சோவும் கடைசி எபிசோடில் யாருக்கோ மெசேஜ் தந்ததைப் புரிந்துக் கொள்ள முடிந்தது. சில விஷயங்கள சரியாகத் தரவில்லை என்ற பர்சனல் கருத்து இருந்தாலும் அவற்றைப் பற்றி இப்பொழுது எழுதப் போவதில்லை. நான் சொல்ல வருவது இந்த பார்ப்பான், அந்தணன் போன்ற சொற்களுக்கான உண்மைப் பொருளை எபிசோடில் சோ அவர்கள் சொல்லவில்லை. அவற்றைச் சொல்லி விடுகிறேன்.
சூடாமணி நிகண்டு சொல்லும் பொருள்:
பார்ப்பான் : வேதங்களைப் பார்ப்பவன்.
அந்தணர்: 'வேதாந்தத்தை அணவியவர்" (நச்சினார்க்கினியார் சொன்னது)
அந்தணர்: அழகிய தண்ணளியுடையவர்.
இதன் மூலம் - இந்த எபிசொட் மூலம், எதற்காக பிராமணன் என்று தெரிந்து கொண்டு,
பாம்பைப் பார்த்து மட்டும் பயப்படட்டும்.
பாம்பைப் பார்த்தாவது பயப்படட்டும் -
இல்லை நாக தோஷம் வந்து விடும்:)
**********************
http://idlyvadai.blogspot.com/2009/07/blog-post_05.html
எங்கே பிராமணன்?
ஏற்கெனவே துக்ளக்கில் தொடராக வந்த 'எங்கே பிராமணன்' புத்தகமாகவும் வெளிவந்திருக்கிறது(மொத்தம் 11 பதிப்பு). கிடத்தட்ட 5 மாதங்களாக வந்த 'எங்கே பிராமணன்' தொடர் ஜெயா டிவியில் போன வாரம் நிறைவடைந்தது.
சீரியலில் வெறும் கதை மட்டுமே சொல்லிக்கொண்டு போகாமல், இடையிடையில் சோவிடமே கேள்விகள் கேட்டு ஹிந்துயிஸம், மதங்கள், கடவுள் நம்பிக்கை, சம்பிரதாயங்கள், சடங்குகள், அதன் அர்த்தங்கள், மநுஸ்மிருதி மற்றும் பல்வேறு விஷயங்களை இந்த தொடர் தொட்டு சென்றது. சோ அளித்த விளக்கங்கள், எதார்த்தமாகவும் அறிவுபூர்வமாகவும் இருந்தது தமிழ் சீரியலுக்கு புதுசு. புதிய டிரெண்ட் செட்டர்.
"பிராமணன் வடகலைப்பார்ப்பான்
தென்கலைப்பார்ப்பான்
எப்பார்ப்பான் ஆனாலும்
தமிழன் தலையைத் தடவப் பார்ப்பான்"
என்றும் சோ அய்யர்வாள் என்று எழுதி தங்கள் டென்ஷனை குறைத்துக்கொண்டார்கள். ( அவர்கள் பிஸினஸ் அவர்களுக்கு )
"எங்கே பிராமணன்" தொடர் வெற்றிகரமாக போனதற்கு "எதற்காக பிராமணன்?" ( எதற்காக பார்ப்பான் என்று வைத்திருக்க வேண்டும், மறந்துவிட்டார்கள்) என்று பகுத்தறிவாளர் கழகம், தி.கவினரும் சேர்ந்து மதுரையில் தொண்டை கிழிய இரண்டு மணி நேரம் பேசினார்கள்.
டோண்டு அவர்கள் எல்லா எபிசோடையும் கவர் செய்து வீடியோ லிங்க் தந்தது என் போன்ற லேட்டாக வீட்டுக்கு போகும் தர்ப்பைப்புல் கூட்டதுக்கு உபயோகமாக இருந்தது என்பதை குறிப்பிட வேண்டும்.