Monday, August 10, 2015

Karunanidhi’s 'Ramanuja' – a distortion of sorts as usual. (Article by Sri AMR)


The following is the article written by Sri A.M.Rajagopalan (AMR) in Tamil in Kumdam Jothidam on the kind of distortions and denigrations that M.Karunanidhi is infusing in his dialogues for the TV serial on Acharya Ramanuja. I don’t watch that serial and I believe no believer and follower of Acharya Ramanuja would be interested in seeing that serial.


Sri AM Rajagopalan (AMR)

Anyone can speak well about God or the Acharya purushas, but for people to listen to him or her, that person must have fulfilled certain qualifications. For this, the clues and authority come from the verses of Azhwars who are the pillars of Tamil Vedas that always look at the Luminous One in the way “tad viShNO  paramam padam, sada pashyanthi sUrayaha”.  From the verses that I know of Azhwars and recite almost every day, I can see 2 lines of thought on who is eligible to even utter “Namo Narayanaya Namaha”. One is from Periyazhwar and the other from Thirumangai Azhwar.


Periyazhwar.


Karunanidhi – who mouthed the infamous dialogue on Lord Rama asking in which Engineering college Rama studied stands disqualified at the very outset to even utter the name of the Lord. In the very 2nd verse of Pallandu songs, Peryazhwar wants only those who have not abused Rama for 21 generations to sing in praise of Him (Vishnu).


Moreover Karunanidhi, as cautioned by Periyazhwar belongs to the group that speaks about the Lord for “food” or sustenance. Karunanidhi hit upon the idea to write on Acharya Ramanuja only when he realized that the ‘Pandaaram” party (BJP) cannot be dispensed with and that it has some support among people of Tamilnadu. A serial like this would help him to tell people that he is not anti- Hindu. At the time of starting to write this serial, it even looked as though he was clearing the decks of anti-Hindu tag, so that it won’t be difficult to align with the BJP if at all a chance arises in future.


According to Periyazhwar, the person who wishes to join the group that sings “Pallandu” to God (Long live God) must have made himself subservient to God and not have abused God for 21 generations. The ideal person to enter the group is one who enters even before he / she has learnt to basic alphabets (Yedu nilathil iduvathan munnam vanthu) (ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம் புகுந்து).  Only such people can even utter “Namo Narayana”. 


There is another category of people. They would not have known about God. They would have led a very despicable life of causing harm to others. They could have been robbers. But even then, if they had repented for what they had been all along and wanted to change by worshiping God, then they are very much welcome to sing “Namo Narayana”. Thirumangai Azhwar discovered the pleasure and utility of uttering this name after having lived as a robber and reformed later. His famous verses starting as “Vaadineen, vaadi varinthinen”( வாடினேன் வாடி வருந்தினேன்)  show that repentance comes first in leading the person to understand the glory of God. Karunanidhi has no thought of repentance for what he had done in misleading generations of people.


Thirumangai Azhwar

When such a person writes the life history of Acharya, we can only recall Madhura Kavi Azhwar’s words on Nammazhwar“Payanandraagilum, paangallar aagilum, seyal nandraaga, thirutthip paNi koLvaan” (பயனன்றாகிலும் பாங்கல்லராகிலும் செயல் நன்றாக திருத்திப் பணி கொள்வான்). Acharya is one who would reform those who are useless and deficient. We can only think that Acharya Ramanuja would someday make Karunanidhi a reformed person.



But until now there is no sign of it – as we can make out from the mean-minded depictions in the serial.


********


ஆன்மீக ராமானுஜரை அரசியல் ராமானுஜராக சித்தரிக்க வேண்டாம்! – .எம்.ஆர்

பகவானைப் பற்றியோ அல்லது மகான்கள், சாதுக்கள், அவதார புருஷர்கள், மகாத்மாக்கள், சித்த புருஷர்கள் ஆகியோரைப் பற்றியோ அல்லது அவர்களது திவ்ய சரித்திரத்தைப் பற்றியோ எழுத வேண்டும் என்றால், அதற்கான குறைந்தபட்ச அடிப்படைத் தகுதிகள் வேண்டும்

அத்தகைய தகுதிகள் என்ன என்பதைப் பற்றி நம் ஆன்றோர்களும், சான்றோர்களும் அருளியுள்ளனர். தெய்வபக்தி, நமது கலாசாரம், பண்பு, நேர்மை, ஒழுக்கம் ஆகியவற்றில் நம்பிக்கை, நமது பாரதப் புண்ணிய பூமியின் சென்ற கால தெய்வீகச் சரித்திரம், நமது தர்ம நெறிமுறையை காப்பாற்றுவதற்காக ஏராளமான மகான்களும், மன்னர்களும், வீரர்களும் புரிந்துள்ள தியாகங்கள் ஆகியவற்றை நன்கு தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.

ஸ்ரீமத் மகாபாரதத்தையும், ஸ்ரீமத் பாகவதத்தையும் மகரிஷி வியாசரால்தான் எழுத முடியும். இதிகாச ரத்தினம் எனப் பூஜிக்கப்படும் ஸ்ரீமத் ராமாயணத்தை வால்மீகி மகரிஷியினால் மட்டும்தான் எழுத முடியும். திருக்குறளை வள்ளுவப் பெருமானால் மட்டும்தான் வடித்திருக்க முடியும். பிரபல அரசியல் தலைவர் ஒருவர் எழுதும் ஸ்ரீமத் ராமானுஜரின் சரித்திரம், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொடர் ஒளிபரப்பாக ஒளிபரப்பப்போவதாக விளம்பரம் செய்து வந்த போதிலிருந்தே, அது எப்படி இருக்கும் என்பதை ஊகித்துப் பார்க்க முடிந்தது.

இந்து மதத்தின் மீதும், ஸ்ரீ ராமபிரான் மீதும் காலம் காலமாக துவேஷத்தையே விஷமாகப் பரப்பி வருபவரும், தீவிர நாத்திகக் கொள்கைகளைக் கடைப்பிடித்து வருபவருமான இந்த அரசியல் தலைவர், ஏன் அவதார புருஷரும், வைணவ சம்பிரதாயத்தின் உயிர்மூச்சாக விளங்குபவருமான ஸ்ரீமத் ராமானுஜரைப் பற்றி எழுத முன்வந்திருக்கிறார் எனப் பலரும் ஆச்சரியப்படுகின்றனர்.

நாத்திகம் என்ற விஷ விதையை புனிதமான தமிழ் மண்ணில் விதைத்து , காழ்ப்புணர்ச்சி என்னும் தண்ணீரைப் பாய்ச்சி அதனை விஷவிருட்சமாக வளர்த்து, அதன் மூலம் தன்னையும், தங்கள் குடும்பத்தையும் வளர்த்துக் கொண்டிருப்புவர்களுக்கு ஸ்ரீமத் ராமானுஜரைப் போன்ற அவதார புருஷர்களைப் பற்றி எழுதுவதற்கு என்ன தகுதியுள்ளதுமகாபுருஷரான ஸ்ரீமத் ராமானுஜரின் ஆயிரம் ஆண்டு நிறைவு விழாவை உலகம் கொண்டாட இருக்கும் இத்தருணத்தில், இந்த அரசியல் தலைவர் தனது கொள்கைகளுக்கு முற்றிலும் மாறான ஒரு மகானைப்பற்றி எழுதி, அதனை தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்ப முன்வந்திருப்பதின் நோக்கத்தைப் புரிந்து கொள்வது அப்படி ஒன்றும் கடினமானது அல்ல.

ஸ்ரீமத் ராமானுஜரின் வாழ்க்கைச் சரித்திரத்தை தனது கொள்கைகளுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து, அதனைத் தனது கட்டுப்பாட்டில் உள்ள தொலைக்காட்சி மூலம் பிரசாரப்படுத்துவதே இத்தொடர் ஒளிபரப்பின் நோக்கம் என்பது அனைவருக்கும் தெரியும்.

30-06-2015
அன்றைய இரவு தொலைக்காட்சியில்

நாத்திகக் கொள்கைகளிலேயே தன் வாழ்நாள் முழுவதையும் கழித்தவர்கள் எழுதினால் இத்தகைய புனிதமான புண்ணிய சரித்திரங்கள் எவ்விதம் மக்களிடையே திரித்துப் பிரசாரப்படுத்தப்படும் என்பதை தெரிந்து கொள்ள, 30-06-2015 செவ்வாய்க்கிழமை அன்று இரவு அந்த தனியார் தொலைக்காட்சியில் ஸ்ரீமத் ராமானுஜர் தொடர் ஒளிபரப்பில் காண்பிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி ஒன்றே போதும்,
நெற்றியில்பளிச்சென்று திருநாமம் இட்டுக்கொண்டுள்ள, குடுமி வைத்த ஒரு ஸ்ரீவைணவ இளைஞர், அழகான ஒரு இளம்பெண்ணை பார்த்து பல்லைக் காட்டுவதும், அவளைப் பின்தொடர்ந்து செல்வது போன்றும் அக்காட்சி காட்டப்பட்டது. அந்த இளம்பெண் சற்று தூரத்திற்கு சென்று விட்டார்.

ஆனால், அப்பெண் தனக்கு பக்கத்தில் இருப்பதாக நினைத்த அந்த வைணவ இளைஞர் தன் அருகில் இருந்த மூதாட்டி ஒருவரைக் கட்டி அணைத்து, கொஞ்சுவதாகக் காட்சி அமைந்திருந்தது. அதனால் வெகுண்ட அந்த மூதாட்டி அந்த வைணவ இளைஞரை நையப் புடைக்கிறார். அந்த மூதாட்டியுடன் அங்கு அருகிலிருந்த வேறு சில பெண்மணிகளும் சேர்ந்து கொண்டு அந்த வைணவ இளைஞரை செம்மையாக அடிப்பதாக அக்காட்சி அமைந்திருந்தது.

இதுபோன்றே, தாகத்தினால் வருந்திய திருக்கச்சி நம்பிகளுக்கு தாகம் தணிய தண்ணீர் கொடுக்க ஸ்ரீமத் ராமானுஜரின் தாயார் மறுப்பதுபோல் ஒரு காட்சியும் காட்டப்பட்டுள்ளது.

ஸ்ரீமத் ராமானுஜர் எனும் ஒரு மகத்தான அவதாரபுருஷரைத் தன் வயிற்றில் சுமந்து பெற்ற ஓர் தெய்வீக அன்னை, இந்த அளவிற்கு நெஞ்சில் ஈரமற்றவராக இருந்திருக்க முடியாது. இது பிற்காலத்தில் தங்கள் சுயநலத்திற்காக சிலரால் சேர்க்கப்பட்ட கட்டுக்கதையாகத்தானிருக்க முடியும். அவதார புருஷர்கள் அன்பு, பக்தி ஆகியவற்றினால் உயர்ந்த உத்தம ஸ்திரீகளின் கர்ப்பத்தில்தான் அவதரிப்பார்கள். ஸ்ரீமத் ராமானுஜர் ஸ்ரீராமபிரானின் தம்பியான ஸ்ரீ லட்சுமண சுவாமியின் அவதாரமென கோடான கோடி மக்களால் பூஜிக்கப்படும் அவதார புருஷர். ஸ்ரீ ராமபிரானையே கேவலமாகத் தூற்றிய இந்த அரசியல் தலைவர் எழுதும் கதை வேறு எவ்விதம் இருக்க முடியும்?

13-07-2015
அன்று…!

இவை போன்றே, 13-07-2015 அன்றைய ஒளிபரப்பில், சிறுவன் ஸ்ரீமத் ராமானுஜருக்கு உபநயனம் (பூணூல் போடுவது) வைபவத்தை வைத்து, மக்களிடையே துவேஷத்தைத் தூண்டிவிடும், விஷமத்தனமான, முற்றிலும் ஆதாரமற்ற ஒரு காட்சி காட்டப்பட்டது. மற்ற குழந்தைகளுடன் சமமாக விளையாடுவதற்கு பூணூல் தடையாக இருப்பதாக சிறுவன் ஸ்ரீமத் ராமானுஜரே கூறுவது போன்று காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சிக்கு எவ்வித ஆதாரமும் கிடையாது. இது முற்றிலும் கற்பனையானதே!

இதன் நோக்கம் என்ன என்பதை மக்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள். இந்து சமுதாயத்தை கேவலப்படுத்துவதும், விரசமான காட்சிகளை பரம பவித்ரமான ஸ்ரீமத் ராமானுஜரின் திவ்ய சரித்திரத்தில் காண்பிப்பதும், எத்தகைய கேவலமான செயல் என்பதை, இந்த வயோதிக காலத்திலும் கூட இந்த அரசியல் தலைவர் புரிந்து கொள்ளவில்லையேநல்ல திறமையும், தமிழ்மொழியில் பாண்டித்யமும் பெற்ற இவர், நம் நாட்டிருக்கும், குறிப்பாக தமிழகத்திற்கும், தமிழ் மக்களுக்கும் நன்மை செய்வதற்காகத் தனது திறமைகளை நன்கு பயன்படுத்திக் கொண்டிருக்கலாம். திறமைகள் இருப்பினும், மனம் நல்ல வழியில் செல்வதற்கு இறைவனின் கருணை வேண்டும் அல்லவா? அந்தக் கருணையைப் பெறுவதற்கும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

சினிமா கதையல்ல ஸ்ரீமத் ராமானுஜரின் புண்ணிய சரித்திரம். மகாத்மாவும், தன் வாழ்க்கை முழுவதையும் வைணவத்திற்காகவே அர்ப்பணித்தவரும், தியாகசீலருமான ஸ்ரீமத் ராமானுஜரின் திவ்ய சரித்திரத்தில் தனது சொந்தக் கருத்துக்களையும், அரசியல் கொள்கைகளையும் புகுத்துவது மன்னிக்கமுடியாத குற்றமாகும். நீதிமன்றங்களாவது, சமூகத்தின் நன்மை கருதி இது விஷயத்தில் தலையிடுமா?

எதிர்பார்ப்புடன்,

என்றும் உங்கள் .எம்.ஆர்.

நன்றி குமுதம் ஜோதிடம்


***************


Related posts:-




4 comments:

  1. Well said. We can not ignore this nonsense. Someone has to take action. Who will bell the cat?

    ReplyDelete
  2. who will bell the cat. good question. its his tv and he can do anything. he is of that type only.

    ReplyDelete
  3. Sri AMR Rajagopalan only writes why he feels Karunanidhi is not qualified to write the story of Ramanuja Serial. He doesn't point out errors in the Serial which may justify his argument.

    ReplyDelete
  4. No Asthika would watch the serial by Karunanidhi (MK). But it will be watched by MK's fans. Let them, who were brain washed by him in the past to deny the existence of God and Hinduism, be brought around by MK himself through this serial. If the objectionable scenes are brought to the notice of AMR he might issue his rebuttal.

    ReplyDelete