Thursday, February 6, 2020

ராமன் பரம்பரையில் வந்தவர்கள் சோழர்கள்- கல்வெட்டு ஆதாரங்கள் (பகுதி-1) (காணொளி)


ராஜராஜன் தமிழன் தானா என்னும் முந்தின காணொளியைத்  தொடர்ந்து, இந்தக் காணொளியை நான் வெளியிட்டுளேன். இதில் சோழர்கள் ராமன் பரம்பரையில் வந்தவர்கள் என்று சொல்லும் வீர ராஜேந்திரன் கல்வெட்டுச் செய்திகளைக் கொடுத்துள்ளேன்.



வடமொழியில் 419 வரிகளில் எழுதப்பட்டிருக்கும் இந்தக் கல்வெட்டில் சுதாஸ், சம்பூகன் போன்றவர்களைக் குறித்தும் எழுதப்பட்டுள்ளது. ராமனைப் பற்றி மிக விரிவாக எழுதப்பட்டுள்ளது. அந்த ராமன் வம்சத்தில் சோழன் (முதல் சோழன்) பிறந்தான் என்று சொல்லப்பட்டுள்ளது.


சோழன் தென் திசை நோக்கி வந்தான் என்றும் காவிரி பாயும் இடத்தில் குடியேறினான் என்றும், ஆரிய வர்த்தத்திலிருந்து பிராம்மணர்களை வரவழைத்துக் குடியேற்றினான் என்றும் கல்வெட்டில் எழுதப்பட்டுள்ளது. இது தொடர்பாக உள்ள மரபணு ஆராய்ச்சிகளைக் காட்டி, பிராம்மணர்கள் வந்தேறிகள் அல்ல என்றும், ஆதிக் குடிகளிலிருந்துதான் வந்தவர்கள் என்றும் நிரூபித்துள்ளேன். பார்க்கவும், பகிரவும். 


No comments: