இராமானுஜாசரியார் வாழ்க்கை நிகழ்ச்சிகளை உண்மை என்று நிரூபிக்கும் நூல்.
அவர் சோழ அரசன் கொடுத்த தொந்திரவால் நாட்டை விட்டு வெளியேறியது உண்மை என்பதையும், அந்த அரசன் யார் என்பதையும், கல்வெட்டு முதலான ஆதராங்கள் மூலம் இந்த நூல் நிரூபிக்கிறது.
அவ்வாறு வெளியேறிய அவர் எத்தனை காலம் நாட்டுக்கு வெளியே இருந்தார் என்பதையும், அந்த காலக் கட்டத்தில் மைசூர் அருகே மேல்கோட்டை என்னுமிடத்தில், முகலாயர் படையெடுப்பால் அழிந்த கோயிலைப் புதுப்பித்ததையும், தில்லிக்குச் சென்று, முகலாயர் வசம் இருந்த மேல்கோட்டை உத்சவ மூர்த்தியைத் திரும்பப் பெற்றார் என்பவை முதலான பல சரித்திர விவரங்களையும், ஆதாரங்களுடன் விளக்குகிறது இந்த நூல்.
மேலும், சிதம்பரத்தில், கோவிந்தராஜப் பெருமானை கடலில் தூக்கி எறிந்த சோழ அரசன் யார் என்பதையும், அங்கிருந்த உத்சவ மூர்த்தியைக் காப்பாற்றி திருப்பதில் இராமானுஜர் பிரதிஷ்டை செய்த வரலாற்றையும் சான்றுகளுடன் இந்த நூல் நிரூபிக்கிறது.
பின்னூட்டங்களாகக் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் ஜாதிச் சண்டைகள் உண்டான வரலாற்றையும், திப்பு சுல்தானால், மண்டையம் ஐயங்கார்கள் கொல்லப்பட்ட விவரத்தையும் தருகின்றன.