Monday, April 18, 2011

S.Ve. Shekar expelled by Thangkabalu.



சேகரு அண்ணே,
உன்ன பாக்க சொல்ல கஸ்டமா கீது அண்ணே.
இன்னாமா டமாஸ் காட்டிகினு இருந்தே,
இன்னிக்கி ஒன் பொயப்பே டாமாஸா பூட்ச்சே.
அம்மால ஆரம்பிச்சி அல்லாருக்கும் டிமிக்கி காட்ண.
இன்னிக்கி ஒனக்கே டிமிக்கி காட்டி டிஸ்மிஸு பண்டாங்களாமே.
இன்னா நாயம்பா இது?


ஒம் பொயப்பு வைக்கோ பொயப்பா பூடிச்சே.
வைகோக்காச்சும், தலீவான்னு கூவிக்கினு வர தொண்டனுங்க கீறாங்கோ.
அவங்க மூஞ்சப் பாத்து வைக்கோ தேத்திப்பாரு.
உனிக்கி ஆரு கீறாங்கோ நைனா?
சுப்புமணி சாமியாட்டம் தொண்டனுங்க இல்லாத தலிவனா கீறயே.
வைக்கோ அண்ணனாட்டம் தம்மாத்தூண்டு தொண்டனுங்கள  கூட்டிக்க வாணாமா?
உன்ன பாக்க சொல்ல ஒரு க்வாட்டரு அடிச்சி மன்ஸ தேத்திக்கணும் போல கீது நைனா.


நீ இன்னா செய்வ,
நீயும் சுத்தி சுத்தி வந்த.
ஏதாச்சும் கெலிச்சுதா?
இப்ப கீர்ரது காப்டனுதான்.
காப்டனு கால்ல போயி உளு உளுன்னேன். உளுந்தியா?
காப்டனாண்ட போனா ஒண்ணு பொட்டி கெடைக்கும், இல்லாங்காட்டி சீட்டு கெடைக்கும்.
இப்ப ரெண்டும் இல்ல.
இப்ப போயி அவர பாத்தின்னா
அவரு படா பேஜாராயிடுவாரு. அக்காங்.
காமெடி பார்ட்டிங்கன்னாலே அவரு  டென்ஸனாயிட்ராரு.
அப்டி ராங்கு பண்ணிபுட்டான் அந்த வடிவேலு கேப்மாரி.


வை ராஜா வைன்னு இன்னாமா மங்காத்தா ஆட்ன.
சிகாமணின்னு குந்திகினு இந்த பாலிடிக்ஸ் ஆளுங்கள இன்னாமா வாற்ன.
இப்ப ஒன்ன வச்சி இந்த ப்ளாகுகாரம்மா டமாஸ் பண்ற ரேஞ்சுக்குப் பூட்டியே.
நீ பேஜாரு ஆவாத நைனா.
நாங் கீறேன்.
படா படா ஐடியால்லாம் என்னாண்ட கீது. 
உறிமைக்கி குறல் கொடுப்போம்னு காங்க்ரஸுல ஒட்டிக்க.
அங்க கோஸ்டிக்கா பஞ்சம்.?
தன்ங்கபாலு ஒத்சான்னா, அப்பச்சி கீறான்.
இல்லாங்காட்டி வாசனு, கீசனுனு எத்தினி பேரு கீறானுங்கோ.
ஒரு அஞ்சு வர்ஸம் இப்படியே தாவிக்கினு இரு.
அப்பால பாக்கலாம்.


இல்லாங்காட்டி நம்ம பீஜேபீ கீற்து.
இன்னும் ரெண்டு வர்ஸத்ல ரஜினி அண்ணனும் பாலிடிக்ஸ்ல குத்சுருவாருன்னு பீஜேபீ தலீவரு சொல்லிகிறாரு.
ரஜ்னியை நம்பி பாலிடிக்ஸ்ல குதி நைனா, எங்கியோ பூடுவ.
இப்பைக்கி மன்ஸ தேத்திக்க.
எம் பொஞ்சாதிய இட்டாரேன்.
அது சொம்மா சூப்பரா ஒப்பாரி வச்சு பாட்டு கட்டும் பாரு.
அதக் கேட்டுக்கினே மன்ஸ தேத்திக்கலாம், இன்னா?



Related post:-

S.Ve.Shekar's latest drama!


13 comments:

  1. வி.வி.சி!

    தமிழ்ல இன்னும் நிறைய எழுதணும் நீங்க!

    ReplyDelete
  2. திவா ஸார் உங்கள ரொம்ப நாளா காணோம்? வருகை தந்து, கருத்து பதிந்ததற்கு ரொம்ப நன்றி. ’தமிழன் திராவிடனா?’ தமிழ் பதிவுகளைப் படிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
    http://thamizhan-thiravidana.blogspot.com/

    ReplyDelete
  3. Hey you are falling short of your own High Standards.

    Serious Writing about Real time issues are perhaps your Strength. Sarcasm and Comedy does not seem to be your Forte

    ReplyDelete
  4. குசும்புதான் உங்களுக்கு..:PP

    ReplyDelete
  5. சீரியஸான விஷயத்த, சீரியஸா பேசலாம். எஸ்.வீ. சேகர் பாலிடிக்ஸ்ல அடிக்கற லூட்டியப் பார்த்தா மெட்ராஸ் பாஷைல வார்ரணும் போல வேகம் வரது. என்ன செய்யறது!!

    Another thing. Serious writing is something, but that does not mean that we are always serious in mood. I used to say that I am always 20 years at heart and laugh out at smallest provocation. Sometimes நான் ஃபுல் ஃபார்ம்ல இருந்தேன்ன நல்லா வாரி விட்டிடுவேன். அவனவன் துண்டக் காணோம், துணியக் காணோம்னு ஓடணும். மெட்ராஸ் பாஷையை எஸ். வீ. சேகருக்குன்னு ஸ்பெஷலா வெச்சிருக்கேன். தேற்றாரா பார்க்கலாம்.

    ReplyDelete
  6. 100% i agree with you mami. Yenakkum serious flowla avloovaa istam kedaiyaathu, yellamey vedikkai & vinothangalthaan...:)

    ReplyDelete
  7. தக்குடு தாத்தா, நான் எழுதினத கண்ணாடி போட்டுண்டு படிங்கோ. எல்லாத்தையுமே வேடிக்கையா எடுத்துக்கணும்னு நான் சொல்லல.

    ReplyDelete
  8. ஜெய்ஷ்ரீ பாட்டி, நீங்க அப்பிடி சொன்னதா நானும் சொல்லலை, நீங்க பயங்கர சீரியஸ் பா(ர்)ட்டினு நேக்கு தெரியாதா??..:)))

    ReplyDelete
  9. தக்குடு, மனதளவில நான் 20 வயசுன்னு சொன்னப்புறமும், நீங்க என்ன மாமி ஆக்கிட்டீங்க. இப்போ பாட்டின்னு ப்ரொமோஷன் குடுக்கிறீங்கோ. இது அநியாயமா படல? லேடீஸ் எந்த விஷயத்துக்கு சீரியஸ் ஆவான்னு தெரிஞ்சுக்கணும். இல்லாட்டா தீவாளி என்ன, மாசப்பொறப்பு கூட சீந்தாது.

    ReplyDelete
  10. His comic skills and acting skills are really noteworthy, but I guess a person who roams to every party available without any ideology or political insight need not be sympathized for some particular reason. This man has switched from admk to dmk to congress, that too when a party is accused of thousands of crores of corruption,he had joined it. He deserves what he is now. Let him not join the BJP and make a fuss again.

    ReplyDelete
  11. ipdi corrupt aana party la lam serndha idhu dhan gadhi ! madam, when your blog emphasizes anti-corruption in many posts, sympathizing a ideology-less wealthy man who joins in a corrupt party seems contradictory.
    Regards.

    ReplyDelete
  12. //madam, when your blog emphasizes anti-corruption in many posts, sympathizing a ideology-less wealthy man who joins in a corrupt party seems contradictory.//

    No RKV,
    Don't you see I am teasing him in a derogatory language,i.e, Madras Bhashai?

    ReplyDelete
  13. yes,sarcastic, in fact i laughed aloud, on reading the creative madras bashai ..may be I was a bit impulsive when i wrote the previous comment..:)

    ReplyDelete