Wednesday, August 26, 2015

Jala-nadi (detecting underground water veins by means of trees) (Tamil)


This is in continuation of the blog Lost lakes of Chennai.  In olden days, lakes and water bodies were dug based on the detection of the underground water veins using certain trees that grow naturally near the under water sources. Details of these trees have been given in chapter 54 of Brihad Samhita written by Varahamihira. The list of such trees prepared by me from Brihad Samhita is given in this blog. This list is in Tamil. The names of trees in English will be posted next.

Related posts:





ஜலநாடிகள்.


காட்டு அரளி /
நீர் வன்னி / காட்டல்லரி               




புரச மரம்/ பலாச மரம் பூக்கள்


எண்
மரத்தின் பெயர்
ஜலநாடி      

1
காட்டு அரளி () நீர் வன்னி () காட்டல்லரி (மலையாளப் பெயர்).

மேற்கே 4-1/2 அடி தொலைவில் பூமிக்கடியில்  ஒண்ணரை மனித ஆழத்தில் (9 அடி) மேற்கு நோக்கி நீரோட்டம். (தேரைகள் தென்படும்)
2
நாவல் மரம்
வடக்கே 4.1/2 அடி தொலைவில் 2 மனித ஆழத்தில் (12 அடி) கிழக்கு நோக்கி நீரோட்டம். (தேரைகள் தென்படும்)
3
நாவல் மரம் + அதன் கிழக்கே புற்று
புற்றுக்குத் தெற்கில், 4-1/2 அடி தொலைவில், 2 மனித ஆழத்தில் (12 அடி) நீரோட்டம்.
4
அத்தி மரம்
மேற்கே 4-1/2 அடி தொலைவில் 2.1/2 மனித ஆழத்தில் (15 அடி) நீரோட்டம். (பாம்புகள் தென்படும்).
5
மருத மரம் +அதன்  வடக்கில்  புற்று.
புற்றுக்கு மேற்கே, 4-1/2 அடி தொலைவில், 3-1/2 ,மனித ஆழத்தில் (21 அடி) நீரோட்டம்.
6
புற்றுக்கு மேல் நொச்சிச் செடி வளர்ந்திருந்தால்
புற்றுக்குத் தெற்கே 4-1/2 அடி தொலைவில் 2-1/4 மனித ஆழத்தில் (13-1/2 அடி) நீரோட்டம்.
7
இலந்தை மரம் + அதன் கிழக்கில் புற்று
மரத்துக்கு மேற்கே 3 மனித ஆழத்தில் (18 அடி) நீரோட்டம். (பல்லிகள் தென்படும்)
8
இலந்தை மரம் + முறுக்கு (பலாச மரம் / புரச மரம்) ஒரே இடத்தில் அருகருகே காணப்பட்டால் 
அவற்றுக்கு மேற்கே 3-1/4 மனித ஆழத்தில் (21 அடி) நீரோட்டம். (தவளை, தேரை தென்படும்)
9
வில்வ மரம் + அத்தி மரம் அருகருகே காணப்பட்டால்.
அவற்றுக்குத் தெற்கே 4-1/2 அடி தொலைவில் 3 மனித ஆழத்தில் (18 அடி) நீரோட்டம். (தேரைகள் தென்படும்)
10
மஞ்சணை () குங்கும மரம்.
மரத்துக்குக் கிழக்கே 4-1/2 அடி தொலைவில் நீரோட்டம், தெற்கு நோக்கிச் செல்லும்.
11
தான்றி, தானி, தான்றிக்காய் மரத்தடியில் தெற்குப் புறமாகப் புற்று  

புற்றுக்குக் கிழக்கே 1-1/2 மனித ஆழத்தில் (9 அடி) நீரோட்டம்.
12
தான்றி, தானி, தான்றிக்காய் மரத்திலிருந்து 1-1/2 அடி தள்ளி புற்று இருந்தால்

புற்றுக்கு வடக்குப்புறம் 4-1/2 மனித ஆழத்தில் (27 அடி) நீரோட்டம்
13
சிகப்பு மந்தார மரத்துக்கு வட கிழக்கே தர்ப்பைப் புல் முளைத்த புற்று இருந்தால்
புற்றுக்கும், மரத்துக்கும் நடுவில் 4- ½ மனித ஆழத்தில் (27 அடி) நீரோட்டம். பாம்புகள் தென்படும்.
14
மூக்கம்பாலை / எடகுலபலா (தெலுங்கில்) மரத்தைச் சுற்றி புற்று இருந்தால்
மரத்துக்கு வடக்கே 5 மனித ஆழத்தில் (30 அடி) நீரோட்டம்
15
பொதுவாகவே ஒரு மரத்தடியில் தேரை / தவளை வாழ்ந்தால்
மரத்துக்கு 1-1/2 அடி தொலைவில் 4-1/2 மனித ஆழத்தில் (27 அடி) நீரோட்டம் இருக்கும்.
16
முட்கொன்றை மரத்தின் தெற்கில் பாம்பு வளை இருந்தால்
பாம்பு வளைக்குத் தெற்கில் 3 அடி தொலைவில் 3-1/2 மனித ஆழத்தில் (21 அடி) நீரோட்டம்.
17
காட்டு இலுப்பை மரத்துக்கு வடக்கில் பாம்பு வளை இருந்தால்
பாம்பு வளைக்கு மேற்கில் 7-1/2 அடி தொலைவில் 7-1/2 மனித ஆழத்தில் (45 அடி) நீரோட்டம். கிழக்கு நோக்கி நீரோட்டம் செல்லும். பாம்புகள் தென்படும்
18
திலகபுஷ்பம் எனப்படும் மயிலெள்ளு என்னும் மரத்துக்குத் தெற்கே தர்பைப் புல்லும், அருகம் புல்லும் வளர்ந்துள்ள புற்று இருந்தால்

புற்றுக்கு மேற்கில் 5 மனித ஆழத்தில் (30 அடி) கிழக்கு நோக்கி ஓடும் நீரோட்டம்.
19
கடம்ப மரத்துக்கு மேற்கில் பாம்பு வளை
பாம்பு வளைக்குத் தெற்கில் 4-1/2 அடி தொலைவில் 5-3/4 மனித ஆழத்தில் (34-1/2 அடி) நீரோட்டம். தேரைகள் தென்படும்.
20
பனை மரத்தைச் சுற்றி புற்று எழும்பியிருந்தால்
மரத்துக்கு மேற்கே 9 அடி தொலைவில் 4 மனித ஆழத்தில் (24 அடி) நீரோட்டம்.
21
விளாமரத்துக்குத் தெற்கே பாம்பு வளை
பாம்பு வளைக்கு வடக்கில் 10-1/2 அடி தொலைவில், 5 மனித ஆழத்தில் (30 அடி) நீரோட்டம். பாம்புகள் தென்படும்.
22
மந்தார மரத்துக்கு வடக்கே இலந்தை மரம் அல்லது பாம்பு வளை இருந்தால்
இலந்தை மரம் அல்லது பாம்பு வளைக்குத் தெற்கே 9 அடி தொலைவில் 3-1/2 மனித ஆழத்தில் (21 அடி) நீரோட்டம்.6 அடி ஆழத்தில் தெற்கு நோக்கி ஓடும் நீரோட்டமும், 21 அடி ஆழத்தில் கிழக்கு நோக்கி ஓடும் நீரோட்டமும் தென்படும்.
23
மஞ்சள் பயிருக்கு வடக்கில் புற்று தென்பட்டால்
புற்றுக்குக் கிழக்கே 4-1/2 அடி  தொலைவில், 5-3/4 மனித ஆழத்தில் (34-1/2 அடி) நீரோட்டம்.
இரண்டு மட்டங்களில் நீரோட்டம் இருக்கும்.
24
இயற்கையாகவே வெட்டி வேர், அருகம் புல் ஆகியவை ஓரிடத்தில் அடர்த்தியாக வளர்ந்திருந்தால்
அதே இடத்தில் ஒரு மனித ஆழத்தில் (6 அடி) நீரோட்டம்.
25.
பாடக்கிழங்கு, நரிவளை ஆகிய செடிகள் தென்பட்டால்
அவற்றுக்குத் தெற்கே 3 மனித ஆழத்தில் (18 அடி) நீரோட்டம்.
26
பணிச்சை, வாகை (ஜலவாகை) அசோக மரம், துத்திக் கீரை இயற்கையாகவே நன்கு வளர்ந்து, புற்றுக்களால் சூழப்பட்டிருந்தால்
இவற்றுக்கு வடக்கில் 4-1/2 அடி தொலைவில் 4-1/2 மனித ஆழத்தில் (27 அடி) நீரோட்டம்.
27
கண்டங்கத்திரி செடி முள்ளில்லாமலும், வெள்ளைப் பூக்களுடனும் காணப்படுதல்
அதே இடத்தில் 3 மனித ஆழத்தில் (18 அடி) நீரோட்டம்.
28
சரகொன்னை மரம் நன்கு வளர்ந்திருந்தால் அல்லது பலாச மரம், வெள்ளைப் பூக்களுடன் வளர்ந்திருந்தால்
மரத்துக்கு வடக்கில் 3 அடி தொலைவில் 3 மனித ஆழத்தில் (18 அடி) நீரோட்டம்.
29
கமுகு மரத்துக்கு வடக்கில் பாம்பு வளை
பாம்பு வளைக்குத் தெற்கில் 10 மனித ஆழத்தில் (60 அடி) நீரோட்டம்
30
செம்மரம் எனப்படும் மலம்புலுவம் மரத்துக்கு மேற்கில் பாம்பு வளை
பாம்பு வளைக்குத் தெற்கில் 4-1/2 அடி தொலைவில் 12 மனித ஆழத்தில் (72 அடி) மேற்கு நோக்கி நீரோட்டம்
31
இலந்தை மரமும், செம்மரமும் ஒன்றாக ஓரிடத்தில் காணப்பட்டால்
மரங்களுக்கு மேற்கில் 4-1/2 அடி தொலைவில், 16 மனித ஆழத்தில் (96 அடி) நீரோட்டம். இரண்டு மட்டங்களில் நீரோட்டம். தேள் தென்படும்.
32
இலந்தை மரமும், கமுகு மரமும் ஒன்றாக ஓரிடத்தில் காணப்பட்டால்
மரங்களுக்கு மேற்கில் 4-1/2 அடி தொலைவில், 19 மனித ஆழத்தில் (114 அடி) நீரோட்டம். வட கிழக்கு திசையில் நீரோட்டம்.
33
தர்ப்பையும், அருகம் புல்லும் வெளிர் நிறமாக அமைந்து புற்றின் மீது வளர்ந்திருந்தால்
அதே இடத்தில் 21 மனித ஆழத்தில் (126 அடி) நீரோட்டம்.
34
கடம்ப மரமும், அருகில் அருகம் புல்லுடன் கூடிய புற்றும் இருந்தால்
மரம் அல்லது புற்றுக்கு மேற்கில் 4-1/2 அடி தொலைவில், 25 மனித ஆழத்தில் (150 அடி) நீரோட்டம்.
35
செம்மரத்தைச் சுற்றி 3 புற்றுகள் இருந்தால்
வடக்கில் 4 அடி தொலைவில் 40 மனித ஆழத்தில் (240 அடி) நீரோட்டம்.
36
வன்னி மரத்தில் ஆங்காங்கே முடிச்சுகள் இருந்தும், மரத்துக்கு வடக்கில் புற்றும் இருந்தால்
புற்றுக்கு மேற்கில் 7-1/2 அடி தொலைவில். 50 மனித ஆழத்தில் (300 அடி) நீரோட்டம்.
37
பல புற்றுகள் கூட்டமாக அமைந்தும், அவற்றுக்கு நடுவில் உள்ள புற்று வெளிர் நிறமாகவும் இருந்தால்
அதே இடத்தில் 55 மனித ஆழத்தில் (330 அடி) நீரோட்டம்.
38
பலாச மரமும், வன்னி மரமும் அருகருகே ஒன்றாக வளர்ந்திருந்தால்
மரங்களுக்கு மேற்கே 60 மனித ஆழத்தில் (360 அடி) நீரோட்டம். பாம்புகள் தென்படும்.
39
வன்னி மரம் வெளிர் நிறமாக இருந்து, அதில் முட்கள் இருந்தால்
மரத்துக்குத் தெற்கே 75 மனித ஆழத்தில் (450 அடி) நீரோட்டம்
40
ஆல மரமும், அரச மரமும் அருகருகே ஒன்றாக வளர்ந்திருந்தால்
மரங்களுக்கு வடக்கில் நீரோட்டம்
41
ஆல மரம், அத்தி மரம், பலாச மரம் ஆகியவை அருகருகே வளர்ந்திருந்தால்
மரங்கள் இருக்கும் இடத்துக்கடியில் நீரோட்டம்.
42
பல புற்றுகள் அமைந்து, அவற்றின் நடுவில் இருக்கும் புற்று உயரமாக வளர்ந்திருந்தால்
அந்த இடத்துக்கடியில் நீரோட்டம்.
43
பிரம்புச் செடி ஓரிடத்தில் இயற்கையாக வளர்ந்திருந்தால்
அதற்கு வடக்கில் 4-1/2 அடி தொலைவில் தோண்டினால் நல்ல நீரோட்டம்.
44
ஏழு இலைகள் கொண்ட விசிறி வாழை இயற்கையில் வளர்ந்து அதன் அருகில் புற்றும் இருந்தால்
அதற்கு வடக்கில், வடக்கு நோக்கி நீரோட்டம்.
45
பனை மரம் அல்லது தென்னை மரத்தைச் சூழ்ந்து புற்று கட்டியிருந்தால்
மரத்துக்கு மேற்கில் நீரோட்டம்.

46
இரட்டை முடியுடன் பேரிச்சை மரம் இயற்கையாக வளர்ந்திருந்தால்
அதன் மேற்கில் 3 அடி தொலைவில் 22-1/2 அடி ஆழத்தில் நீரோட்டம்.
47
ஆமணக்கு, பிரண்டைச் செடிகள் இயற்கையில் ஓரிடத்தில் நன்றாக வளர்ந்திருந்தால்
அவற்றுக்கு வடக்கில் 4-1/2 அடி தொலைவில் நீரோட்டம்.
48
வேப்ப மரம், நெல்லி மரம்
இவற்றுக்கு அருகே வடக்கில் நீரோட்டம்.
49
புங்க மரத்துக்குத் தெற்கில் பாம்பு வளை
பாம்பு வளைக்குத் தெற்கில் 3 அடி தொலைவில், 3-1/2 மனித ஆழத்தில் (21 அடி) நீரோட்டம்.
50
பொதுவாகவே ஒரு மரத்தைச் சுற்றி புற்று கட்டியிருந்தால், அந்த இடத்தில் நிலத்தடி நீரோட்டம் இருக்கிறது என்று அர்த்தம்.






தான்றிக் காய்        



முட்கொன்றை