Friday, January 31, 2020

தஞ்சை குடமுழுக்கு சர்ச்சை: ராஜராஜ சோழன் தமிழன் தானா? (காணொளி)



தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு நெருங்கி கொண்டிருக்கிறது. இந்த வேளையில் குடமுழுக்கை சமஸ்க்ருதத்தில் செய்யக்கூடாது என்றும் தமிழில்தான் செய்ய வேண்டும் என்றும் ஆர்பாட்டம் செய்து கொண்டிருக்கிறார்கள். இது தொடர்பான விளக்கங்களைக் காணொளி மூலமாக மக்களுக்கு எடுத்துச் சொல்ல விரும்புகிறேன். அந்த முயற்சியின் முதல் பகுதியாக ராஜராஜன் தமிழன் தானா என்ற கேள்விக்கு இந்தக் காணொளி விடை கொடுக்கிறது.



இதில் முதலாவதாக தஞ்சாவூர் என்பதே தமிழ்ச் சொல்லா என்று ஆராய்ந்து அது தஞ்சலா என்னும் சாதகப் பறவையின் பெயரால் அழைக்கப்படுகிறது என்று தெளிவு படுத்தி உள்ளேன். தஞ்சலா என்பது சமஸ்க்ருதப் பெயர்!

அடுத்ததாக சோழர் வம்சாவளியை ஆராய்ந்துள்ளேன். ராஜராஜன் மகன் முதலாம் ராஜேந்திரனின் ஆறாம் ஆண்டில் வெளியிடப்பட்ட திருவாலங்காடு செப்பேட்டில் கொடுக்கப்பட்டுள்ள சோழர் வம்சாவளியை சுட்டிக் காட்டியுள்ளேன். அதில் சோழன் பரம்பரை மனுவில் ஆரம்பித்து ராமனின் வம்சாவளியுடன் ஒத்துப் போவதைக் காட்டியுள்ளேன். அந்த வம்சாவளியில் சிபியும், அவனுக்குப் பின்னாளில் துஷ்யந்தனும் வருகிறார்கள். துஷ்யந்தன்-சகுந்தலைக்குப் பிறந்த மகனே பரதன். அவனுக்குப் பிறந்த மகன் சோழ வர்மன் என்பவன். அவனே சோழ தேசத்தையும் சோழ வம்சத்தையும் உருவாக்கினவன் என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளேன்.

தொடர்ந்து சோழன் என்றால் என்ன அர்த்தம் என்று ஆராய்ந்துள்ளேன். சோழன் என்பதற்குத் தமிழில் பொருள் இல்லை என்பதையும் அது சமஸ்க்ருதத்திலிருந்து வந்தது என்பதையும் நிரூபித்துள்ளேன்.
இந்த ஆதாரங்களின் மூலம் சோழர்கள் வடக்கிலிருந்து வந்தவர்கள் என்பது தெளிவாகிறது. அவ்வாறு வந்தவர்களைத் தமிழன் என்பதா? வந்தேறி என்பதா? காணொளியைப் பார்க்கவும். பகிரவும்.


4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. 1. ராஜராஜன் தமிழன் தானா? ஆம் உண்மைத்தமிழன் DNA ஆய்வுப்படி முதல் குடிமகன் கள்ளன்
    சோழன் கிள்ளிவளவனக்கும் பீளிவளைக்கும் பிறந்த இளந்திரையன் தொண்டைமான் இனம் கள்ளன்.
    தொண்டைமான்கள் கள்ளர்கள். இவர்கள் உறவுமுறை பல்லவராயன் (பல்லவர்கள்)
    சிவந்தெழுந்த பல்லவராயன் உலா வில்
    சிவந்தெழுந்த பல்லவராயனின் முன்னோர்கள் இவன் பல்லவர் வழி வந்தவன் என்று கூறிக் கொள்கிறான். இவனது முன்னோர்களில் புராணங்களில் இடம் பெற்றவர்களும் குறிக்கப்படுகின்றனர் தமயந்தியின் சுயம்பரத்தில் கல்யாணப் பந்தலில் இவனது முன்னோன் ஒருவன் நளனோடு வந்து நின்றானாம். மற்றொருவன் பல்லவதேசத்துக்கு சீவகன் வந்த போது விருந்தளித்தானாம்
    புராணத்தலைவர்களைக் காட்டிலும் வரலாற்றுத் தொடர்புடைய முன்னோர்களே இந்நூலில் ;அதிகம் இடம் பெற்றுள்ளனர். தில்லையில் ஒருவன் பல்லவனீச்சரம் தோற்றுவித்தான். காவிரிப்பூம்பட்டித்தில் பல்லவனீச்சரம் தோற்றுவித்தான் மற்றொருவன். காடவர் கோனும், திருத்தொண்டத் தொகையில் இடம் பெற்ற கழற்சிங்கனும் இவனது முன்னோர்கள்
    பாடலிபுத்தில் அமரர் கோட்டம் களைத்த மகேந்திரனும் இவன் வழி முன்னோனெ கலிங்கத்துப் பரணியில் புகழ்பெற்ற கருணாகரத்தொண்டைமானும் ஓட்டக்கூத்தனால் பரணியில் பாடப்பெற்ற திருச்சிற்றம்பலமுடையான் பெருமானம்பி பல்லவராயனும்இவனது முன்னோர்கள் என்பதில் பெருமை கொள்கிறான்.
    இந்த பல்லவராயன் கள்ளன் புதுக்கோட்டை மானின் மைத்துனன் இன்று தொண்டைமானின் வாரிசாக இருப்பதும் இப்பல்லவராயரே
    இன்னம் அதிகமுள்ளது
    2. தஞ்சலா
    செவ்வந்திபுரி, திருச்சிராப்பள்;ளி – திரிசிரன் என்ற அசுரனின் பெயர் என்பது உண்மையா?
    3. மனுவில் ஆரம்பித்து ராமனின் – இந்தியமுழுமைக்குமே தமிழர்கள் ஆண்டார்கள் அங்கிருந்து நல்ல மண், வளமுள்ள இயற்கை சூழல் உள்ள இடத்தை தேடிதெற்கேவந்;தார்கள். அல்லது உங்கள் முன்னோரான பார்ப்பனர்களால் துரத்தப்பட்டனர்
    4. சோழன் – சோர் என்றால் திருடன் என்றுதானே அர்த்தம் திருடன் என்றால் கள்ளன் என்றுதானே வரும் கள்ளன் என்றால் மன்னன் என்று சீவக சிந்தாமணியில் உள்ளதே
    முசுகுந்தன் தமிழகத்தில் கருவூரில் ஆண்டவன், மனு, திருவாரூரை ஆண்டவன்

    ReplyDelete
  3. 1.பல்லவனிலிருந்து வந்தவன் சோழன் என்கிறீர்கள். அந்தப் பல்லவன் யார் என்று தெரியுமா? மகாபாரதத்தில் வரும் துரோணரது மகன் அஸ்வத்தாமன். அவன் பிராம்மணன். அவன் மகன் முதல் பல்லவன் என்று பல்லவர்கள் தங்களது கல்வெட்டில் எழுதி வைத்துளார்கள். காண்க, கசக்குடி கல்வெட்டு, அமராவதி தூண் கல்வெட்டு.
    அரசனால், அவன் காலத்தில் எழுப்பப்பட்ட கல்வெட்டுகளே ஆதாரங்கள். நீங்கள் காட்டும் தரவுகள் அல்ல.

    2.திரிசிரபுரம் வேறு தஞ்சாபுரி வேறு. தஞ்சாபுரியின் பெயர்க் காரணம் எங்கும் காணப்படவில்லை. தமிழில் வேர்ச் சொற்கள் எதுவும் பொருத்தமாக இல்லை. தஞ்சாவூர் மழை மிகுதி டெல்டா பகுதியாக உள்ளதால், அங்கு மழை வருகையைத் தெரிவிக்கும் தஞ்சலா பறவையை முன்னிட்டு அந்த நகரை நிர்மாணித்திருக்க வேண்டும். அது முதல் தஞ்சாவூர் உணவுக் கிடங்காக ஆகியிருக்க வேண்டும்.

    3.இன்னும் இரண்டு காணொளிகளை வெளியிட்டு விட்டேன். பார்க்கவும். அதில் 'எங்கள்' முன்னோர்களைப் பற்றியும் சொல்லியிருக்கிறேன்.
    பகுதி-1 http://jayasreesaranathan.blogspot.com/2020/02/1.html
    பகுதி-2 http://jayasreesaranathan.blogspot.com/2020/02/2.html
    இந்தியா முழுவதுமே தமிழர்கள் ஆண்டார்கள் என்கிறீர்கள். இந்த லிங்கில் உள்ள கட்டுரைகளையும் படியுங்கள். ஆராய்ச்சி நோக்கில் அணுகப்பட வேண்டிய விவரங்கள்.
    http://jayasreesaranathan.blogspot.com/2018/04/early-floods-at-southern-madurai.html

    4.சோழன் என்றால் சோர் என்பதற்கு ஆதாரம் என்ன? சோர் என்பது இந்தி. நீங்கள் சொல்லும் கள்ளன் க்ஷத்திரியம் விட்டவர்களது இரண்டாம் பரம்பரையில் வருபவர்கள். அது மனு சொன்னதுதான். அதில் 7 ஆவது பரம்பரை திராவிடன். மனு சொன்னதைத்தான் பிடித்துக் கொண்டுள்ளீர்கள்
    இந்தக் கட்டுரையும் படியுங்கள். http://jayasreesaranathan.blogspot.com/2012/02/who-is-dravida-mr-karunanidhi.html
    Ghallan என்பது கள்ளன் என்றானது. கிருஷ்ணன் ஜராசந்தனுடன் போர் புரியாமல் ஓடி வந்து விடவேதான் அவனைக் கள்ளன் என்கிறோம். குஜராத்தில் தாக்கூர் துவாரகா என்னும் இடத்தில் உள்ள கிருஷ்ணனுக்கு “ரண சோட் கிருஷ்ணா” என்றுதான் பெயர். போர்க்களத்திலிருந்து ஓடி வந்தவன் என்று பொருள்.

    ReplyDelete
  4. நன்றி சகோதரி நான் அந்த தொடுப்புகளைப் படித்துப்பார்த்து பிறகு எழுதுகிறேன்

    ReplyDelete