Wednesday, January 24, 2018

வைரமுத்துவும், முடித்து வைக்கப்பட வேண்டிய ஆண்டாள் ஆராய்ச்சியும்.


ஆண்டாளின் புகழ் பாட ஆசைப்பட்டவைரமுத்து அவர்கள் மூன்று மாதங்கள் ஆண்டாளை நான் ஆராய்ச்சி செய்து ஆய்வுக் கட்டுரைகளைத் திரட்டியது பிழையா?” என்று கேட்டுள்ளார். ஆராய்ச்சியே செய்யத் தெரியாமல் இவர் ஆராய்ந்ததுதான் பிழை. ஆராய்ந்தேன் என்கிறாரே இவர்  எதை ஆராய்ந்தார்? ஆண்டாளின் தமிழையா, அல்லது ஆண்டாள் வரலாற்றையா? இரண்டையுமே என்றால், ஆராய்ச்சிக்கான வழி முறையின்படி இவர் ஆராய்ந்தாரா?

எது ஆராய்ச்சி?

தமிழாராய்ச்சி என்றால் அதற்கு இலக்கணம் வகுத்தாற்போல் ஆராய்ந்தவர் டாக்டர்  உ.வே.சா. அவர்களே. அவர் எழுதிய எந்தப் புத்தகத்திலும் நூலாராய்ச்சி இடம் பெற்றிருக்கும். ஒரு நூலென்று எடுத்துக் கொண்டால் அதில் இடம் பெற்றுள்ள எல்லாவிதமான சொற்கள், கருத்துக்கள் ஆகியவற்றைத்  திரட்டி, அவற்றுக்கு ஒப்புமையாக பிற நூல்களில் சொல்லப்பட்டுள்ளவற்றையும் திரட்டி  ஒப்பு நோக்குவார். அவற்றைப் பற்றி முற்கால உரையாசிரியர்கள் சொன்னவற்றையும்அந்த நூல் எழுதப்பட்ட சம கால மற்றும் சங்க கால நூல்களையும் கொண்டு ஆராய்வார். அதன் மூலம்  தெரிய வரும் வரலாற்றுச் செய்திகளையும், நூலில் இடம்பெற்றுள்ள செய்திகளது வரலாற்றுத் தன்மையையும் எடுத்துக் காட்டுவார்.

உதாரணத்திற்கு வைரமுத்து, சங்க காலப் பெண் புலவர் வெள்ளி வீதியாரை ஆண்டாளுடன் ஒப்பிடுகிறார். வெள்ளி வீதியார் அவர்களைப் பற்றி குறுந்தொகையில் உ.வே.சா. அவர்கள் அருமையாக ஆய்ந்துள்ளார். ஆனால் வைரமுத்து சொன்னது என்ன? சங்கப்பெண்பால் புலவர் வெள்ளி  வீதியார் எழுதிய அகப்பொருள் பாடல்கள் மரபு  மீறல் என்று சொல்லிவிட்டு,  அதே சங்கத் தமிழில் முல்லைத் திணையையும், அகப்பொருளையும் பாடிய ஆண்டாளுக்கு மட்டும், சங்க இலக்கியத்தில் பெண்களுக்கு இல்லாத விடுதலையும், துணிச்சலும், சுதந்திரமும் வாய்த்தது எப்படி என்று ஆய்வுலகம் ஆச்சரியப்படுகிறது என்கிறார்.

சங்கத்தமிழில் அகம் பாடுவது மரபு மீறலா? அதற்குத் துணிச்சலும், சுதந்திரமும் வேண்டுமா? வெள்ளி வீதியார் பாடியது மரபு மீறல் என்றால் அவருக்கும், அவரது பாடல்களுக்கும் சங்கப்பலகையில் அங்கீகாரம் கிடைத்தது எப்படி? அதே தமிழில் அதே அகப்பொருளைப் பாடிய ஆண்டாளுக்கு, ஆழ்வார்களுக்கிடையே  இடம் கிடைத்தது எப்படி? அவள் பாடியவை வேதமனைத்துக்கும் வித்து என்ற அங்கீகாரம் கிடைக்கப்பெற்றது எப்படி? இவற்றை மட்டுமாவது வைரமுத்து ஆராய்ந்திருந்தால், இவர் பிழை என்று சொல்லும் மாபாதகத்தைச் செய்திருக்க மாட்டார். ஆண்டாள் அருளிய சங்கத் தமிழ்ப் பாடல்களை, சங்க காலப் பாடல்களோடும், சங்க இலக்கணத்துடனும் ஒப்பீடு செய்திருப்பாரே தவிர, இன்றைய கால சமூகக் கேள்வியாகப் பார்த்திருக்க மாட்டார்.

அவர் சங்க காலப் பாடல்களுடன் ஒப்பீடும் செய்யவில்லை, ஒப்புடைய சங்கத் தமிழ்ப் பாடல்களையும்  அவர் அறிந்திருக்கவில்லை என்பதற்கு முழு முதல் உதாரணம், சர்ச்சைக்கிடமான அவரது பேச்சின் ஆரம்பத்திலேயே இருக்கிறது. பேச்சின் தொடக்கத்தில் ஆண்டாள் பாவை நோன்பு நோற்றதன் காரணமாக திங்கள் மும்மாரிபெய்ய வேண்டும் என்று அவள் கேட்பதைக் குறிப்பிட்டு, அது எப்பேர்ப்பட்ட பொதுநலப் பண்பு என்று சிலாகிக்கிறார் வைரமுத்து. ஆண்டாள் சொன்னது பொதுநலப் பண்பு என்றால், வருடந்தோறும் பாவை நோன்பைச் செய்து வந்த ஒட்டு மொத்த சங்ககாலத் தமிழர்களது பொதுநலப் பண்பை இவர் எப்படி மறந்தார்? அந்தப் பழைய மரபின் தொடர்ச்சியாகத்தானே ஆண்டாள் பாடியுள்ளாள்? சங்க இலக்கியமான பரிபாடலில் (11-ஆம் பாடல்), காலத்தே மழை வருதலையும் காட்டி, தாய்மார்களும், கன்னியரும் பாவை நோன்பு நோற்றதில் இருக்கும் பொது நலத்தையும் காட்டிய பாங்கினை இவர் ஒப்பிட்டிருந்தால் அது ஆராய்ச்சி.

அப்படிப்பட்ட ஆராய்ச்சியை வைரமுத்து செய்திருந்தால், பரிபாடலில் சொல்லப்பட்டிருக்கும் காமம் சாலா இளங்கன்னியர் செய்த பாவை நோன்பையும், தைந்நீராடலையும்தான், சங்க காலம் இல்லாத காலக்கட்டத்திலும்ஆண்டாள் செய்திருக்கிறாள் என்பது புலனாகியிருக்கும். அப்பொழுதுதான் அவள் பாடியதை மரபு மீறல் என்றோ, சமூகக் கேள்வியாகவோ, பாலியல் கண்ணோட்டத்திலோ, பெண் விடுதலையாகவோ - இன்றைய குறைப்பார்வைக் கண்ணோட்டத்தில் பார்த்திருக்க மாட்டார்.

இது ஒரு புறம். இன்னொருபுறம், ஆண்டாளின் பிறப்பு குறித்த ஆராய்ச்சி செய்கிறார் வைரமுத்து. அந்த ஆராய்ச்சியை ஆண்டாள் பாசுரங்களிலும், பெரியாழ்வார் பாசுரங்களிலும் காணப்படும் உள்ளுறைச் சான்றுகளை ஒதுக்கி விட்டுச் செய்கிறார். ஆண்டாளே ஓரிடத்தில் கூறுகிறாள்,

" 'தந்தையும் தாயும் உற்றாரும் நிற்கத்
தனி வழி போயினள்' என்னும் சொல்லு
வந்த பின்னைப் பழி காப்பரிது"
(நாச்சியார் திருமொழி 12-3)

அதனால் தமராகிய நீங்கள், என்னை இப்பொழுதே மதுரைக்கும், ஆய்ப்பாடிக்கும், துவராபதிக்கும் கொண்டு சேர்ப்பித்து விடுங்கள் என்கிறாள்.
தந்தையும், தாயும் மாலவனிடம் தன்னைக் கொண்டு சேர்ப்பிக்காமல், தானே தனியாகச் சென்றால் பழி வருமே என்று ஆண்டாள் சொல்வதைப் புறம் தள்ளிஅவள் பெரியாழ்வாருக்குப் பிறந்த பெண் இல்லை வைரமுத்து சொல்வதில் துளியேனும் ஆராய்ச்சியின் நிழலாவது இருக்கிறதா?

வைரமுத்து செய்தது ஆராய்ச்சிதான்; குரு பரம்பரை  ப்ரபாவத்தில் அவள் துளசி வனத்தில் பிறந்தாள் என்று சொல்லப்பட்டிருக்கிறதே என்று கேட்கலாம். அங்கேயே அவர் தன் ஆராய்ச்சியைச் செய்திருக்க வேண்டுமே என்பதுதான் இந்தக் கட்டுரையின் முக்கிய நோக்கம். இனி வரும் காலத்தில் எவரும், ஆண்டாளின் பிறப்பை சந்தேகிக்கக் கூடாது என்பதற்காகவே இனி வரும் விளக்கத்தை எழுதுகிறேன்.


ஆண்டாள் பிறப்பு ஆராய்ச்சி.


ஆழ்வார்கள் சரித்திரத்தை எழுதிய ஆச்சாரியர்களுடைய வாக்கில்தான் ஆண்டாள் துளசி வனத்தில் தோன்றினாள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.  இதைக் கொண்டு ஆண்டாள் பெரியாழ்வாருக்குப் பிறக்கவில்லை என்று வைரமுத்து நினைத்தால், இப்படிப்பட்ட அதிசயமான பிறப்பு ஆண்டாளுக்கு மட்டும்தானா, அல்லது பிற ஆழ்வார்களும் இப்படித்தான் பிறந்தார்களா என்று தேடியிருக்கலாம் அல்லவா? தேடவே வேண்டாம். குறிப்பாகப் படிப்பதை (selective reading) விடுத்து, குரு பரம்பரை சரித்திரத்தை முதலிலிருந்து படித்திருந்தால் முதலாழ்வார்கள் மூவர் சரித்திரத்திலும் இப்படிப்பட்ட இயற்கைக்குப் புறம்பான பிறப்புச் செய்தி இருப்பது தெரிந்திருக்கும். அவற்றையும் படித்து ஆய்ந்திருந்தால் அது ஆராய்ச்சி.
'மூவாயிரப்படி குரு பரம்பரை ப்ரபாவம்' என்னதான் சொல்கிறது என்றால் பொய்கை ஆழ்வார் ஒரு குளத்தில் பிறந்தார்.


பூதத்தாழ்வார் மாதவிப் பூவில் அவதரித்தார்.


பேயாழ்வார் செவ்வல்லிப் பூவில் பிறந்தார்.

இவர்களெல்லாம் இப்படிப் பிறந்ததற்கு வைரமுத்து, மற்றும் வைரமுத்து பின்பற்றும் ஆராய்ச்சியாளர்கள் கொடுக்கும் விளக்கமென்ன?

இவர்களது ஆய்வுக் கண்ணோட்டத்தில் இந்த ஆழ்வார்களும் தாய் - தந்தை யார் என்று தெரியாமல் பிறந்தவர்களா? குலமறியாத இவர்களை யாரேனும் எடுத்து வளர்த்தார்களா? அது எப்படி, பன்னிரண்டு ஆழ்வார்களில் நான்கு பேர் (ஆண்டாள் உட்பட) ஊர் பேர் தெரியாமல் விடப்பட்டு , தத்தேடுத்து வளர்க்கப்பட்டுஆனால் உலகம் காணாத அதிசயமாக பரஞானத்தை அடைந்து, உலகம் உய்யப் பாடிவிட்டுச் சென்றிருக்கிறார்கள்?  இதுதானே ஆராயப்பட வேண்டியது?

ஆண்டாள் பெண் என்பதால், சாதிக் கட்டுப்பாடு, சமூகத்தின் பார்வை, குலமகளா இல்லையா என்று ஒரு வக்கிரத்தையும் விடாமல் வைரமுத்து பிடித்துக்  கொண்டு விட்டார் - அதாவது மற்ற ஆராய்ச்சியாளர்கள் போர்வையில்.

முதலாழ்வார்கள் பிறப்பு விஷயத்தில் வைரமுத்து என்ன சொல்லப்போகிறார்? அன்றைய தமிழ்ச் சமூகமே இழிந்து போயிருந்தது என்று சொல்லப்போகிறாரா? இழி பிறப்பாக இருந்தால் அவர்களுக்கு அந்த ஞானம் எப்படி வந்தது? அவர்களை ஆழ்வார்கள் - நம்மை ஆள்பவர்கள் என்று சமூகம் எப்படி ஏற்றுக் கொண்டது? இதையெல்லாம் வைரமுத்து ஆராய்ந்திருந்தால் அது ஆராய்ச்சி.

இன்றைய விஞ்ஞான ஆராய்ச்சி என்ன சொல்கிறதென்றால், அவரவர் எண்ணத்தின் படியே சொல்லும், செயலும் அமையும். வைரமுத்துவின் எண்ணத்தில் என்ன இருக்கிறதோ, அதையொட்டிய கருத்துக்களையே  அவர் கிரகித்துக் கொள்கிறார். அவற்றையே தன் எழுத்தில் பிரதிபலிக்கிறார். சிச்சுவேஷனுக்குப்  பாட்டு எழுதுபவர்களுக்கு இன்றைய சிச்சுவேஷனில், தம்மைக்  கவரும் கருத்துக்களை ஒட்டியே "ஆராய்ச்சியும்" அமையும். வைரமுத்துவின் மனோத் தத்துவத்தை ஆராய்ப்பவர்கள் இந்த முடிவுக்குத்தான் வருவார்கள்!

அதிசயப் பிறப்பின் அர்த்தமென்ன?

வைரமுத்து செய்த ஆண்டாள் பிறப்பு ஆராய்ச்சியின் லட்சணத்தைப் பார்த்த்தோம். இனியும் எவரும் இப்படி ஆராயக் கூடாது என்றால், இந்தப் பிறப்புகளின் உள் அர்த்தத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒருவர் பொய்கையில் பிறக்கிறார்; ஒருவர் மாதவிப்  பூவில் பிறக்கிறார்; ஒருவர் செவ்வல்லிப் பூவில் பிறக்கிறார். ஒரு குழந்தை பொய்கையிலோ, பூவிலோ பிறந்திருக்க முடியாது. பிறந்தவுடன் அவற்றின் மீது விடப்பட்டும் இருக்க முடியாது. ஆனால் ஆச்சார்யர்கள்  அப்படிச் சொல்லியிருக்கிறார்கள்  என்றால் ஏதோ சூட்சுமம் இருக்க வேண்டும். 

அது என்னவென்று ஆராய்ந்தால், இவர்களை போன்றே பல்லவன் பிறப்பும் அமைந்திருக்கிறது என்று தெரிய வருகிறது.

முதல் பல்லவன் மஹாபாரத காலத்தைச் சேர்ந்த அஸ்வத்தாமனுக்குப் பிறந்தவன். மஹாபாரதப் போர் முடிவில், அஸ்வத்தாமன் மாபெரும் அழிவை உண்டாக்குகிறான். எனினும் அவனைக் கொல்லாமல் காட்டுக்குள் துரத்தி விடுகின்றனர். அதற்குப் பிறகு அவன் என்ன ஆனான் என்று பல்லவர் கல்வெட்டுகளின் மூலமாகத்தான் தெரிகிறது. அவன் காட்டுக்குள் வாழ்ந்திருக்கிறான். அவனுக்கும் ஒரு அப்சர மங்கைக்கும் குழந்தை பிறக்கிறது. அந்தக் குழந்தையை அஸ்வத்தாமன் பார்க்கும் போது, அது, தளிர்களாலான ஒரு படுக்கையில் கிடத்தப் பட்டிருக்கிறது. தளிர்களுக்கு சமஸ்க்ருதத்தில் 'பல்லவ' என்று பெயர். குழந்தையைப் பார்த்த அஸ்வத்தாமன், தளிர் என்று பொருள் படும் 'பல்லவ' என்கிறான். அதுவே அந்தக் குழந்தையின் பெயராகிறது.

ஆதாரம்: கசக்குடி பட்டயம் (South Indian Inscriptions, Vol2, Part iii, No 73)


ஆதாரம்: அமராவதி தூண் கல்வெட்டு(South Indian Inscriptions, Vol1, Part i, No 32)


இதன் அடிப்படையில், பல்லவன் பிறப்பை, தளிரில் பிறந்தவன்' என்று சொல்லலாம்.

இந்த மாதிரி சொல்லும் வழக்கம் இன்னொரு விதத்திலும் இருக்கிறது. இதை ஜோதிடப் புத்தகங்களில் காணலாம். எந்த ஜோதிடப் புத்தகத்திலும் 'ஜனன காலப் படலம்' என்று ஒரு பகுதி இருக்கும். குழந்தை பிறக்கும் பிரசவ வீட்டின் லட்சணம் இதில் விவரிக்கப்பட்டிருக்கும். குழந்தை பிறக்கும் இடம்  எது என்பதை ஜனன கால ஜாதகத்தை வைத்துச் சொல்ல முடியும்.  குழந்தை பிறந்தது நீர் நிலைக்கு அருகிலா, நதிக்கு அருகிலா, கிணற்றுக்கு அருகிலா, வாய்க்காலிலா, குளக்கரையிலா, அல்லது நீருள்ள வயலுக்கு அருகிலா என்றும் குறிப்புகள் உள்ளன.

அதை போல, வீட்டிலா, வெளியிலா, சிறையிலா, தொழுவத்திலா, கோயிலுக்கு அருகிலா, அல்லது யாக சாலைக்கருகிலா என்றும் குறிப்புகள் மூலம் சொல்ல முடியும். இவற்றின் அடிப்படையில், மிதிலை  மன்னன் ஜனக ராஜன் யாக சாலையை உழும் போது , சீதை கிடைத்தாள் (அல்லது) பிறந்தாள் என்றால், இரண்டு அர்த்தங்கள் இருக்கின்றன. ஒன்று, சீதை பிறந்த இடம் யாக சாலைக்கு அருகில் இருந்திருக்க வேண்டும். அல்லது ஜனகர் யாக சாலையை உழுது கொண்டிருக்கும் போது சீதை பிறந்திருக்க வேண்டும்.

இதை போன்றே பொய்கை ஆழ்வார் பொய்கையில் பிறந்தார் என்றால், அவரை அவர் தாயார் பிரசவித்த இடம், பொய்கைக்கு அருகில் இருந்தது என்று அர்த்தம்.

பூதத்தாழ்வார் மாதவிப் பூவில் பிறந்தார் என்றால், மாதவிப் பூப்பந்தல் அருகே பிறந்தார் என்றும் பொருள் கொள்ளலாம். அல்லது, பல்லவனைப் போல இவர் பிறந்தவுடன் மாதவிப் பூப்படுக்கையில் கிடத்தப் பட்டிருக்க வேண்டும்.

இவரைப் போன்றே பேயாழ்வாரும், செவ்வல்லிப் பூப்படுக்கையில் கிடத்தப்பட்டிருக்கலாம். அல்லது செவ்வல்லிக் குளத்தருகே பிறந்திருக்கலாம். இவர்களைப் போன்றே ஆண்டாள் ஜனனமும் சொல்லப்பட்டிருக்க வேண்டும்.

ஆண்டாள் பிறப்பு.

ஆண்டாள் பிறப்பைப் பற்றி மூவாயிரப்படி குரு பரம்பரை ப்ரபாவம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

 
பெரியாழ்வார் துளஸிப் பாத்தியைக் கொத்திக் கொண்டிருக்கும் போது அதனின்று ஆண்டாள் தோன்றினாள் என்று ஆச்சார்யர்கள் கூறியுள்ளார்கள். இதுவரை நாம் கொடுத்த விளக்கத்தின் படி, ஆண்டாள் பிறந்த அறைக்கு அருகில் துளசி வனம் இருந்திருக்க வேண்டும். அல்லது பெரியாழ்வார் துளஸிப் பாத்தியைக் கொத்திக் கொண்டிருந்த போது, ஆண்டாள் பிறந்திருக்க வேண்டும். துளசியின் சம்பந்தம் இருக்கவே, அந்தத் துளசியும் பெருமாளுக்கு உகந்த மாலையாக இருக்கவே, ஆழ்வார் குழந்தைக்கு, 'பூமாலை' என்னும் பொருள் கொண்ட 'கோதை' என்னும் பெயர் இட்டார்.

துளசி வன சம்பந்தம் பின்னால் ஆழ்வாரால் நினைத்துப் பார்க்கப் படுகிறது. மூவாயிரப்படி குரு பரம்பரை ப்ரபாவம் கூறுவதை பார்ப்போம்


எந்தப் பெண்ணுக்குப் பூமாலை என்று பொருள் படும் கோதை என்று பெயர் சூட்டினாரோ, அந்தப் பெண் அணிந்த மாலையைத் தனக்கும் சூட்ட வேண்டும் என்று பெருமாளே கனவில் வந்து கூறிவிடவே, பெருமாளுக்கும், கோதைக்கும் உள்ள தொடர்புகள் புலனாகின்றன. மாலை மாற்றிக் கொள்வது என்பது கணவன் மனைவிக்குள்தான் நடக்கும். இங்கு பெருமாள் கோதை சூட்டிக் கொண்ட மாலையை, தான் சூட விழைகிறார்.  

அப்படியென்றால் கோதை யார்? பெருமாளின் மனைவியா? பெருமாளுக்கு  மூன்று மனைவியர் என்பது மரபு. அவர்கள்  ஸ்ரீதேவி, பூமதேவி, நீளா தேவி. இவர்களுள் கோதை யார் என்று பெரியாழவார் ஆச்சரியப்படுகிறார். அவள் பிறந்தது நினைவுக்கு வருகிறது. துளஸிப் பாத்தியில் தோன்றியவளாயிற்றே. ஆக, இவள் பூமா தேவின் அவதாரமோ என்ற எண்ணம் எழுகிறது. துளஸிப் பாத்தி சம்பந்தத்தினாலேயே ஆண்டாளை பூமாதேவியின் அவதாரம் என்கிறோம்.

மானுட ஜென்மமாக வந்ததினால் அவள் ஆழ்வாருக்குப் பிறந்தது உண்மைதான். சூட்சுமமாக அவளது தெய்வீக நிலை தெரியவே, அவள் பிறந்த போது ஆழ்வார் துளஸிப் பாத்தியை சீர் செய்து கொண்டிருக்கவே, அல்லது, அவள் துளசிச் செடிக்கருகில் பிறக்கவே, அவள் துளசி வனத்திலிருந்து தோன்றினாள் என்று ஆச்சார்யர்கள் அருளியிருக்கிறார்கள்.

வெளிப்படையாக ஆச்சார்யர்கள் சொல்லும் சூட்சுமம், முதலாழ்வார்கள் 'அயோனிஜர்கள்' - அதாவது கருவிலிருந்து பிறந்தவர்கள் அல்லர், ஏனெனில் இவர்கள் விசேஷப் பிறவிகள்.  மானுடத்தை தாண்டிய தெய்வப் பிறவிகள். ஆண்டாள் விஷயத்தில் அவள் பூமாதேவியின் அவதாரமே. துளஸிப் பாத்தி என்பதன் மூலம் பூமி சம்பந்தம்  தெரிகிறது.
சீதையும் பூமாதேவியின் அவதாரமே. அங்கு யாக சாலை சம்பந்தம் அவளை பூமாதேவி என்று காட்டுகிறது. இவர்களது விசேஷத் தன்மையை பிறப்பிலிருந்தே காட்டுவதற்கு அமைப்புகள் இருக்கவே, ஆச்சார்யர்களும், ரிஷிகளும் அவற்றைத் தூக்கிக் காட்டியிருக்கிறார்கள். அதைக் கொச்சைப் படுத்துவது, நம்முடைய குறைபாட்டினையும், புரிதல் இல்லாத கண்ணோட்டத்தையும் காட்டுகிறது.

தமிழை ஆண்டாளை வைரமுத்து அறிந்தவரா?

இனி நாம் முதலில் எடுத்துச் சொன்னவாறு, சங்கத் தமிழை ஆண்டாள் எவ்வாறு ஆண்டாள் என்பதை வைரமுத்து காணத் தவறி விட்டார். அதற்குச்  சிகரமாக விளங்குவது அவர்  கேட்கும் சமூகக்  கேள்வி. கனவு  காணும்  வேளையிலும் கரை விட்டோடும் துணிச்சல் ஆண்டாளுக்கு எப்படி வாய்த்தது என்றும், இதை விடுதலை என்றும் கூறும் வைரமுத்து, இந்த விடுதலை ஆண்டாளுக்கு எப்படிக்  கிட்டியது என்பதை சமூகக் கேள்வியாக வைக்கிறார். இந்தக் கேள்வியில் ஆரம்பித்ததுதான் எல்லா அநர்த்தமும், தவறான சித்தரிப்புக்களும்.

ஆண்டாளின் 'துணிச்சல்

ஆண்டாளின் துணிச்சலைப் பற்றி இவர் என்ன கேட்பதுநாச்சியார் திருமொழியின் 12-ஆம் பத்தின் கடைசியில் ஆண்டாளே தனக்குத் துணிச்சல் இருக்கிறது என்று சொல்கிறாள் -

"தன்னைத் தமர் உய்த்துப் பெய்ய வேண்டித்
தாழ் குழலாள் துணிந்த துணிவை..."

இந்தத் துணிவுக்குத் துணை போவது,  தொல்காப்பியத்தின் களவியல் சூத்திரம்!

உயிரினும் சிறந்தன்று நாணே நாணினும்
செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று..." (பொருளதிகாரம் 111)

இதற்கு உரையாசிரியர் இளம்பூரணர், ' உயிரினும் நாண் சிறந்தது; அதனினும் குற்றம் தீர்ந்த காட்சியினையுடைய கற்புச்  சிறந்தது: என முன்னோர் கூற்றையுட் கொண்டு தலைவன் உள்ளவிடத்துச் செல்லலும், வருத்தமில்லாச் சொல்லைத் தலைவி சொல்லுதலுமாகிய அவ்வகை பிறவும் தோன்றும் அவை பொருளாம் என்றவாறு.' என்கிறார்.

இதற்கு, குறுந்தொகை - பதினொன்றாம் பாடலை இளம்பூரணர் உதாரணமாகக் காட்டுகிறார். இதே கருத்தை நாச்சியார் திருமொழியின் 12 -ஆம் பத்து முழுவதும் ஆண்டாள் காட்டுகிறாள். அவற்றில், நாணைக்  கடந்து, தலைவனாம் சீதரன் இருக்குமிடம் செல்ல விழைகிறாள்  ஆண்டாள். அந்த இடத்தில்தான் தன் தந்தை, தாயைக் குறிப்பிடுகிறாள். இவர்கள் என்னைக் கொண்டு போய் விடவில்லை என்றால், நானே சென்று விடுவேன். இதனால் வரும் பழியைத் தவிர்க்க முடியாது என்று பயமுறுத்துகிறாள். அந்தப் பத்து பாசுரங்களில் அவள் காட்டும் துணிவு சங்க காலக் களவியல் பாற்பட்டது.

அந்தப் பாடல்கள் முடிவில் அவள் என்ன சொல்கிறாள் தெரியுமா? புதுவையர் கோன் விட்டு சித்தன் கோதை துணிந்த துணிவை, இன்னிசையால் சொன்ன இந்த செஞ்சொல் மாலையை, ஏத்த வல்லாருக்கு வைகுந்தம் இருப்பிடமாகும்! இதுதான் வைரமுத்து வைக்கும் சமூகக் கேள்விக்கு ஆண்டாளே அளிக்கும் பதில்!!! 

இதைத் தெரிந்து கொள்ள இவருக்கு பக்தி வேண்டாம். இவர் பெற்றதாக நினைக்கும் சக்தியும் இவருக்கு வந்து சேரவில்லை. ஆனால் ஆண்டாள் பாடிய கண்ணோட்டத்தில் இவர் பார்த்து, அதன் சங்கத் தமிழ் மாண்பைத் தேடிக் கண்டுபிடித்திருந்தால் இப்படிப்பட்ட சொத்தைக் கேள்விகளைக் கேட்டிருக்க மாட்டார்.

ஆண்டாள் பாடியது மரபு சார்ந்த அகப்பொருள்தான்

ஆண்டாள் அகப்பொருளைத்தான் பாடினாள். வைரமுத்துவைப் பொறுத்த வரையில், சொல்ல முடியாதது அகம். சொல்ல முடிந்தது புறம். சொல்ல முடியாத அகப்பொருளை ஆண்டாள் எவ்வாறு கையாண்டாள் என்று சொல்ல வரும்போது வைரமுத்துக்கு ஏகப்பட்ட 'சமூகக் கேள்விகள்' எழும்பி விட்டன. அதன் அடிப்படையில் "ஆராய்ச்சிக் கட்டுரைகளைக்" காட்டி ஆண்டாளின் சரித்திரத்தையே வைரமுத்து எழுதிவிட்டார் 

சொல்லமுடியாதது என்று வைரமுத்து கருதும் அகப்பொருளைத்தான் திருவள்ளுவர் 3-ஆம் பாலாகச் சொல்லி வைத்துள்ளார். அவர் சொல்லாத எதையும் ஆண்டாள் சொல்லிவிடவில்லை.

உதாரணமாக ஆண்டாள் தனது கனவினை உரைக்கும் வாரணமாயிரம் பாசுரங்கள் திருவள்ளுவரால் கனவு நிலை உரைத்தல்” (அதிகாரம் 122) என்று சொல்லப்பட்டவையே.

நாச்சியார் திருமொழியின் 4-ஆம் பத்தில்,
"ஊடல் கூடல் உணர்தல் புணர்தலை
நீடு நின்ற நிறை புகழ் ஆய்ச்சியர் ......"

என்று ஆண்டாள் முடிக்கும் 10 பாசுரங்களும் திருவள்ளுவர் கூறும்
'ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியவர் பெற்ற பயன்"  (குறள் 1109)
என்பதன் இலக்கிய விரிவாக்கமே.

அன்று உலகமளந்தவன் இன்று ஏன் என்னை நலியச் செய்கிறான் என்று குயிலிடம் ஆண்டாள் முறையிடுவது (நா. திருமொழி 5-10)
'பருவராலும், பைதலும்' என்று தொடங்கும் குறளில் (1197) மன்மதன் ஏன் இருவரில் ஒருவரை மட்டும் நோகச் செய்கின்றான் என்று திருவள்ளுவர்  எழுதியதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக ஒன்றைச் சொல்லலாம். வள்ளுவர் பாடியது முப்பால். அதில் மூன்றாம் பாலான இன்பத்துப் பாலைக் கடந்துதான் வீடு பேரின்பம் அடைய முடியும். வீடு பேரின்பத்தைப் பற்றி, வள்ளுவர் மட்டுமல்ல, எவருமே எழுதி வைக்கவில்லை. ஆனால் என்ன செய்தால் வீடு பேரின்பம் கிடைக்கும் என்பதைப் பற்றி ஆண்டாள் எழுதினாள். எழுதியது மட்டுமல்லாமல், அப்பேரின்பத்தை அரங்கன் சந்நிதியில் அடைந்தும் காட்டினாள். இதைப் புரிந்து கொண்டவர்கள் அக்காலத்துத் தமிழர்கள், ஆச்சார்யப் பெருமக்கள்.   

அப்பேரின்பத்துக்கு அடிப்படை அகப்பொருள். அகப்பொருள் என்பது சங்கத் தமிழில் அதிகம் பேசப்பட்டது. முதல் சங்கத்தின் முக்கியப் பொருள் அதுதான். இறையனார் எனப்படும் சிவ பெருமான் அந்தப் பொருளில்தான் தருமிக்குப் பாடல் கொடுத்தார். அந்தப் பொருளில்தான் 'இறையனார் அகப்பொருள் ' என்னும் இலக்கணம் கொடுத்தார்.

அகப்பொருள்  என்பது என்ன? திரைப் பாடல்களில் இவர்கள் எழுதும் காமரசம் சொட்டும் பாடல்களா அவை?  இல்லை.

அகப்பொருளின் அடிப்படை அன்பு.

இறையனார் அகப்பொருளின் முதல் வரியே அன்பின் ஐந்திணை களவெனப்படுவது”  என்றுதான் ஆரம்பிக்கிறது.

மாந்தராய்ப் பிறந்த இரண்டு ஆத்மாக்களுக்குள் ஏற்படும் அன்பை விவரிப்பது அகம். அதில் கிடைப்பது சிற்றின்பம்,

மூன்றாம் பாலான இன்பத்துப் பாலின் மூலம் இதை உணர்ந்தவன், நிலையான  அன்பு எனப்படுவது ஆத்மாவுக்கும், பரமாத்மாவுக்கும் இடையே இருப்பதுவே என்று உணர ஆரம்பிக்கிறான். அந்த அன்பை பரமாத்மாவிடம்  நிலை பெறச் செய்கிறான். அதில் அவனுக்கு கிடைப்பது பேரின்பம், அதுவே வீடு பேறு எனப்படுவது.

அகப்பொருளின் இறுதி நிலையான அந்த அன்பை, ஆண்டாள் சங்கத்  தமிழில் நிறுவுகிறாள். அந்த அன்பை, அறியாய் பருவத்திலிருந்தே காட்டும் வண்ணம் நம் தமிழ்ச் சமுதாயம் பாவை நோன்பாக வடித்தது. ஆற்று மணலில் பாவை வடிவம் செய்யத் தூண்டி, சிற்றில் இழைக்கச் செய்து - என்று எல்லா விளையாட்டுகளிலும் தெய்வத்தை நோக்கியே நம்மை ஆற்றுப் படுத்துகிறது சங்க இலக்கியம். அவற்றுக்கெல்லாம் இலக்கணமாக வாழ்ந்து, முடிவில் வீடு பேற்றுக்கு அந்த அகப்பொருளையே ஆண்டாள் கையாண்டதை எப்படியெல்லாம் 'சமூகக் கேள்விகளாக' ஆக்கி விட்டார் வைரமுத்து. 

தமிழைத் துய்த்தவராகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் வைரமுத்து , ஆண்டாளின் தமிழ் என்பது எவ்வாறு சங்கத் தமிழ் ஆகும் என்று ஆராய்ந்திருக்க வேண்டும்.  அவருக்கு நல்ல ஆய்வுப் புத்தகங்கள் கிடைக்கவில்லை போலிருக்கிறது. நான் அறிந்த ஆய்வுப் புத்தகத்தை அவருக்கு அறிமுகப்படுத்துகிறேன்.

பண்டிதை எஸ். கிருஷ்ணவேணி அம்மையார் என்பவர் எழுதிய 'வில்லிபுத்தூர்  விளக்கு' என்னும் நூல் ஸ்ரீ வில்லிபுத்தூர்  தேவஸ்தானம் ட்ரஸ்ட் போர்டார் சார்பில் 1959-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. 



அருமையான  இந்தப் புத்தகத்தில், பன்முனை ஆராய்ச்சிகளுடன், 'ஆண்டாளும் அகப்பொருள் நூல்களும்' என்னும் தமிழாராய்ச்சிப் பகுதி ஒன்று இருக்கிறது.

அதில் எத்தனை, எத்தனை  இலக்கிய, இலக்கண விவரங்கள் ஆண்டாள் பாசுரங்களில் சுட்டிக் காட்டப் பட்டுள்ளன! என் சிற்றறிவுக்கு, அவை காணப்படும் நூல்களை மட்டுமே எடுத்துக் காட்ட முடிகிறது. அவை என்ன என்று தெரிந்து கொள்ளுங்களேன்.

திருக்குறள்
அகநானூறு – 139, 286
முல்லைக்கு கலி (கலித்தொகை) - 109
குறுந்தொகை – 133, 220, 391, 65, 50, 54, 188, 11, 395, 150, 18.
நற்றிணை – 243, 289, 302, 381, 387, 214, 238, 241, 143.  
இறையனார் அகப்பொருள்
அகப்பொருள் விளக்கம்- 206
தஞ்சை வாணன் கோவை – 286, 287, 226, 217, 277, 253, 291, 409, 245,
மாறன் கோவை – 459

இந்த ஆராய்ச்சியில் ஒரு சதவிகிதம் கூட வைரமுத்து செய்யவில்லை. அவர் மன்னிப்பு கேட்க வேண்டியது ஆண்டாளிடம் மட்டுமல்ல, தமிழ்த் தாயினிடமும்தான்.

ஆண்டாள் சரித்திரத்தை நம்பாத வைரமுத்து

வைரமுத்துவின் சரித்திர ஆராய்ச்சியில், அர்ச்சாவதாரமாகிய ஒரு விக்கிரகத்தோடு, குருதியும் இறைச்சியும் கொண்ட ஒரு மானிடப் பெண் கலந்ததுண்டா என்னும் கேள்விக்கு விடை சொல்ல ஒரு ஆவணம் இருக்கிறது என்று 'கோயிலொழுகு' வில் காணப்படும் குலசேகர பெருமாள் ஆழ்வாரது மகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார். சோழவல்லி என்னும் தன் மகளை ஆழ்வார் ஸ்ரீரங்கம் அழகிய மணவாளப் பெருமாளுக்கு மணம்  செய்விக்கிறார். இவ்வளவுதான் சொல்லப்பட்டிருக்கிறது. இதனை ஒரு ஆவணமாகக் கூறுவதன் மூலம், இவர் எழுப்பிய கேள்விக்கு எந்தவிதமான பதிலைத் தருகிறார் என்பதற்கு 20-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரையை  மேற்கோள் காட்டுகிறார். அது சரியே என்றும் வாதாடுகிறார்.  

சோழவல்லியின் திருமணத்தில் சொல்லப்படாத  ஒரு விஷயம் ஆண்டாள் திருமணத்தில் இருக்கிறது. சோழவல்லியின் திருமணத்துக்குப்பின் என்ன ஆயிற்று என்று எங்கும் சொல்லப்படவில்லை. ஆனால் ஆண்டாள் விஷயத்தில் அவள் அழகிய மணவாளன் அருகில் சென்று 'அந்தர்பவித்தருளினாள்' - அதாவது மறைந்து விட்டாள் என்றே சொல்லப்பட்டிருக்கிறது. இல்லாத ஒன்றை ஆழ்வார்களும், ஆச்சார்யர்களும் சொல்லியிருக்க மாட்டார்கள்; எழுதியிருக்கவும் மாட்டார்கள். உள்ளதை  உள்ளபடிதான் சொல்லியிருப்பார்கள், அல்லது  முன்பு சொன்னதுபோல் சூட்சுமமாகச் சொல்லியிருப்பார்கள். வைணவர்கள் பொய்யாகவோ அல்லது  தவறாகவோ பேசவோ, செய்யவோ மாட்டார்கள் என்பதை நிரூபிக்கப்  பாம்புக்கு குடத்தில் கையை விட்டவர் குல சேகர ஆழ்வார். 

அப்படி இருக்க, ஆண்டாள்  மறைந்தது எப்படி என்று ஆராயப்புகில், அவளைப் போலவே  மறைந்த  சம்பவங்களுடன் தான் ஒப்பீடு செய்ய வேண்டும் - நாம் ஆரம்பத்தில் ஆழ்வார்களது அதிசயப் பிறப்பை, தளிர் என்னும் பல்லவன் பிறப்பைச் சொல்லும் கல்வெட்டுச் சான்றுகளுடனும் , அப்படிப்பட்ட பிறப்பின் உள் அர்த்தத்தைக் காட்டும் ஜோதிடப் புத்தகச் சான்றுகளுடனும்  ஒப்பீடு செய்ததை போல.

அவளைப் போலவே மறைந்த சம்பவம், ஆண்டாள் காலத்திற்கு சில நூற்றாண்டுகள் முன் கண்ணகியின் காலத்தில் நடந்தது என்று அனைத்துத் தமிழ் மக்களும் போற்றும் சிலப்பதிகாரம் கூறுகிறது. அதில் கணவனை இழந்த 14-ஆம் நாள் கண்ணகியின் கண் முன், இறந்த அவள் கணவன்  (கோவலன்) தோன்றுகிறான். அப்பொழுது ஒரு வானவூர்தி வருகிறது. பூமாரி பொழிய அவள் தன்  கணவனுடன்  அந்த வானவூர்தியில் ஏறிச் சென்று மறைகிறாள். இதை அங்கு வாழ்ந்த மலைவாணர்கள் எனப்படும் வேட்டுவரும், வேட்டுவித்தியரும் தங்கள் கண்களால் பார்க்கின்றனர். இதை வைரமுத்துவும், அவர் நம்பும் ஆய்வாளர்களும் ஏற்றுக் கொள்கிறார்களா?

ஏற்றுக் கொண்டால் ஆண்டாள், இறைவன் பக்கலில் மறைந்ததை  ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு கண், காது, மூக்கு வைத்து, நடக்காத ஒன்றை நடந்ததாகச் சொல்லக் கூடாது.

கண்ணகி சம்பவத்தை ஏற்றுக் கொள்ளாவிடில், தமிழ் நூல் எதனையுமே இவரும், இவரைப் போன்ற ஆய்வாளர்களும் தொட்டுக் கூடப் பார்க்க வேண்டாம். ஏனென்றால் அந்த சம்பவங்கள் காட்டும் உண்மைகள், கருத்துக்கள், தொல்காப்பியச் சான்றுகள் எவையுமே இவர்களுக்குப் புரியாது. இதுவரை புரிந்திருக்கவும் இல்லை. 

இவர்கள் தமிழ்த் தொண்டாற்ற விரும்பினால், சினிமாத் தமிழுடன் நிறுத்திக் கொள்ளட்டும். அதை விடுத்து, பழந்தமிழை ஆராயப் புகுந்தால் அதை எப்படி ஆராய வேண்டுமோ அதன்படி ஆராய வேண்டும்.

சங்க காலம் தொடங்கி, ழ்வார்கள், நாயன்மார்கள் வரை, வீடு பேற்றைத் தரக் கூடிய அறம், பொருள், இன்பத்தைப் பற்றியே பேசியிருக்கிறார்கள்.

பேசினார் பிறவி நீத்தார், பேருளாளன் பெருமை பேசி.
ஏசினார் உய்ந்து போனார் என்பது இவ்வுலகின் வண்ணம்.

இதைப் புரிந்து கொண்டு, உய்ந்து போய் வீழ வேண்டாம்.

வாழும் வகை அறிந்து கொள்ளுங்கள்.   


Related article:



79 comments:

Anonymous said...

No words to describe the exceptional quality of this article. So far the best among all articles written (I have read at least 20 of them) in this category.

His analysis pattern is similar to "Doniger & Pollock" type where the spiritual elements will be removed and the text is interpreted in the "currently assumed" social context.

Pollock got PV for Philology work in Ramayana. (Death of Sanskrit)

Goldman got Presidential honor for Mahabharath work.
http://sseas.berkeley.edu/news/prof-robert-goldman-receives-2013-president-s-certificate-honour-sanskrit-international

https://www.facebook.com/RajivMalhotra.Official/photos/a.137731093046903.31225.137726233047389/982302845256386/?type=3&theater

Virus M is working on similar lines (supported by these institutions) to get these achievements. This pattern has to be understood by all Indian scholars and politicians, and exposed consistently, else no matter how much we oppose, they will continue with the political / $$ power.


Raghu said...

Excellent article, Madam. I used to admire many of his songs and stories, but your article proves that all his talent amounts only to "tip of the grass" as the adage goes, repeatedly getting bogged into the mire of love and lust, and occasionally, nature. He certainly cannot call his work a research.

Jayasree Saranathan said...

Thanks Mr Gopinath. I appreciate your observation.

Jayasree Saranathan said...

Thanks Mr Raghunathan for sharing my opinion that his is not a research. Definitely it is not a research on Andal's Tamil.

Srini said...

Thoroughly researched (not the Indian a type as done by the self-acclaimed cinema lyricist) and wonderfully written article. It is an eye opener for many people who are not well conversant with tamil litrature.

basu said...

அசற வைக்கிறது.தமிழின் தொன்மையும் நுண்மையும் எத்தனமையது என இக்கட்டுரையைப் படிப்பவரை எண்ண வைக்கும்.தொடரட்டும் தங்கள் பணி.

Unknown said...

Well done. Excellent job. your article is more of a research paper compiling all pramanams with strong evidence. Manjula

Jayasree Saranathan said...

Thanks you Srini. This article was written after seeing his video-speech. Only moments ago I got to read his full article in Dinamani. Absolutely shell- shocked. Every passage is a non-sense. He is beyond recovery. Is bound get immersed in terrible karma. In science an emerging theory called 'Quantum entanglement' speaks about the instantaneous genesis of a related pair for any particle or energy. I used to think that it best explains how karma catches up one for every thought, word and deed. Vairamuthu's karmic quantum entanglement is already formed. No use in seeking pardon from Andal. He should not even touch the soil of Andal temple.

His non-sense is available here: http://epaper.dinamani.com/1496595/Dinamani-Chennai/08012018#page/8/2

Jayasree Saranathan said...

Thanks Ms Manjula. Hope you have read my previous comment. Will write more to expose Vairamuthu's absurdities.

Unknown said...

Extradinary reply. In depth research. Final conclusion with Thirumangaialwar quotation is superb. Keep it up

Unknown said...

Excellent article with unarguable facts and points providing a fitting reply to
Vairamuthu. Wishing you all the best Madam. With Regards and Respects KRISHNAN, Nanganallur

veeru said...

Excellent and exceptional article, well researched. But the underlying problem is why go there? Why try ti understand her birth or her union with the Lord if they are part of faith of a community? If we are religious we accept there's God? Can that be rationally explained? If Immaculate Conception and resurrection are the underlying bricks of a religion to which Vairamuthu belongs, has he accepted them? They happened only 7 centuries before Andaal? If he accepts them, what's his difficulty in "tolerating" another group's beliefs if they are just that? Or is he going to do a literary and rationalist analysis of his religion's bedrock faiths? And it has several miracles which are validated.

T.Annamalai said...

Dear madam,
Recently I started flowing your blog after i come to know about your weather predictions based on a link available in kea weather website, from that day i used to frequently visit your blog.
Thanks for your article, for the past 15 days I am waiting for your reply to virus M, I have already read your wonderful article/reply for Daniel selvaraj.
Some one should circulate this article to Virus M and get him understand his quantum entanglements and the future prospects awaiting to him, when the judgement day comes only Andal can save him of course for that he has to follow the way she had shown to all the devotees with out caste and religious bar.

Unknown said...

Excellent article. Everyone one who supports that cine guy must read this. Thanks
Muralidharan Jagannathan

Unknown said...

Excellent analysis. What a way the other literatures have been analysed! Spell bound.

Kala Vijayaraghavan said...

What an article! I bow to your proficiency in Tamil and this elaborate counter- argument.

Ramya said...

Wow Madam, very fitting reply. Andha neechan katurayai kEttu puzhuvai thudhitha end pOndra pala pErukku ungaL katturai oru varam
AandaL thiruvadigalE saranam

Unknown said...

Splendid research work.Andal NAchiyar's Thiruppavai is essence of Vedas.Quantum physics culminates into metaphysics which in turn had roots in Vedas.It is ridiculous to expect a cine lyricist who prolifically plagiarised Sangam Tamil literature (agathurai)in his situational Tamil movie songs to approach Andal's bakthi literary brilliance with divinity dignity and devotion

ulaganathan p said...

எனக்கு தமிழையும் பெருமாளையும் காட்டி அருளிய அன்னை ஆண்டாள். அன்னையின் பாசுரத்தில் சத்தியம் ஒலிக்கிறது. நமக்கு அவள் வாக்கே பிரமாணம். ஆராய்ச்சி வேண்டி இருக்கவில்லை. ஆண்டாளின் தமிழை சிலாகிப்பவர் அதற்கு ஆதாரமான அவளது பக்திப் பிரபாவத்தை மறுதளிப்பது எங்ஙனம்? கவிஞரின் கட்டுரை முற்றும் உள் நோக்கம் உடையது.

Unknown said...

Excellent rebuttal! But what is the use in trying to wake-up persons pretending to sleep! His mentor has written rotten commentaries on Tirukkural, Tolkappiyam, etc., to suit their line of crooked thinking. They have no basic attitude for proper research, but only want to select passages and twist interpretations to give false support for their 'philosophy'. Like writing lyrics to situations, they are twisting interpretations to pasurams. They want to ridicule the extreme efforts taken by great Acharyas who not only researched on every syllable in these divine works but also researched how to relate those with works of other gifted souls and other poets and scholars of Sanskrit. One should study these lyrics under Acharyas to learn the true import of these Divine works.

Jayasree Saranathan said...

Thank you. 🙏

Jayasree Saranathan said...

Thanks Mr Annamalai. I was busy with 'yuga' articles when Vairamuthu issue exploded. That's why this delay in response. Now my weather blogs are postponed because of this issue. I am able to concentrate on one thing at a time. My rebuttal on Vairamuthu is not yet over. At present I am writing my rebuttal on his 'tamil' spread through out his article. Will post it soon. After that I will write on Rajaji factor that Gyani & su.ba.vee. brought in. So stay tuned. And wait for sometime for weather blogs.

Jayasree Saranathan said...

I wish so Mr Muralidharan

Jayasree Saranathan said...

@unknown. Thank you. Let Andal nacchiyar and Acharya Ramanuja give us the knowledge & strength to demolish such articles.

Jayasree Saranathan said...

Thank you Ms Kala & Ms Ramya. This article was written after watching half an hour video on Vairamuthu's speech and his justification later. Only yesterday I managed to spot his article in dinamani.I can't express how I felt. In that moral anger I have started writing my 2nd rebuttal to his entire non- sense. Please stay tuned to this blog to read that soon.

Jayasree Saranathan said...

Dear Mr Suresh , Vairamuthu is woefully lacking in knowledge of sangam texts. I am going to expose it in my next article.

Jayasree Saranathan said...

Thanks Mr Saranathan. I sent the link of this article to Vairamuthu through Twitter. Let's not bother whether he wakes or not. At least those on the 'madhil' will realise that there is no secret in Andal's birth. Let's hope that anyone thinking on the lines of Daniel Selavaraj and Vairamuthu will think twice before attempting to question the birth of Andal. Acharya's commentaries are like iron poured on their ears. They will be nectar only for devotees.

Unknown said...

Super, Andal thiruvadigal saranam

L. R. Sethuraman said...

Hats off to your in-depth analysis & articulation as always with objective evidence from our own literary treasure. If only Vairamuthu and his voiciferous supporters do have any real affinity to Tamil and its rich heritage without their own political and religious leanings, they have to hang their heads in shame for having committed a dis-service to Tamil and the entire lineage of Tamil Scholars who added great value, respect and repute for this language thru their contributions for ages. -
L. R. Sethuraman

Unknown said...

This is an excellent retort indeed by Jayasree Saranathan. A hundred years, nay a thousand years from now Andal’s works will continue to be recited in India and abroad, as there is a spiritual and timeless dimension to her works, unlike the lyricists of cine world . Vembar K Ranganathan

Kalyanakrishnan said...

Superb. A real eye opener. In the film industry he has done well with his vocabulary and knowledge. To pass comments on Andal is misusing his popularity. He has now lost his popularity.

Unknown said...

Excellent 'real' research! astounded by the quality and refutal. God bless you.

Unknown said...

Brilliant, beautiful and enlightening. Thanks and regards/ Dr.N.Ranganathan

curdrice said...

Wawh akka really you are genius.no one has written an explanation like this from sangakalam to our prabhandham.this article is not only for vairamuthu but even for people like me to get a deep knowledge about kodhai naachiyar.hats off for your wonderful narration.i am really very happy & proud that i have spent some time with you so close.when i was reading this article i had goose bumps & could n't leave inbetween.it was so gripping & exhilarating. god bless you. -Kousi

Jayasree Saranathan said...

Thanks Mr Natarajan. Andal thiruvadigale saranam.🙏

Jayasree Saranathan said...

Thanks Mr Sethuraman. For long Tamil has been misused by the likes of Vairamuthu. It's time they are exposed. I will do my best to expose his Tamil knowledge in my next article.

Jayasree Saranathan said...

Very true Mr Vembar.

Jayasree Saranathan said...

Thank you Mr Kalyanakrishnan. I think his film popularity has given him a thought that he is an expert in sanga Tamil of which Andal'S is the most recent.

Jayasree Saranathan said...

Thank you Mr Ragothaman 🙏

Jayasree Saranathan said...

Thanks Dr Ranganathan 🙏

Jayasree Saranathan said...

Thank you Kousi. Happy to know that I have helped you in your quest for more knowledge.

sundaram said...

Very well researched rebuttal to Mr. Vairamuthu. Frankly, i really could not fathom the extent of the damage done to Andal Nachiyar till i read your article . Comes as a great enlightenment to me. Thanks

Unknown said...

Respected Ms.jeyasree..சமூக ஊடகத்தின் தட்டச்சு அனை பழக்கமிலை.
என்னவென்று புகழ்வது....வாக்குகள் இலையம்மா....எங்கள் மனசில் கனன்று
எரியும் ஆதங்கங்கள் எல்லாம் பறந்து விட்டன...சரியான பதிலடி யாராவது தர மாட்டார்களா என்ற ஏக்கம் எல்லாம் தீர்ந்தது....மிக அற்புதமான வலிவான எழுத்துக்கள்...வைரத்துக்கு அனுப்பினால் ோதாது....மக்கள் பத்திரிகைகளில் பரவவேண்டும்.....ஆண்டாள் உங்களுக்கு எல்லா நலனும் அருளட்டும்....நேற்று பத்மஸ்ரீ விருது வாங்கிய திரு.வாதேவனின் ஆசீர்வதிக்கப்பட்ட மகள் நான்....அப்பாவும் படித்தார்....மிகவும் பரவசமானார்......தன் வாழ்த்துளைத்தெரிவிக்கொன்னார்.....றைய எழுத ஆவல்..தட்டச்சு சரிவரவிலை...பரமன் நலம் யாவும் அருளட்டும்

Unknown said...

நெஞ்சமுருகி நன்றி தெரிவிக்கிறேன். மிருகமுத்து வெளியிட்ட பிற அபாண்டங்களுக்கும், தங்களிடமிருந்து சவுக்கடிகளை எதிர்நோக்குகிறேன்.

“உள்ளுறை உவமம், இறைச்சி”, போன்றவற்றை அறிந்திராதவனல்லன், மிருகமுத்து.

இருப்பினும், அவை நாகரிகத்தை புறந்தள்ளி, வலிந்து விதந்தோதிய மிருகம், அன்று கக்கிய விஷங்கள் பற்பல. ஒவ்வொன்றுக்கும், வைணவ பெரியோர்கள், தக்க பதிலடி தரவேண்டும் என்பதே என் அவா.


மிருகமுத்துவின் அயோக்கியத்தனத்தை வெளிப்படுத்தும் வரிகள்:

கன்னி கழியாத ஒரு பெண்ணின் பாலியல் உரையாடலுக்கு எது அடிகோலியது?

“குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்”

என்ற சொல் விடுதலை ஆண்டாளுக்கு அருளப்பட்டதா அல்லது அகவெழுச்சியின் அத்து மீறலா?

உரைகாரர்கள் இதற்கு வேறுபொருள் கூட்டித் தம் தீராப்புலமையின் திமிர் காட்டுவார்கள். “குத்துவிளக்கு என்பது குரு உபதேசம். கோட்டுக்கால் என்பன நான்கு புருஷார்த்தங்கள். மெத்தென்ற பஞ்சசயனமாவது தேவ, திர்யக், மனுஷ்ய, ஸ்தாவர, அப்ராண ரூபமான ஜீவர்கள். மேலேறி என்பது இவ்வுயிர்களுக்கு மேம்பட்டவன்” என்று பிரபந்த ரட்சையில் வைணவாச்சாரியார்கள் வலிந்து விதந்தோதினாலும் அதை நயம் பாராட்டல் என்று சொல்லவியலுமே தவிர நியாயம் பாராட்டல் என்று சொல்லவியலாது. இதற்கு நேர்பொருளே ஏற்புடைத்து.


லோக ஷேமத்துக்காவே வாழ்ந்த, வைணவாச்சாரியர்களை, “வலிந்து விதந்தோதினார்கள்”, என்று, காசுக்கு வார்த்தைகளை விற்கும் வார்த்தை விபசாரி, கூறுவதை கேட்க நேர்வது கலியின் கோலம்.

Raja

Ramia Raghava Balaji said...

I tried to send a PDF document over DM on twitter but PDF format is not accepted yet. Please let me know if you have an email that I can forward it on.
My inputs may be just like the squirrel's service to your mammoth effort to expose Vairamuthu's designs.

Thanks
Ramia

Unknown said...

Yes , to be called henceforth Kali-Muthhu!

Raghu said...

A small request. We may not like or agree with someone's thoughts and ideas, and we have every right to protest their views and demolish their theories. However, I personally feel we should not degrade ourselves by calling someone names and nurture hatred towards the person. By hook or crook, he is also one of the creations of God and may be he has a purpose to serve - like in this case, to help revive thoughts on our sacred heritage. I hope Jayasree madam agrees with me.

Unknown said...

Excellent and timely eye opening article on Andal Research.

L.Raghothaman
Chennai 100

Unknown said...

I'm reading again and again....I'm no one to comment and praise...but reading this article gives me great peace of mind.. basically I'm very much attached to aandal and happenings made me so much disturbed... only after reading this I feel peaceful...once again I congratulate you ...my father padmasree.dr.R.vasudevan told me to register his appreciations and overwhelming happiness....this has to be published in magazines for wider reach..this should reach all.thanks to my Chittappa Mr.baskar who introduced your blog to me.. thanks a lot.you have done a great service....pranaams.

Jayasree Saranathan said...

Dear All,

My next article on Vairamuthu's article has been posted. Title : ஆண்டாள் தமிழை ஆண்டாள்! ஆனால் வைரமுத்து தமிழை ஆண்டாரா?
Link: https://jayasreesaranathan.blogspot.in/2018/01/blog-post_28.html

Its past midnight in my place. I will reply to comments tomorrow. Please bear with me.

Siva said...

Another excellent and very detailed analysis madam. Kudos to you for this wonderful details. Hope someone close to him show your write up and make him to understand and repent on what he has done. Siva

Unknown said...

Your article is amazing and thought provoking.Your write up is a healing balm to my wounded psyche.
Appreciate it if you can send it to Dinamani as a published article to show Vairamuthu that his views and statements are offending and have hurt so many of us.

Jayasree Saranathan said...

Agree with you Mr Raghunathan. I don't think none of our readers / commenters have exceeded the civil limit in their comments. The name calling is of course there but we can understand the reason. It is also true that no one here had taken it far. I am sure the decorum will be maintained.

Jayasree Saranathan said...

Dear Ms Deepa. Thanks a lot for your words. Please convey my pranams to your father Padmasree Dr R.Vasudevan. May God give us the strength to withstand the pains inflicted by the likes of Vairamuthu.

Jayasree Saranathan said...

Thanks Mr Siva. I have sent this and the previous article to Mr Vairamuthu & Dinamani editor via Twitter. They must have seen.

Jayasree Saranathan said...

@unknown. Thank you. I sent the link and a thread containing highlights of this article via Twitter to Mr Vairamuthu & the editor of Dinamani. I dont think they will publish it. I sent to other Tamil newspapers also. We can only remain satisfied that they would have read it. Our aim is that no one should take up this issue in future.

Unknown said...

A lucid explanation of the inner meaning of various events

Paddy said...

What a scholarly rebuttal to that Neech! Will Tamil print media care to publish this ?

Jayasree Saranathan said...

Thanks Mr Saourirajan

Jayasree Saranathan said...

@Paddy
I dont think they will publish this. But we can work towards removing Vairamuthu's article from Dinamani website and archives. We must also demand that Vairamuthu does not include this article in his upcoming book. His article must be put into dustbin.

Unknown said...

Madam you have made my mind very calm. I was so agitated and admitted in Billroth Hospital chennai. 3 days i wa there and discharged. I dont know the details tamil/sangakalailayyakiayam etc . But i fave immense faith in our forefathers and ancestors and who are all worshipping Andal as Thayar. ONLY YOU HAVE GIVEN EXCELLENT RESEARCH WORK AND GAVE FITTING REPLY TO VAIRAMUTHU. cAN YOU PLEASE FORWARD THIS TO VELUKUDI KRISHNAN, aNANTHA PADMANABACHAR, AND sRIVILLIPUTHUR JEER SWAMY AND ALL vISHANV MAUTTS.
i HAVE BEEN WATCHING sRIVILLIPUTHUR JEEYAR WHO EVEN THREATENED VAIRAMUTHU AND THEN APOLOGISED. bUT WHEN SUN TV WAS INTERVIEWING HIM, he could not answer properly. Why there cant be a meaning as Vairamuthu asked? He Couldn't give fitting reply. Had he read your article he could have thrown everything before SUN TV AND ENTIRE TAMIL NADU WOULD BE KNOWING THIS. pL GET THIS PUBLISHED IN Hindu,Dinamani,Dinamalar and other tamil news papers also, so that TRUTH WILL COME TO LIGHT AND VAIRAMUTHU HAS NOT AT ALL DONE ARRAYCHI. HE SHOULD TAKEN OPEN APOLOGY FOR TAMIL LANGUAGE AND LITERATURE ALSO FOR HIS MISGIVINGS.
THANKS A LOT. cAN YOU INFLUENCE THROUGH YOUR FRIENDS AND WELL WISHERS TO GET HIS PUBLISHED IN ALL TAMIL DAILIES. TRUTH MUST SUCCEED.
YOURS LOVINGLY K.K.RANGARAJA DASAN (72 YEARS).

radha said...

இதுமாதிரியான பதில் வைரமுத்துவின் கருத்துக்கு இதுவரை யாரும் தரவில்லை.
உங்கள் கருத்து மற்றும் பதில் சரியான சவுக்கடி. ஒன்றுக்கு கூட அவரால் பதில் தர முடியாது. இனிமேலாவது அவர்கள் ஆன்மீகத்தில் நுழையாது இருக்கட்டும். ஆண்டாளை அரசியல் ஆக்க பார்க்கிறார்கள். பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார்கள். திரையுலகை சேர்ந்தவர்களைகொண்டு குறிப்பாக பாரதிராஜா போன்றவர்களைக்கொண்டு, ஆயுதம் எடுப்போம் என்று மிரட்டி பார்க்கிறார்கள். நன்றாக பார்க்கட்டும். உங்கள் கருத்துகளுக்கு என் நன்றி. ஸ்ரீ ஆண்டாள் உங்களுக்கு சகல மங்களங்களையும் அருள்வாராக.



Karthigeyan said...

Excellent work Smt. Jayashree Ji.

Jayasree Saranathan said...

திரு ரங்கராஜ தாசன் அவர்களுக்கு நமஸ்காரம்.

நீங்கள் அடைந்த மன உளைச்சல் போலவே பலரும் துன்பப்பட்டனர். இன்னும் துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். மனம் ஆறவில்லை. அதிலும் வைரமுத்துவின் முழுக் கட்டுரையை 21- ஆம் தேதிதான் நான் படித்தேன். படித்தது முதல் இன்று வரை என்னால் சாப்பிடக்கூட முடியவில்லை. தூங்க முடியவில்லை. புலம்பிக் கொண்டே இருக்கிறேன். இந்த நாராசக் கூட்டத்திடையே பிறக்க நான் எவ்வளவு பாவம் பண்ணியிருக்க வேண்டும் என்று நொந்து கொள்கிறேன். என்னைப் போலவே நீங்களும், பலரும் தவிப்பது கண்கூடாகத் தெரிகிறது. நடப்பவையெல்லாம் கலி முற்றுகிறது என்பதைத் தெரிவிப்பதாக இருக்கிறது.

வைரமுத்து கட்டுரையை வெளியிட்ட தருணத்தில்தான் யுகங்கள் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரையை முடித்தேன். நான் ஆராய்ந்ததில் தெரிய வந்தது என்னவென்றால், கலியில் அதர்மம் அதிகரிக்க அதிகரிக்க, கூடவே ஒரு விழிப்புணர்வும் வளர ஆரம்பிக்கும். அந்த விழிப்புணர்வின் காரணமாக தர்மம் தலை தூக்கும். அதனால் அதர்மம் குறைய ஆரம்பிக்கும். இந்த நிலை அப்படியே தொடர்ந்து, தர்மம் அதிகரித்து க்ருத யுகம் ஆரம்பிக்கும். இதை விஷ்ணு புராணம் சொல்கிறது.

From Vishnu puranam (4-24)
“.. the minds of those who live at the end of the Kali age shall be awakened, and shall be as pellucid as crystal. The men who are thus changed by virtue of that peculiar time shall be as the seeds of human beings, and shall give birth to a race who shall follow the laws of the Krita age, or age of purity.”

மேலும் இங்கே படிக்கலாம் https://jayasreesaranathan.blogspot.in/2018/01/divya-and-dharma-two-sides-of-yuga_21.html

அதனால் நடப்பவை எல்லாம் அந்த விழிப்புணர்வைத் தரவே என்று ஆறுதலடையுங்கள்.
வைரமுத்து, தினமணி ஆசிரியர், மற்றும் நீங்கள் குறிப்பிட்டுள்ள பத்திரிகைகளின் ட்வீட்டர் முகவரிக்கு இந்தக் கட்டுரைகளை அனுப்பியுள்ளேன். படிப்பவர்களாகிய நீங்களும் எல்லோருக்கும் பரப்புங்கள். மடத் தலைவர்களுக்கும் அனுப்புங்கள். பெரும்பாலான ஆச்சரியார்கள் WhatsApp, Internet connection கொண்டவர்கள் அல்லர். நேரிடையாகத்தான் அவர்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

Jayasree Saranathan said...

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ராதா அவர்களே.

Jayasree Saranathan said...

Thank you Mr Karthigeyan

bakan said...

B.Kannan, New Delhi, bkan42@gmail.com
தங்கள் பதிவு ஒரு சரியான சாட்டையடி.மனமாற வரவேற்கிறேன். தங்களிடமிருந்து ஒரு தகவல் வேண்டும்.பதிவில் குறிப்பிட்டுள்ள "வில்லிபுத்தூர் விளக்கு" புத்தகம் எங்கு கிடைக்கும் என்பதைத் தெரிவிப்பீர்களா.. அதைப் படித்துணர விருப்பம். தங்கள் பதிலை ஆவலுடன் எதிர்நோக்கும், கண்ணன், புது தில்லி

Jayasree Saranathan said...

நன்றி திரு கண்ணன் அவர்களே. வில்லிபுத்துர் விளக்கு புத்தகத்தின் அட்டைப் படத்தை கட்டுரையில் கொடுத்துள்ளேன். கிளிக் செய்து பெரிதாக்கிப் பார்க்கவும். ஸ்ரீவில்லிபுத்துர் ஆண்டாள் கோயில் டிரஸ்ட் வெளியீடு. கோயிலில் விசாரிக்கவும்.

radha said...

உங்கள் கட்டுரையை 13 பேர்களுக்கு இதுவரை அனுப்பியுள்ளேன்.
என் பெயர் எஸ். விஜயராகவன் -ராதா என்பது என்னுடைய ஓவியங்களுக்கு நான் வைத்துக்கொண்டிருக்கும் புனை பெயர். ராகவதாசன் என்பதன் சுருக்கம். உங்கள் அடுத்த கட்டுரையையும் வாசித்தேன். அபாரமான ஆராய்ச்சி. நன்றிக்கு நன்றி. நாங்கள் அல்லவே நன்றி சொல்லவேண்டும்

Jayasree Saranathan said...

மிக்க மகிழ்ச்சி திரு விஜயராகவன் அவர்களே

ஜீவி said...

திருமதி ஜெயஸ்ரீ அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். வைரமுத்து ஆண்டாளை பற்றி தரக்குறைவாக பேசியது மிகவும் ஈனத்தனமான செய்கை. அப்போது முதல் அதை கண்டித்து எழுதிய பல்வேறு உரைகள் படித்தேன். ஆனால் தாங்கள் எழுதிய உரை எல்லாவற்றிற்கும் சிகரமாக உள்ளது. இது அவருக்கு புரியோமோ என்று சந்தேகமாக உள்ளது. தமிழில் மேம்புல் மேயும் அவர் இந்த விளக்கவுரை படிப்பதற்கு தகுதி இல்லாதவர்.

Jayasree Saranathan said...

@ Unknown

தங்கள் கருத்துக்கு நன்றி. வைரமுத்துவுக்குப் புரிகிறதோ இல்லையோ, அவரைப் பற்றி மற்றவர்களுக்குப் புரிதல் ஏற்பட்டால் மகிழ்ச்சி.

Unknown said...

Amazing research work.Thanks. Did you receive any retweet or reply from this guy?. I agree with you that he neednot apologize as he has already done the damage (for himself). He will and he should pay for it. Time is not far off.

Jayasree Saranathan said...

Thanks Mr Gopal Doraiswamy.

They must have read, as others also tweeted this and the other article on Andal to Vairamuthu and Dinamani editor. They will pretend as though this kind of counter arguments never exist.

On the other part of your comment that Vairamuthu should pay for it, I am reminded of an episode from Uttara khanda of Valmiki Ramayana. In the chapters dealing with the reign of Rama, there comes an incident of a dog beaten up by a person for the reason that it was lying on the road on his way while he was seeing alms. The person accepted his guilt and was ready to face any sentence. When Rama asked the dog what punishment to give that person, it said that he can be made the head of the family.

The justification is as follows: The dog says that though it was born as a noble person in the previous birth and had done many good things, it was born in the current birth as a dog and suffer like this. This shows that it had done some papa karma inspite of many good karmas in the previous birth. But this man who is by nature angry, impious, cruel, ignorant and degrades others shall degrade his seven generations up and down. If he is made the chief of his family, his bad temperament will reflect on all his duties (as head of the family) and actions. That will bring wrath on all the seven generations in his family chain. That is the apt punishment for him - by whose actions his descendants are also going to carry the burden of his papa. Rama accepted this suggestion by the dog and made the man the chief of the family.

This fits in exactly with the current times of all those at the helm from TV shows to film industry to politics. They are at the helm and hurling abuses at Vaidhika matham and its sacred symbols like Andal and Acharyas. They wield the power to abuse us and belittle our matham. The effect of what they do are not only going to come back to them but also going to enter their lineages who are going to suffer beyond description. This is Rama neeti.

Chapters 70 and 71 of Uttara khanda deal with this story.

Colossal Hindu Dharma said...

An amazing article Madam ! Wonder how Sri Andal has transformed thro you to give such befitting reply to the Lyricist. The real truth is this entire event was pre planned one to defame our established beliefs and sentiments. lot of requests were pouring to Dinamani much prior not to conduct this event especially with this Atheist Poet. Sources say both Vaidhya and this Poet may be backed by some external forces planned to do it in auspicious Marghazi Month for HER. It really pains and none of us are able to do even our routine work or sleep. Even someone wishes to sleep it feels that our Matha Andal stands next to us and cries in HER child form. Several young girl children only known that their Thayar was defamed and keep praying before HER for some solace to them. ”Arasan Andru Kondran Deivam Nindru Kollam” - says one famous Tamil Proverb. It also really pains to see our elderly Ladies in the streets on Satvik Protest almost three weeks now. Friends feel if Dr JJ was alive then she would put this Atheist in bay by now. It was very inspiring to read both your articles on Vairamuthu and one on Dr JJ death written last year. Pray Almighty to give you abundant prosperity with excellent health to serve our Shanthana Dharma as much as possible. Good luck to your son for more achievements in Aviation and dreams. Namaskaram ��

Unknown said...

A Srivaishnavite who is extremely hurt by Vairamuthu's writing has become a little peaceful after reading your above and the other related articles. He has now taken your call to all asthigas to spread the facts to all people seriously and has been endeavouring to compile your writings on the matter and distribute as a small booklet ( free of cost) to a targetted group of serious thinkers so that the future generations will not be misguided by such trash.

R Parthasarathy

Jayasree Saranathan said...

Thanks Mr Parthasarathy. My namaskarams to you.

Chudamani Srinivasan said...

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

ragunaidu007 said...

ஆண்டாள் திருவடிகளே சரணம். வாழ்க நீர் அம்மா, எந்நாளும் எல்லா வளங்களுடன்