தமிழில்:- திரு டி.ஜி. ஸாரநாதன்
இந்தக் கட்டுரையின் முதலாம் பாகத்தில், வானிலை காரணிகளை கண்காணிப்பது பற்றிச் சொல்லப்பட்டது. அந்த கண்காணிப்புகள் சூர்ய மாதமான மார்கழி அல்லது சூரியன் பூராட நக்ஷத்திரத்தில் பிரவேசிக்கும் காலம் அல்லது மார்கசீருஷ மாதத்தில் சந்திரன் சுக்ல பக்ஷத்தில் பூராட நக்ஷத்திரத்தை கடக்கும் போது, ஆரம்பிக்க வேண்டும். இதைத் தொடந்து தமிழ் (சூர்ய) மாதம் வைகாசி வரையிலும் கண்காணிக்க வேண்டும். இவற்றில் முதல் நான்கு மாதங்கள், மார்கசீருஷத்திலிருந்து பால்குன மாதம் வரை , இந்தியாவின் பருவ மழைக் காலத்துடன் , அதாவது ஜூலை முதல் அக்டோபர் வரை, நேரடி சம்பந்தப் பட்டு இருக்கிறது. ஆகையால் மழை அளவை கணிக்க மிகக் கவனத்துடன் இந்த நான்கு மாதங்களிலும் வானிலைக் காரணிகளை கண்காணிக்க வேண்டும்.
சித்திரை மாதம் வந்த்தும், மற்ற கண்காணிப்புகள் ஆரம்பிக்கப்படுகின்றன.
இந்தக் கட்டுரையில் இராசி மண்டலத்தில் சூரியன் ஒவ்வொரு ராசியில் பிரவேசிப்பதும், மற்றும் சூரியன் ஆருத்ரா (திருவாதிரை) நக்ஷத்திரத்தில் பிரவேசிப்பதும் எவ்வளவு முக்கியம் வாய்ந்தது என்பதைக் காணலாம். இவை எல்லாவற்றையும் ஒருங்கு சேர அறிந்தால்தான் மழை அளவைச் சரியாகக் கணிக்க முடியும்.
1. முதன் முதலில் வருடத்தின் பெயரிலிருந்து, அந்த வருடத்திற்க்கான ஜோசிய கணிப்புக்களை சரி பார்க்க வேண்டும். பண்டைக் காலத்தில், இடைக் காட்டு சித்தர் என்ற மிகப் புகழ் வாய்ந்த ஜோசியரும், சித்தரும், கணிப்புக்களைக் கூறியிருக்கிறார். இவை பஞ்சாங்களிலும் ஜோதிட நூல்களிலும் கிடைக்கும். வருடாந்திர கணிப்புக்கள், எதிர் வரும் வருடத்தில் மழை கிடைக்கப் போகும் தன்மை, அளவு இவற்றை பரந்த அளவில் சொல்லும். உதாரணமாக, தற்போதுள்ள விஜய ஆண்டில் அபரிமிதமான மழை பொழியும் என்று கணிக்கப் பெற்றுள்ளது. நல்ல அறுவடை கணித்துள்ளபடியால், நல்ல மழை உறுதியாகிறது.
2, அடுத்ததாக, சூரியன், மேஷ ராசியில்,ரிஷப ராசியில், மிதுன ராசியில், கடக ராசியில் மற்றும் தனுர் ராசியில் எவ்வாறு பிரவேசிக்கிறான் என்பதை சரி பார்க்க வேண்டும். இவற்றை,பஞ்சாங்கங்களில் நவ (9) நாயகர்களும் அவர்களின் கணிப்புகளிளிருந்தும் அறியலாம். ஒன்பது பேர் இருந்தாலும், மழை அளவைப் பொருத்தவரை நான்கு நாயகர்களையே நாம் கவனிக்க வேண்டும். அவைகள் பின்வருமாறு:
- சூரியன் மேஷ ராசியில்: மந்திரி (நவ நாயகர்களில் ஒருவர்) - பொதுவான மழை கணிப்பு
- சூரியன் மிதுனத்தில் : அர்காதிபதி - விவசாயப் பொருள்களின் விலை மதிப்பு / கணிப்பு (மழை விவசாய பொருள்களின் உற்பத்தியை பாதிக்கிறது)
- சூரியன் கடக ராசியில்: ஸஸ்யாதிபதி - பயிர் விளைச்சல் கணிப்பு (மேல் சொன்ன அதே காரணங்களுக்காக)
- சூரியன் தனுர் ராசியில்: தான்யாதிபதி - தானியங்கள் உற்பத்தி கணிப்பு.
சூரியன் இந்த ராசிகளில் பிரவேசிக்கும் நாட்களை குறித்துக் கொள்ளவேண்டும். நாள் என்பது ஒரு சூர்யோதயந்திலிருந்து அடுத்த சூர்யோதயம் வரை. இந்த நாட்கள் திங்கள், வியாழன் , வெள்ளியாக இருந்தால், நல்ல மழையும், அமோக விளைச்சலையும் எதிர்ப்பார்க்கலாம்.
அந்த நாள் புதன் கிழமையாக இருந்தால், வேண்டாத காற்று வீசி மேகங்களை கலைத்த் விடும். இதனால், மழை அளவு குறைந்து, விளைச்சலும் குறைந்து, விலைவாசி எகிறும்.
இந்த நாட்கள் செவ்வாய், சனி, ஞாயிறு கிழமைகளாக இருந்தால், மிதமான மழையும், அதனால் தானியப் பற்றாக்குறையும் ஏற்ப்படும்.
இம்மாதிரி நான்கு ராசிகளிலும் உள்ள பலன்களை சரி பார்த்து, ஒவ்வொன்றுக்கும் கணிப்பை அறியலாம்.
இந்த வருஷமான விஜய ஆண்டுக்கு நல்ல மழை என்ற பலன் இருந்தாலும் கூட, இந்த விதியைப் பார்க்கும்போது, சூரியன் சனிக்கிழமையில் பிரவேசித்ததால், மழை மிதமாகவே இருக்கும். ஆனால், மற்ற காரணிகளையும் நாம் பார்க்க வேண்டும்.
இந்த வருடம், சூரியன் மிதுன ராசியில் ஒரு சனிக்கிழமை (ஆங்கில நாட்காட்டியின்படி) விடி காலை பிரவேசிக்கிறான். ஆனால் பஞ்சாங்கங்களின் படி, அந்த நேரம் முந்தின வெள்ளிகிழமையைச் சேர்ந்ததால், நல்ல மழை கணிக்கப்படுகிறது. அதனால் விலைவாசியையும் பாதிக்காது.
கடக ராசியில் சூரியன் பிரவேசிக்கும் நாள் செவ்வாய்க் கிழமை மதியம்.இது சாதகமான மழைக்கு உகந்ததல்ல.
சூரியன் தனுர் ராசியில் ஞாயிற்றுக்கிழமை நடு நிசியில் பிரவேசிப்பதால், இதுவும் நல்ல மழைக்கு உகந்ததல்ல.
ஆகையால், நான்கில் ஒன்று தான் நல்ல மழைக்கு சாதகமாக இருப்பதால், இந்த விதியின் படி, இந்த ஆண்டில் மிதமான அல்லது குறைந்த மழை பொழிவே இருக்கும்,.
3. அடுத்ததாக, எந்த நாளில் சாந்திர வருஷம் ஆரம்பிக்கிறது என்று பார்க்க வேண்டும். இது யுகாதி எனப்படும். சௌர (சூரிய அல்லது தமிழ் நாட்டு வழக்கப்படி) வருஷப்பிறப்புக்கு முன்னால் வரும் அமாவாசைக்கு அடுத்த நாளாகும். மேலே கூறிய அதே மழை பொழிவுக்கான நாட்களின் விதியை இங்கும் பார்க்க வேண்டும். இந்த ஆண்டு யுகாதி ஒரு வியாழக் கிழமை வந்ததால், நல்ல மழையை எதிர்ப் பார்க்கலாம்.
4. இதற்குப் பிறகு, நாம் சூரியன் ஆருத்ரா (திருவாதிரை) நக்ஷத்திரத்தில், பிரவேசிப்பதை பார்க்க வேண்டும். இது தான், இந்த விதிகளிலேயே மிக முக்கிய காரணாமாக எண்ணவேண்டும். இது ஆருத்ரா பிரவேசம் எனப்படும். இங்கு, பிரவேசிக்கும் நாள் தவிர இன்னும் கூடுதல் காரணங்களை பார்க்க +வேண்டும். அவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
பிரவேசிக்கும் நாள்: விதி மேலே கூறிய அதே நாட்கள்,அதே கணிப்பு!
இந்த வருடம், ஆருத்ரா பிரவேசம் சனிக்கிழமை விடிகாலையில் ஏற்படுகிறது. பஞ்சாங்க விதியின்படி, அது வெள்ளிக்கிழமை பின்னிரவு. ஆகையால், நல்ல மழை பொழிவு கணிக்கப்படுகிறது. ஆகையால், இது நல்ல மழைக்கு முக்கியமாகிறது.
பிரவேசிக்கும் போது திதி: 4 (சதுர்த்தி), 8 (அஷ்டமி), 9 (நவமி), 14 (சதுர்த்தசி) திதிகள் நல்ல மழைக்கு சாதகமானவை அல்ல. அமாவாசையும் குறைந்த மழையே கொடுக்கும். இந்த ஆண்டு ஆருத்ரா பிரவேசம் சதுர்தசி அன்று நிகழ்கிறது. அது சாதகமானது அல்ல.
பிரவேசிக்கும் போது நக்ஷத்திரம்: இங்கு நக்ஷத்திரம் என்பது, ஆருத்ரா பிரவேசத்தின் போது சந்திரன் கடக்கும் நக்ஷத்திரம். பரணி, திருவாதிரை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை நக்ஷத்திரங்கள் நல்ல மழைக்கு சாதகமானவை அல்ல. இந்த ஆண்டு அந்த நக்ஷத்திரம் அனுஷமாக இருப்பதால், நல்ல மழைக்கு சாதகமே!
பிரவேசத்தின்போது யோகம்: இதைப் பஞ்சாங்கங்களிளிருந்து தெரிந்து கொள்ளலாம். அதிகண்டம் , சூலம், கண்டம், த்ருவம், வியாகதம், வ்யதீபாதம், பிராம்ஹம், மாஹந்திரம் , வைத்ருதி யோகங்கள் சாதகமானவை அல்ல. இந்த ஆண்டுஆருத்ரா பிரவேசம் நிகழும் யோகம் ஸித்தம் என்பதால், நல்ல மழைக்கு சாதகமானது.
பிரவேசத்தின்போது கரணம்: விஷ்டி, சகுனி, சதுஷ்பாதம், நாகவம், கிம்ஸ்துக்னம் கரணங்கள் சாதகமானவை அல்ல. இந்த வருடம் அந்த சமயத்தில், தைத்துல காரணமிருப்பதால், நல்ல மழைக்கு அறிகுறி.
பிரவேசத்தின்போது லக்னம்: இதை ஜோதிட மென்பொருளால் அறியலாம். ரிஷபம், கடகம், துலா, மீனம் லக்னங்கள் நல்ல மழைக்கு சாதகம். கன்னி லக்னம் சூறாவளிக்கு அறிகுறி. மற்ற லக்னங்கள் நல்ல மழைக்கு பாதகமே! லக்னங்கள் இடத்திற்கு தகுந்த மாதிரி சரி பார்க்க வேண்டும். சென்னையைப் பொறுத்த வரையில், அன்று ரிஷப லக்ன மாதலால், நல்ல மழையை எதிர்ப்பார்க்கலாம்.
பிரவேசத்தின்போது காலம்: இரவா அல்லது பகலா என்று பார்க்கவும். அந்திநேரம் அல்லது நடுநிசி என்றால் நல்ல மழை பெய்யும். பகல் நேரம் அல்லது உச்சி வேளை என்றால், குறைந்த மழை பெய்யலாம். இரவு வேளை என்றால் மிதமான மழைக்கு வாய்ப்பு உண்டு. இவ்வருடம், ஆருத்ரா பிரவேசம், நடுநிசிக்குப் பிறகு பின்னிரவில் எற்ப்படுவதால், மிதமானதைக் காட்டிலும் அதிக மழை பெய்யலாம்.
பிரவேசத்தின் போது சந்திரனின் இருப்பிடம்: சந்திரன் இருப்பிடம், தண்ணீர் சம்பந்தப்பட்ட நக்ஷத்திரம் , இராசி, லக்னம், நவாம்சமாக இருந்தால், நல்ல மழையை எதிர்ப் பார்க்கலாம்.
நீர் சம்பந்த நக்ஷத்திரங்கள்: ரோகிணி , மிருகசீர்ஷம்,புஷ்யம், உத்திரம், பூராடம், உத்திராடம், உத்திரட்டாதி, ஹஸ்தம், அனுஷம், திருவோணம், அவிட்டம், சதயம், ரேவதி.
நீர் சம்பந்த இராசிகள்: கடகம், விருச்சிகம், மகரம், மீனம்.
இவையெல்லாம் பார்த்த பிறகு, மழை பொழிதலுக்கான கிரகங்களின் சஞ்சாரங்களைப் பார்க்க வேண்டும். அவற்றை அடுத்த பகுதியில் பார்ப்போம்.
(தொடரும்)
ஆங்கிலத்தில் பகுதி 1 :-Rainfall prediction – Part 1 (Pre-rainy season observation & GarbOttam)
ஆங்கிலத்தில் பகுதி 2 :- Rainfall prediction – Part 2 (Solar ingress)