Saturday, March 11, 2023

Dice Game in the Mahabharata: how was it played? Is Mr. Stalin right in blaming it? (My talk in ViyanTamil Channel)

The dice game in the Mahabharata became the talking point of the Chief Minister of Tamilnadu and some of his partymen, in their response to the Governor of Tamilnadu returning the Bill on banning the online Rummy game. 

Paying no attention to the true causes of the return of the Bill, which are legal in nature, the Chief Minister chose to blame the Governor stating that since gambling was featured in the Mahabharata, the Governor didn't want to sign the Bill that is aimed at banning the online Rummy game. 

This absurd accusation is disputed by me in this talk to #ViyanTamil by showing how the dice game was played as a game of skill in the olden days, by citing evidences from Nala's history and the Mahabharata. When the game was exploited for personal gains, it brought untold misery. In the course of this talk I have explained how the game was played in the Mahabharata, based on the available inputs.



Related article:

MK Stalin: Does the Governor refuse to ban online Rummy because gambling was featured in the Mahabharata?

மகாபாரதத்தில் சூதாட்டம் இருக்கிறது என்பதால் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய மறுக்கிறார்களா? மு.க.ஸ்டாலின்!

சென்னை: ஆன்லைன் ரம்மியை தடை செய்ய ஒரு சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றி அனுப்பியதற்கு கூட, இங்கே ஆளுநராக இருப்பவர் ஒப்புதல் அளிக்கவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அதேபோல் மகாபாரதத்தில் சூதாட்டம் இருக்கிறது என்று நினைத்து தடை செய்ய மறுக்கிறார்களா என்றும் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களால் தமிழ்நாட்டில் தொடர்ந்து தற்கொலை சம்பவங்கள் அதிகரித்ததால் கடந்த அதிமுக ஆட்சியில் 2020ம் ஆண்டு நவம்பரில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. 2021 பிப்ரவரியில் பேரவையில் சட்டம் இயற்றப்பட்டது.

அச்சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அச்சட்டம் செல்லாது என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி தீர்ப்பளித்தது.

இதையடுத்து மீண்டும் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்காக கடந்த ஆண்டு நவம்பா் 3ம் தேதி அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. இதைத் தொடா்ந்து, நவ.5ம் தேதி சட்டசபை கூட்டப்பட்டு, மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அதேசமயம், அவசர சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டது. அரசாணை மட்டும் பிறப்பிக்கப்படாமல் இருந்தது. ஆளுநா் கோரியதன் அடிப்படையில், இந்த மசோதா தொடா்பான உரிய விளக்கங்களை அளிக்கப்பட்டது.

ஆனாலும் ஆளுநர் ஆர்என் ரவி ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இதற்கு காலதாமதம் செய்ததால் கடந்த மாதமே அந்த தடைச் சட்ட மசோதா காலாவதியாகிவிட்டது. சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து ஆன்லைன் ரம்மி ஆப்களில் பணம் செலுத்தி விளையாடுவது தவிர்க்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தடைச் சட்டம் மசோதா காலாவதியாகி விட்ட நிலையில் தற்போது சட்டம் நிறைவேற்றப்படாததால் மீண்டும் ஆன்லைன் ரம்மி சூதாட்டங்கள் அதிகரித்துள்ளன. இதனால் ஏராளமானோர் சூதாட்டத்திற்கு அடிமையாகி பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. அண்மையில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழந்ததால், தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 40 கடந்தது.

மகாபாரதத்தில் சூதாட்டம் 

இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற முதலமைச்சர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காதது பற்றி மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். மத்திய அரசை கடுமையாக விமர்சித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ஆன்லைன் ரம்மியை தடை செய்ய ஒரு சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றி அனுப்பினோம். அதற்கு கூட இங்கே ஆளுநராக இருப்பவர் ஒப்புதல் அளிக்கவில்லை. மகாபாரத்தில் சூதாட்டம் இருக்கிறது என்று நினைத்து தடை செய்ய மறுக்கிறார்களா? என்று கேள்வி எழுப்பினார்.