத்தில் நிச்சயமாக, நிரந்தரமாகப் பொறிக்கப்படும். அன்று நம் இந்திய சரித்திரத்தைப் படித்து அவமானத்தால் குன்றி கண்ணீர் விடப்போகும் நம் இளைய சந்ததியினர் இன்று நம் அரசியல் தலைவர்கள் செய்யும் துரோகத்தைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பது பற்றி இனியாவது சிந்தித்துப் பார்க்கட்டும்.


இந்த சோதனையிலிருந்து வெற்றிகரமாக வெளிவந்துவிடுவீர்கள். தர்மம் இந்துக்களுக்குத் துணை நிற்கிறது. கவலைப்படாதீர்கள்.

No comments:

Post a Comment