Monday, September 23, 2019

My book critiquing Vairamuthu's article on Andal

Sharing the happy news with the readers that my book critiquing the article written by Poet Vairamuthu on Andal had been published recently on 5th September 2019 and now made available for reading in print or e-book version. The book is in Tamil and has been brought out by Rare Publications.

(Click the pic to enlarge)


The cover picture of the beautiful, young and innocent looking Andal made by the famous artist Sri Keshav, melts our hearts of how Vairamuthu could think of maligning her. The various insinuations by Vairamuthu have been aptly defused in this book besides giving a concise description of how the controversy developed and spread, to make this book a kind of record for posterity. 

The paperback version can be obtained by sending your postal address to jayasreebooks@gmail.com
The book costs Rs 50 only.

Request the readers to buy a copy for yourself and for gifting to others to  spread awareness. Your patronage helps me to take care of the free distribution of the book to religious institutions and libraries for wider dissemination.

புத்தகத்தைப் பற்றி.....
திரைப்படப் பாடல்களின் மூலம் தனக்கொரு அடையாளத்தைத் தேடிக் கொண்ட கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள், தமிழை ஆற்றுப்படுத்துவதாகக் கூறிக் கொண்டு தினமணி நாளிதழில் தொடர் கட்டுரைகள் எழுதி வந்தார். அவற்றுள் ஒன்று 'தமிழை ஆண்டாள்' என்னும் 'ஆய்வுக்' கட்டுரை. 2018-ஆம் ஆண்டு ஜனவரி  7- ஆம் தேதி அக்கட்டுரையை அவர் வாசிக்க, அதற்கு மறுநாள் தினமணி பத்திரிகையில் அது வெளியிடப்பட்டது. ஆண்டாள் தமிழை ஆண்ட பாங்கினைக் கூறுவதாக இந்தக் கட்டுரைக்கு அவர் தலைப்பிட்டிருந்தாலும், ஆண்டாளின் குலம், கோத்திரம் முதலியவற்றை ஆராய்ந்து அவள் ஒரு தேவதாசி என்ற முடிவுக்கு வந்து தமிழை ஆற்றுப்படுத்தினார் வைரமுத்து!
இதைக் கேட்டு வெகுண்டனர் ஒரு சாரர். அவர்களை எதிர்த்து வைரமுத்துவுக்குத் தோள் கொடுக்க வந்தனர் இன்னொரு சாரர்.  இவர்களுக்கிடையே வைரமுத்து எழுதிய முழுக் கட்டுரையுமே அபத்தமும், பொய்யுமாக இருக்கிறதே என்று வருந்தினர் ஆண்டாளைப் பயின்றவர்கள்.
மூவாயிரம் ஆண்டுகாலத் தமிழின் தொன்மையை ஆற்றுப்படுத்துவதாகக் கூறிக் கொண்டுதொல்காப்பியர் முதல் பல பெரியோர்களை பற்றி எழுதி வருவதாகச் சொல்லும் வைரமுத்து அவர்கள் எந்த அளவுக்கு ஆண்டாளை அறிந்திருந்தார்அவ்வளவு ஏன்? எந்த அளவுக்கு அவர் தமிழை அறிந்திருந்தார் என்பதனை அவரது கட்டுரையே பறை சாற்றுகிறது  என்பதை உலகுக்கு நாம் காட்ட வேண்டாமா?

அது மட்டுமல்ல, ஆய்வு சொல்வதாகக் கூறிக் கொண்டு அவர் கொடுத்துள்ள ஆய்வின் தரம் என்ன என்பதை தமிழ் பேசும் நல்லுலகம் அறிய வேண்டாமா? மூன்று மாதங்கள் ஆய்வு செய்த வைரமுத்து ஒரு ஆய்வினை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை அறிந்திருந்தாரா என்பதைச் சுட்டிக் காட்டுவது மட்டுமல்லாமல், அவர் எந்த அளவுக்கு ஆண்டாள் பாடிய தமிழை அறிந்திருந்தார், எந்த அளவுக்குத் தொன்மைத் தமிழை அறிந்திருந்தார்  என்பவற்றையும் வெளிக்காட்டுவதே  இந்தப் புத்தகத்தின் நோக்கம்.