தலையாய வேலையாய் ராவணன் படம் பார்த்தாயிற்று.
தலையாய கடமையாய் அதைப்பற்றி ப்ளாக் எழுதி விடுகிறேன்.
ரிலீஸ் ஆன மூன்றாம் நாளான இன்று, ஞாயிற்றுக் கிழமை நான் சென்ற சென்னை தியேட்டர் ஹவுஸ் புல் ஆகவில்லை என்பதே படம் எப்படி என்று சொல்லிவிட்டது. இடை வேளையில் எங்கள் ரோவில் இருந்தவர்கள் காலி செய்து விட்டார்கள். நாங்கள் மட்டும் தான் எங்கள் ரோவில். என் பசங்களும் கிளம்பி விட்டார்கள். ஆனால் நான் பிடிவாதம் பிடிக்கவே அவர்கள் மீதிப் படத்தையும் பார்க்க வேண்டியதாயிற்று. ராவணனுக்கும் இந்தப் படத்துக்கும் என்ன சம்பந்தம் என்று கண்டு பிடித்திட வேண்டும் என்று நான் படம் முடியும் வரை பார்க்க விரும்பினேன். மணி ரத்தினம் படத்தை இதற்கு மேலே பார்ப்பதற்கு அவார்ட் கொடுப்பதாக இருந்தால் பார்க்கலாம் என்பது என் பசங்கள் அபிப்பிராயம்.
க்ளைமாக்ஸ் சீன் ஒன்றுக்காக இரண்டரை மணி நேரம் படம் பார்க்கத் தயாராக இருந்தால் இந்தப் படத்தைப் பார்க்கப் போகலாம். க்ளைமாக்ஸ் சீன் ஒன்றில்தான் படத்தோடு ஒன்றி ஏதோ படம் ஒன்று பார்க்கிறோம் என்ற பீலிங் வருகிறது. மற்றபடி முழு படமும், என்னவோ ஸ்டில் படங்களை ஒட்டி பயாஸ்கோப் பார்த்த மாதிரி இருக்கிறது. characterisation, character justification, யார், எதற்கு, என்ன, ஏன் செய்கிறார்கள் என்று ஒரு மண்ணும் புரியாது - ஏதாவது இருந்தால் தானே புரிவதற்கு? இதுதான் மணிரத்தினத்தின் முத்திரை என்று முன்னமே தெரிந்ததுதான். ஆனால் அது என்ன ராமாயண கனெக்ஷன் என்ற மண்டைக் குடைச்சலால் படம் பார்க்கப் போனேன். ராமாயணம் மணியின் காலை வாரி விட்டது.
Hype கொடுப்பதற்கு ராமாயணம், ராவணன் என்று அலைந்திருக்க வேண்டாம்.
தான் என்ன காரக்டர்களை நினைத்திருந்தாரோ அவர்களை ஒழுங்காக ப்ரெசென்ட் செய்திருக்கலாம். கடமையில் கருத்தான போலீஸ் ஆபீசர். பழி வாங்க அவர் மனைவியை வில்லன் கடத்தி விடுகிறான். அவளிடம் சலனப்ப்டுகிறான். வில்லன் பக்கம் இருக்கும் நியாயங்களும் அந்த மனைவிக்குத் தெரிய வருகிறது. அவளிடம் வில்லனுக்கு உள்ள soft கார்னரால் ஆபிசரை பிழைத்துப் போக விடுகிறான். ஆனால் ஆபீசர் அவனை எப்படியாவது முடித்துவிட மனைவியைப் பகடையாக உபயோகப்படுத்துகிறான். இதுதான் கதை. இதை அமர்க்களமாக எடுத்திருக்கலாம்.
தேவையில்லாமல், ராமன், ராவணன், பக்ஷி (ஜடாயு?) கார்த்திக், தூது என்று - ராமாயணத்திலிருந்துதான் கதையைப் பின்னினேன் என்று சொல்லிக்கொண்டு, கதையை அதற்கு ஏற்றபடி build-up கொடுக்காமல் சொதப்பி இருக்கிறார்.
பொதுவாகவே ராமனிடம் நெருங்கக் கூடாது என்று சொல்லுவார்கள். நெருங்கினால் அவதிதான். ராமாயணத்திலிருந்து எடுக்கிறேன் என்று நினைத்துக் கொண்டு, லாஜிக்கும் இல்லாமல், எந்த காரக்டருக்கும் justification பண்ணாமல், எந்தக் காட்சியிலும் படத்துடன் ஒன்ற முடியாமல் அபத்தமாகப் படம் எடுத்திருக்கிறார். லோகாஷுன் ஒன்றுதான் சொல்லிகிறபடி இருக்கிறது.இசையைப் பொறுத்தவரை ரஹ்மானின் செம்மொழி பாடலே தேவலை என்று சொல்கிறபடி செய்திருக்கிறார்.
ராவணன் டைட்டிலையும், ராமாயணத்தையும் பப்ளிசிடிக்காக மணி ரத்தினம் பயன் படுத்தினார் போலத் தெரிகிறது. ராவணன் என்று டைட்டில் போட்டு விடவே, ராமாயணத்துடன் ஒற்றுமை உள்ளதாக காட்டிக்கொள்ள சம்பந்தம் இல்லாத டயலாக்குகள் ஏராளம். தன் ஊர் மக்களைக் காப்பாற்ற கொலை பாதகச் செயல் செய்ய வில்லன் தயங்காதவன். அதனால் அவனை ராவணன் என்று சொல்வார்களாம். இராமாயண ராவணன் அப்படிப்பட்ட செயல்களைச் செய்தா கொடியவன் என்று பெயர் எடுத்தான்? மணமானப் பெண்ணைக் கடத்தியது ஒன்றுதான் ராமாயணத்துடன் ஒத்துப் போவது. மற்றபடி, கஷ்டப்பட்டு ராமாயணத்தை ஆங்காங்கே இழுத்து, படத்தையும், வசனத்தையும் கேலிக்கூத்தாக ஆக்கி விட்டிருக்கிறார்கள். இயல்பாகவே, சொந்தக் கற்பனையுடனேயே திரைக் கதை, வசனம் அமைத்திருக்கலாம்.
தமிழ் நாட்டில் விகரமுக்காக இந்தப் படத்தைப் பார்க்க வருகிறார்கள் என்று நினைக்கிறேன். விக்ரம் வரும் ஓரிரு இடங்களில்தான் தியேட்டரில் கொஞ்சம் சலனம். ஆனால் விக்ரமை எப்படி உபயோகப் படுத்திக்கொள்ள வேண்டும் என்று மணி ரத்தினத்துக்கு தெரியவில்லை. அவர் ஐஸை மட்டுமே நம்பி உள்ளார் போலத் தெரிகிறது. மணியின் தமிழ் பட நாயகிகளின் track record -உம் இதை மெய்ப்பிக்கிறது. தொடுசுவாக, மகா பாரதம், ராமாயணம் என்று நம்புகிறார். தளபதியில் காட்சிகள் ஒற்றுமை ஓரளவாவது இருந்தது. ராவணனில் வசனத்தின் மூலம் ஒப்புமை காட்ட முயன்றுள்ளார். ஒப்புமை இல்லாததால், நாம் பார்ப்பது அபத்தக் களஞ்சியமாக உள்ளது. ராமாயணத்தையும் justify செய்யவில்லை. இந்தக் கதையையும் justify செய்யவில்லை.
படம் ரிலீஸ் ஆன முதல் நாளே 20 கோடி வசூல் என்று yahoo news வந்தது. படத்தின் பட்ஜெட்டே 50 கோடி என்றும் படித்தேன். எப்படியாவது பத்து நாட்கள் ஒட்டி, போட்ட பணம் எடுத்துவிட்டு, வெற்றி என்று சொல்லிவிடுவார்கள். அதற்கப்புறம் எந்த தியேட்டர் என்று தேட வேண்டாம். ஹாசினி பேசும் படத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்றும் சிகாசினி அம்மாவை நம்ப வேண்டாம் (அவங்க படமாச்சே). கவலைபடாதீர்கள். RAj TV படத்தை வாங்கியிருக்கிறார்களாம். சீக்கிரம் பார்த்துவிடலாம்.
***************
Updated on 23-06-20`10.
From
http://www.ibosnetwork.com/newsmanager/templates/template1.aspx?a=22132&z=4
Tuesday, June 22, 2010
Let's try to sort some things out about Abhishek Bachchan, Aishwarya Rai and especially the heralded 'genius' Mani Ratnam who has been offering ambiguous answers to the public about his Ramayan reference of Raavan. If according to Mani Ratnam, even Ram is not above questioning, then here's a basic question: how come Mani Ratnam and this crew are above questioning?
You don't name a movie Raavan by accident Mr. Ratnam. Raavan is not a common name, nor one you created having thought of it one fine day randomly. And there is no such thing as 'Raavanan'. The name is Raavan and it is from the epic of The Ramayan codified thousands of years ago by the robber turned scholar Valmiki on the events of Ram, born in Suryavansh and the Prince of Ayodhya.
The question the Indian public needs to ask is why invert the Ramayan? These people (Mani Ratnam, Aishwarya Rai, Abhishek Bachchan) either believe Ram was God or they don't. If they believe he was, then they have been committing blasphemy questioning Ram and justifying Raavan. If they don't, then they are committing copyright violation...on Mr. Valmiki's work. Which is it?
Because Valmiki clearly codified that Ram is the embodiment of the 'Maryada Purushottam' (the alpha male: the best of man) of civilization. Ramayan is the text of ideal behavior of man within the context of civilization. It represents what the Indian civilzation was and can be at its best, from the profound simplicity of Gurukul to invasion across the Ocean breaching it, to the characteristic of sacrifice that is intrinsically Indian. Dashrath didn't force Ram to go into exile. He chose to. Nobody forced Sita to goto exile once it was Ram's exile. Sita chose to. The Ramayan is about choices and consequences and how Indian men and women at their best respond to them. It is to text what the edicts of Ashok Maurya are to the notion of Indian empire, an epic among epics describing a time of India at its zenith. Not some trivial piece of work that can be compressed in a 2 hour movie featuring wannabes.
And what Mani Ratnam's work tries to do is not just interpret the Ramayan but cast an inversion onto it, which is the central problem with the movie apart from the casting of Aishwarya Rai, not just any editing issues that Amitabh Bachchan keeps harboring on. Not that there weren't any editing issues or that Abhishek Bachchan's Hindi delivery isn't pathetic. It is. But that's not the central problem. We literally have an 'ulta ramayan' being advanced here. So Ratnam gets 'Ram' to be a liar, 'Lakshman' and crew to be 'rapists'. Aishwarya Rai pretending to be 'Sita' pretending to be going all googly-eyed for 'Raavan'. Uh huh. In some ways it's true that whatever Mani Ratnam's Raavan is, it sure as hell doesn't have anything to do with the real Ramayan. It may have to do with a number of things going on in Ratnam's head but we won't get into that right now.
But let's go back and stipulate the worst case scenario for the purpose of making the point against his hackjob attempt here in this 2 year epic disaster. Let's say that there is no God and Ram was not God. Then from the book on the acts of God, Ramayan turns much into a human epic like Odyssey or The Iliad are from the ancient Greece. Fine, but it is still an epic, an original epic by a genius.
But that genius was not Mani Ratnam nor Kambh in 12th century AD(whose Ramavataram is actually nowhere near as subvertive an attempt), but Valmiki centuries before 0BC, who actually and originally brought forth The Ramayan which has stayed for thousands of years. That's genius. Genius does original work which has staying power beyond a few weeks. Genius doesn't steal from others' works, inverts them and then tries to take credit for it; as these people seem eager to. Surprisingly nobody has questioned them on this. But then again, knowing the orientation of Indian media, it is not surprising.
You don't interpret Da Vinci's Mona Lisa, by giving it a mustache, and then go around thinking, or your supporters claiming you're a genius for it. If Mani Ratnam is a genius, as his supporters in media and industry want Indian public to believe, let him create an original work of his own that can stay for thousands of years like Mr. Valmiki's has. Good luck. But his odds of pulling that off are not looking very high.
Because to reinterpret The Ramayan Mani Ratnam, you have to understand it first.