Saturday, June 26, 2010

Dr Kalyanaraman on Parpola and Mahadevan's stance on Indus link to Tamils. (World Tamil Conference series-6)

From

http://news.rediff.com/interview/2010/jun/24/interview-no-proof-of-tamil-script-in-indus-civilization.htm


'No evidence of Tamil script in Indus civilisation'

June 24, 2010 18:14 IST


President Pratibha Patil [ Images ] presented the 'Kalaignar M Karunanidhi [ Images ] Classical Tamil Award' to Professor Arko Parpola, Professor-Emeritus of Indology, Institute of World Cultures, University of Helsinki, Finland, at the inauguration of the World Classical Tamil Conference in Coimbatore on Wednesday. Parpola was given the award for his study that links Tmail with the script found in the Indus Valley texts.


Striking a different note, Dr S Kalyanaraman, Indologist, director of the Sarasvati Sindhu Research Centre, and full-time researcher in Indus Valley scripts says that Dr Parpola is wrong, in an e-mail interview to rediff.com's Sheela Bhatt..


What do you think about the ongoing Tamil conference? Will it serve any purpose?

The World Classical Tamil Conference is an initiative of the central institute set up after the Government of India [ Images ] declared Tamil as a classical language. Any conference to promote language studies is laudable if the intent is to promote a better understanding of the underlying cultural traditions and look towards the future for general welfare of the people. If the conference deliberations result in a set of action plans to provide an impetus to such cultural studies, they will be of value for the present and future generations.


What do you think about the status of Tamil in Tamil Nadu?

Discussions about the status of Tamil gets blurred by dominant political agendas and overtones. These tend to promote language chauvinism or isolationist or separatist trends, to score political points about unauthenticated 'Dravidian civilisation', instead of promoting the essential cultural unity and identity of Hindustan and pride in the nation's collective heritage. These aberrations are created by the 'Dravidian' political parties who talk about mythical 'Dravidian' identity.


How do you see its importance within India?

I hope this Dravidian political colouring of objective language studies does not lead other language groups in the nation to indulge in divisive political dialogue. Every effort should be made by all politicans to promote a national identity and the civilisational strengths of Hindustan which was the richest nation on the globe in the 18th century, accounting for over 27 percent of the world GDP (according to the study by Angus Maddison, economic historian from Cambridge).


Do you agree with renowned Indologist Dr Asko Parpola's study that the Dravidian language was also found in Indus Valley scripts?

I do not agree with Parpola's unproven 'decipherment' of the Indus script with the premise that old Tamil was the underlying language. It is simply a belief system and not premised on evidence of the corpus of inscriptions and the underlying cultural foundations of the civilisation of 4,000 years ago. Parpola's contribution is preparing the corpus of Indus script inscriptions in a logically organised set of concordances, but he cannot claim to have deciphered that old Tamil was the underlying language.


The reason is this: language studies exemplified by scholars of languages and archaeology like F B J Kuiper, Colin Masica, Murray Barnson Emeneau, Franklin Southworth point to a linguistic area where many languages interacted with one another and absorbed language features from one another. This is why many words used even today are commonly found in many languages of the nation, ranging from Munda, Prakrit, to Sanskrit, Tamil, Telugu, Malayalam, Sindhi, Kashmiri and other languages which are the lingua franca of the nation.


Many of these words can be traced to the time of the Saraswati-Sindhu civilisation which produced these inscriptions in a unique pictorial writing system. It should be noted that over 80 percent of the archaeological sites of the civilisation are on the banks of the Vedic river Saraswati and the people living there today are likely to be descendants of the cultural continuum from 2,000 BC.


The civilisation did not vanish; the cultural legacy continues even today in many parts of India. For example, worship of Shiva linga, use of Sankha bangles, wearing of sindhur in the parting of the hair, namaste, yogasanas and other cultural phenomena such as making bronze statues using cire perdue (metal casting) technique and writing on copper plates or punch-marked coins from 6th century BC in all areas ranging from Takshashila in Afghanistan to Karur in Tamil Nadu.


Do you think the Tamil conference is merely a Dravida Munnetra Kazhagam [ Images ] show? Or is it truly cultural event?

The conference is unfortunately not a cultural or academic event since the entire show has been hijacked by Dravidian politicians led by the atheist Chief Minister Kalaignar Karunanidhi. The atheist streak is evident in the exclusion of the enormous body of Tamil literature from Sangam times and in the brilliant literary works produced by the Azhvars and Nayanmars. It would have been nice if the entire event involved language scholars from other parts of the country also. Tamil has enriched and has been enriched in the vibrant linguistic area of Hindustan thanks to interactions among various language-speaking peoples governed by one socio-cultural identity of India, that is Bharat (as stated in the Preamble of the Indian Constitution).


Do you think the Rs 180 crore plus expenditure to organise the event is worth it?

The Rs 180 crore plus spent on the conference could have been better utilised to reach out to the children and students all over India, conveying the richness of Tamil literature and traditions evolved by the people of Tamil Nadu which are mirrored in other parts of the country. A cultural event should not end up as a photo-op for politicians but as a sustainable, abiding cultural memory in every nook and corner of the land.


Why there are very few non-Tamil Indians who want to study Tamil?

Chauvinism is the reason why people get turned away from studying the literature of languages other than their own. Tamil texts and traditions should be studied by non-Tamils. Such cross-cultural studies enrich the brilliant fabric of the nation. More translations of works from one language into other languages and in arranging cultural tours across the country as Bharat Yatras should be encouraged.


For instance, a part of the Rs 180 crore could have been spent in taking groups of students to other parts of the country, visiting hundreds of heritage sites and encouraging the Tamil students to write about what they have learnt from their heritage tours. The Tamil Nadu government should encourage the study of Sanskrit and other Indian languages in educational and research institutions and study of Tamil speaking peoples' contribution to Indian science and technology.


In summary, be Indian, be proud be to be Indian and a world citizen and do not get closeted in an insular, narrow domain. India has a destiny to fulfil in constituting the Indian Ocean community as a counterpoise to the European Community, and the Tamil-speaking people should become leading partners in this trans-national, civilisational enterprise.

 

*********

http://www.tamilhindu.com/2010/06/semmozhi-awards-some-questions/#comment-14960

செம்மொழி விருதுகள்: சில கேள்விகள்

மூலம்: டாக்டர் எஸ்.கல்யாணராமன்
தமிழில்: அரவிந்தன் நீலகண்டன்

Asko Parpola

Asko Parpola

ஆய்வாளர் அஸ்கோ பர்போலாவுக்கு செம்மொழி மாநாட்டில் விருது வழங்கப்பட்டுள்ளது. ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் அவரது வாழ்நாள் பங்களிப்புக்காக கௌரவிக்கப்படுகிறார். வாழ்த்துக்கள்.

இருவருமே சிந்து-சரஸ்வதி பண்பாட்டின் இலச்சினைகளின் சித்திர உருக்களின் பொருளை வெளிக்கொணர்வதில் கடுமையாக உழைத்தவர்கள். முக்கியமான முன்னகர்வுகளை கொண்டு வந்தவர்கள். அடிக்கடி ஊடகங்களில் அறிவியல் பூர்வமான அணுகுமுறையை முன்னிறுத்துபவர்கள். இவர்கள் இத்தகைய ஒரு முக்கிய பொதுவிழாவில் பாராட்டப்படுவது நிச்சயமாக மகிழ்ச்சி அளிக்கும் விஷயம்தான்.

ஆனால் சில கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

இந்த செம்மொழி மாநாட்டை நடத்துவோர் ஆரிய படையெடுப்புக் கோட்பாட்டை நம்புகிறவர்கள். சிந்து சமவெளிச்சின்னங்களுக்கும் இன்றைய தமிழ் மக்களுக்கும் மட்டுமேயான ஒரு பண்பாட்டுத் தொடர்ச்சியை ஆதரிப்பவர்கள். பாரதத்தின் தமிழரல்லாத பிற மக்களுக்கும் சிந்து சமவெளி பண்பாட்டுக்குமான தொடர்பை மறுப்பவர்கள். அது மட்டுமல்ல; அவர்கள் செம்மொழி, தனி மொழி என முன்னிறுத்தும் தமிழர் பண்பாடு சங்ககால கட்டத்தைச் சேர்ந்ததெனக் கூறும் இவர்கள் இது ஆரிய (அதாவது வேத பண்பாட்டு) தொடர்பற்ற ஒரு தனித்தமிழ் பண்பாடு என்று பிரச்சாரம் செய்து வருபவர்கள். இந்த நிலைப்பாட்டையெல்லாம் பிரச்சார தளத்துக்கு கொண்டு செல்லும் விதமாக செம்மொழி மாநாட்டு முத்திரையை இவர்கள் அமைத்திருக்கின்றனர். சிந்து-சரஸ்வதி பண்பாட்டு இலச்சினைகளை தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு இந்த நிலைப்பாடுகளின் அடிப்படையில் பயன்படுத்தியுள்ளனர்.இந்த இலச்சினையை வடிவமைத்த குழுவில் ஐராவதம் மகாதேவனும் உள்ளார் என்பது மிகவும் வேதனையாக விஷயம்.

இனவாத,அரசியல் பிரச்சார அடிப்படையில் சிந்து-சரஸ்வதி முத்திரைகள் பயன்படுத்தப் படுவதற்கு, தன் வாழ்நாள் முழுவதையும் இந்த ஆராய்ச்சிக்கே அர்ப்பணித்த அறிஞரான மகாதேவன் மௌனமாக துணை போகிறார்  ஏன்? இதுதான் அடிப்படையாக எழக்கூடிய கேள்வியாகும்.

அஸ்கோ பர்போலாவின் ஆய்வு முடிவுகளை ஐராவதம் மகாதேவனும், ஐராவதம் மகாதேவனின்
ஆய்வு முடிவுகளை அஸ்கோ பர்போலாவும் ஒத்துக் கொள்வதில்லை - இருவருமே சிந்து-சரஸ்வதி பண்பாட்டு இலச்சினைகள் திராவிட மொழியைக் கொண்டிருப்பதாக சொன்னாலும், இருவருமே இன்னும் அதிசயிக்கத் தக்க விதத்தில் ஆரிய படையெடுப்பு/புலப்பெயர்வு கோட்பாடுகளை அந்த பதங்களைக் கூட விடாமல் பயன்படுத்திக் கொண்டிருந்தாலும்- என்பதையும் இங்கு சிந்திக்க வேண்டும்.

indus_one_horn_animal_sealஅஸ்கோ பர்போலா சிந்து-சரஸ்வதி சமவெளி இலச்சினைகளில் இருக்கும் மீன் போன்ற சித்திர எழுத்துருவை "மீன்" என்று சொல்லி அதனை விண்மீன்களைக் குறிப்பதாகக் கூறுகிறார். அறுமீன் -கார்த்திகை என்றெல்லாம் அவர் சிந்து-சரஸ்வதி இலச்சினைகளை கருதுகிறார். எனவே பசுபதி என அறியப்படும் புகழ்பெற்ற யோகநிலைக் கடவுள் வருணனைக் குறிப்பிடுவதாக இருக்கலாம் என்றும் சொல்லுகிறார் (1).

உண்மைதான். உதாரணமாக அகநானூற்றில் "அறுமீன்" குறித்து தலைவி பேசுகிறாள் (2). புறநானூற்றுப் பாடலில் "மீன்திகழ் விசும்பில்" எனக் கூறுவதைப் பார்க்கிறோம் (3). "மாஇரு விசும்பில் பல்மீன் ஒளி கெட ஞாயிறு" தோன்றியதைக் குறித்து பதிற்றுப்பத்தில் பார்க்கிறோம் (4). பின்னர் சிலப்பதிகாரத்தில் அருந்ததி "வடமீன்" எனக் குறிப்பிடப்படுவதையும் பார்க்கிறோம்.(5)

விண்மீன்களை மீன் எனச் சொல்லும் தமிழர் பண்பாட்டை சிந்து-சரஸ்வதி பண்பாட்டுடன் இணைக்கும் அஸ்கோ பர்போலாவின் பார்வை சரியானதாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அத்துடன் மற்றொரு விஷயத்தையும் நாம் கணக்கில் எடுக்க வேண்டியுள்ளது. விண்மீன்களை மீன்களாகப் பார்ப்பதுடன் தொடர்புடைய விஷயம் வானைப் பெருங்கடலாகக் காண்பது. இந்த மையமான உருவகம் வேத இலக்கியத்திலிருந்து தான் வருகிறது என்று கல்வெட்டு ஆய்வாளர் எஸ்.ராமச்சந்திரன் அறுதியிட்டுக் கூறுகிறார். வருணனின் இரு தொடைகளும் பூவுலகக் கடலாகவும் ஆகாயக் கடலாகவும் கூறப்படுவதை அவர் சுட்டிக் காட்டுகிறார் (6). ஆக, அஸ்கோ பர்போலா எதைத் தமிழரின் தனித்துவமாகச் சுட்டிக் காட்டுகிறாரோ அது உண்மையில் வேதப் பண்பாட்டுக்கும் பொருந்துவதாக அமைகிறது.

இப்பண்பாட்டுத் தொடர்ச்சி பேணப்படுவது வெறும் மொழியினால் மட்டுமல்ல, வேத நெறியினாலும்தான். எனவே அந்த வேத நெறியை கீழ்மையாகப் பேசி மறுக்கக் கூடிய ஒரு அரசியலின் அடிப்படையில் அந்த இலச்சினைகள் பயன்படுத்தப் படுவது சரியானது தானா?

அத்துடன் அஸ்கோ பர்போலா சில விசித்திர நம்பிக்கைகளை கொண்டவராக இருக்கிறார். ஆரிய படையெடுப்பு இரண்டு அலைகளாக நடந்தது; அதில் முதல் அலை ஆரியர்களுடன் இரண்டாவது அலை ஆரியர்கள் மோதியது ஆரிய-தஸ்யு போராட்டங்களாகக் காட்டப்படுகிறது என்றெல்லாம் சொல்லியிருக்கிறார். ஆனால் அறிவியல் பூர்வமான மரபணுவியல் ஆராய்ச்சிகள் பர்போலாவின் ஆரியப் படையெடுப்புக் கோட்பாடுகளை ஆதரிக்கவில்லை என்பதை ஆராய்ச்சியாளர்கள் தெளிவு படுத்தியிருக்கிறார்கள் (7).

மகாதேவன்

Mahadevan

அடுத்ததாக ஐராவதம் மகாதேவனுக்கு வரலாம்.

இவருடைய நிலைப்பாடோ  இன்னும் விசித்திரமாக இருக்கிறது. இவர் மிகத் தெளிவாகவே சிந்து-சரஸ்வதி பண்பாட்டின் அடையாளமென கருதத்தக்க ஒற்றைக் கொம்பு விலங்கு இலச்சினையை ரிக்வேத சோம பானச்சடங்கு மூலமாக விளக்குகிறார். வேதப் பண்பாட்டின் மையமாக அமைந்த இந்த அம்சம் படையெடுத்து வந்த ஆரியர்களால் இங்கு இருந்த திராவிடர்களிடமிருந்து பெறப்பட்டதாம். அவர் மேலும் சொல்லுகிறார்: "இந்த விஷயத்தில் நான் தனி ஆள். ஹரப்பா பண்பாட்டின் திறவுகோல் வேதத்தன்மை. அதன் மொழியோ திராவிட மொழி " (8).

தனது வாழ்க்கையையே சிந்து சமவெளி இலச்சினைகளை விளக்கிட செலவழித்த மகாதேவன், ஹரப்பா பண்பாடு வேதப் பண்பாடு என்று சொல்வதை கொஞ்சமும் இலட்சியம் செய்யாமல் ஒரு இனவாதச் சட்டகத்தில் அந்த பண்பாட்டின் வரலாற்றை விளக்கி அதனை இன்றைய அரசியலுடன் முடிச்சு போடக்கூடியவர்களிடம் எவ்விதம் ஒரு முணுமுணுப்பும் இல்லாமல் விழா மதிப்பு பெறுகிறார்?

ஒருவேளை இவரது முடிவுகளை அவர்கள் ஏற்றுக்கொண்டார்களா அல்லது அவர்களின் அரசியலுக்கு முன் இவரது ஆராய்ச்சியும் அறிவியல் பார்வையும் சமரசம் செய்து கொண்டனவா? மிகவும் மனவேதனை அளிக்கும் இந்த கேள்விகள் எழும்பாமல் இல்லை.

சங்கத் தமிழ்ப் பண்பாடு வேதப் பண்பாடே

'தமிழர் பண்பாடு என்பது எஞ்சிய பாரதப் பண்பாட்டிலிருந்து தனிப்பட்டது' என்றும், 'வேதப் பண்பாடு ஆரியப் பண்பாடு' என்றும் சொல்லப்படுகிறதே, அதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? சங்க இலக்கியம் முழுக்க வேதத்தையும் வேள்வியையும் போற்றக்கூடியதாக அல்லவா உள்ளது?

நன்று ஆயந்த நீள் நிமிர்சடை
முதுமுதல்வன் வாய் போகாது
ஒன்று புரிந்த ஈர்-இரண்டின்
ஆறு உணர்ந்த ஒரு முதுநூல்

என புறநானூறு வேதத்தைப் போற்றுகிறது (9).

நற்பனுவல் நால் வேதத்து
அருஞ்சீர்த்திப் பெருங்கண்ணுறை
நெய்ம் மலி ஆவுதி பொங்கப் பல்மாண்
வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி:
யூபம் நட்ட வியன்களம் பலகொல்

என புறநானூறு வேத வேள்வியைப் போற்றுகிறது (10).

கடவுள் நிலைய கல்ஓங்கு நெடுவரை
வடதிசை எல்லை இமயம் ஆக
தென்அம் குமரியொடு ஆயிடை அரசர்

என பதிற்றுப்பத்து பாரத தேசத்தின் பண்பாட்டு ஒற்றுமை குறித்து பேசுகிறது (11).

ஆனால் பழந்தமிழரின் ஆன்மிகப் பண்பாட்டின் இந்த மைய அச்சுக்கள், பழந்தமிழரை பாரதப் பண்பாட்டுச் செழுமையுடன் இணைக்கும் இப்பாவுகள் - காட்டப்பட்டனவா இம்மாநாட்டில்? வலியுறுத்தப்பட்டனவா? அட, சொல்லவாவது பட்டனவா எவராலேனும்? இல்லையே!

இந்நிலையில் இந்த அறிவிற் சிறந்த இரண்டு சான்றோர்களிடமும் ஒரு கேள்வி மட்டுமே கேட்கப் பட வேண்டியதாக உள்ளது. சான்றோரின் பெருங்குணங்களை கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி சொல்லும் போது "பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்" என்று கூறுகிறான். ஆனால் இன்று தமிழர் பண்பாட்டை திரித்துக் காட்டும், பொதுச்சொத்தை வீணடிப்பதாகவே காட்சியளிக்கிற மாநாடு எனும் பெயரில் நடத்தப் படுகிற ஒரு கேளிக்கை கூத்தடிப்பில் பாராட்டப்படுவது உண்மையிலேயே பாராட்டப்படுவதுதானா? இக்கேள்விக்கான பதிலை உங்கள் மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன்.

நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்
செல்வம் அன்று; தன் செய்வினைப் பயனே;
சான்றோர் செல்வம் என்பது, சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கட் செல்வம் செல்வம் என்பதுவே.
(நற்றிணை)

சான்றுகள்:

(1) Asko Parpola, Meeting the challenge of Indus Script : http://www.harappa.com/script/parpola16.html
(2) அகநானூறு: 141:6-8
(3) புறநானூறு: 25:1
(4) பதிற்றுப்பத்து. 64:12-13
(5) சிலப்பதிகாரம்: புகார் காண்டம்
(6) அதர்வ வேதம் 4:16
(7) Hemphill & Christensen: The Oxus Civilization as a Link between East and West: A Non-Metric Analysis of Bronze Age Bactrain Biological Affinitie, paper read at the South Asia Conference, 3-5 November 1994, Madison, Wisconsin; p. 13. (Quoted in Elst)
(8) http://www.harappa.com/script/mahadevantext.html
(9) புறநானூறு: 166:1-4
(10) புறநானூறு 15:17-21
(11) பதிற்றுப்பத்து 43:6-9



No comments:

Post a Comment