Friday, February 7, 2020

ராமன் பரம்பரையில் வந்தவர்கள் சோழர்கள்- இலக்கியச் சான்றுகள் (பகுதி-2) (காணொளி)

பகுதி 1

சோழர்கள் ராமன் பரம்பரையில் வந்தவர்கள் என்று சொல்லும் இலக்கியச் சான்றுகளைக் காட்டும் இந்தக் காணொளி, அந்தச் சான்றுகள் தசரதன் பெயர்க் காரணம், முதுமக்கள் சாடியை முதலில் அறிமுகப்படுத்தியவன் நாபாகன் என்னும் இக்ஷ்வாகு அரசன்தான் என்பது போன்ற செய்திகளையும் தருகிறது.



ராமனைக் குறிக்கும் இலக்கியச் சான்றுகள் அவனைத் தூங்கெயில் இருந்தவன் என்றே கூறுகிறது. இதற்கு, தொங்கும் மதிலை அழித்தவன் என்று பொருள். புறநானூறு முதல் உலா இலக்கியங்கள் வரை சொல்லப்படும் இந்தக் கருத்து, மூன்று மதில்களை உடைய ராவணன் நகரத்தைக் குறிக்கிறது என்ற செய்தியை ஆதாரத்துடன் விளக்குகிறது இந்தக் காணொளி


மேலும் திரேதா யுகத்தில் பிறந்த ராமன் எவ்வாறு சோழர் பரம்பரையினன் ஆனான் என்பதையும், துஷ்யந்தன் மகன் பரதனுக்குப் பிறந்த முதல் சோழன் எவ்வாறு ராமன் பரம்பரையுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டான் என்பதையும் விவரிக்கிறது.



அந்த விவரங்கள் மூலம் தமிழகம் உட்பட நம் பாரத தேசமே தந்தை வழியில் ஒன்று பட்ட மக்களைக் கொண்டது என்பதையும் விளக்குகிறது.


காணவும், பகிரவும்.

4 comments:

Srinivasan Ramakrishnan said...

கேள்வி 1: இராமர் இலங்கைக்கு பாலம் அமைத்ததை விவரிக்கையில் தச யோஜன விஸ்தீரனம், ஷத யோஜன நீளம் என்கிறார் வால்மீகி.அது ஒரு கற்பனை. 100 மைல் நீளம் 10 மைல் அகலத்தில் எங்கேயாவது பாலம் கட்ட முடியுமா? அதுவும் இலங்கைக்கு செல்ல அவ்வளவு பெரிய பாலம் தேவையா என்று கரச ஒரு காணொளியில் கூறியுள்ளார். இலங்கை அவ்வளவு தொலைவில் இருந்ததா இராமாயண காலத்தில். அது பற்றி எங்கேயாவது சொல்லப்பட்டுள்ளதா?
கேள்வி 2:சமீபகாலமாக வடசொல், வடமொழி என்றால் பிராகிருதம், பாலி என்று கூறுகிறார்கள். ஸமஸ்கிருதம் தான் வடமொழி வடசொல் என்பதற்கு வலுவான சான்றுகள் ஏதேனும் உள்ளதா? வடமொழி பெயர்க் காரணம் என்ன? ஆலமரம் தொடர்பு காரணமாக அந்த பெயர் என்று எண்ணுகிறேன். ஆனால் மிகச் சரியான காரணம் தெரியவில்லை.
நன்றி.

Jayasree Saranathan said...

@ Srinivasan Ramakrishnan

கேள்வி 1:
வால்மீகி எழுதியது கற்பனை அல்ல. அது ஷத யோஜனை விஸ்தீரணமே.
ஒரு யோஜனை என்பது என்ன அளவு என்பதில் மயன் அளவீட்டுக்கும், விஸ்வகர்மா அளவீட்டுக்கும் வேறுபாடுகள் உள்ளன. அதுமட்டுமல்ல ஒவ்வொரு பயன்பாட்டுக்கும் அளவீடுகள் வேறுபடுகின்றன. இதைப் பற்றிய என்னுடைய கட்டுரையை இங்கே காணவும். https://jayasreesaranathan.blogspot.com/2008/10/continuing-civilization-from-harappa-to.html

அந்தக் கட்டுரையில் அனுமன் கடந்த 100 யோஜனை அளவைக் குறிப்பிட்டுள்ளேன். அதிலிருந்து இங்கே தருகிறேன்.

இது ஆங்கிலேயர் வருவதற்கு முன் நம் நாட்டில் இருந்த அளவீடு. தூரத்தை அளவிடுவது
24 அங்குலம் = 1 முழம்
4 முழம் = 1 தனுசு
2 தனுசு = 1 தண்டம்
50 தண்டம் = 1 கூப்பிடு
4 கூப்பிடு = 1 யோஜனை

கூப்பிடு தூரம் என்பது ஒருவர் உரத்து கூப்பிட்டால் எத்தனை தூரம் வரை கேட்கும் என்பதே. அது எத்தனை தூரம் என்பதை வால்மீகி சொல்லும் ஷத யோஜனை மூலம் தெரிந்து கொள்ளலாம்.
ராமர் சேதுவின் நீளம் 30 கி.மீ
இதையே வால்மீகி 1௦௦ யோஜனை என்கிறார்.
இதை சமப்படுத்துவோம்.
1௦௦ யோஜனை = 3௦, ௦௦௦ மீட்டர்
1 யோஜனை = 3௦௦ மீட்டர்
இது காற்றில் ஒலி செல்லும் வேகம்

இதுவே 4 கூப்பிடு என்று மேலே கண்டோம்.
எனவே
4 கூப்பிடு = 1 யோஜனை = 3௦௦ மீட்டர்
1௦௦ யோஜனை = 3௦௦ x 1௦௦ = 3௦,௦௦௦ = 3௦ கி.மீ
இதுவே ராமர் பாலத்தின் நீளம், அனுமன் கடந்த கடல் தூரம்.
இதன் மூலம் ஒரு கூப்பிடு என்பது 3௦௦ % 4 = 75 மீட்டர் என்று தெரிகிறது

Jayasree Saranathan said...

கேள்வி 2
பாலி இயல்பாக எழுந்த மொழி. பவுத்த நூல்கள் மூலமாகத்தான் இந்த மொழியைப் பற்றித் தெரிந்து கொள்கிறோம். இதைப் பேசுபவர்கள் இன்றைக்கு இல்லை. இதுவே ஆதியில் இருந்த மூல மொழி என்பது என் ஆராய்ச்சியில் தெரிய வந்தது. பாலியிலிருந்துதான் தமிழும், சமஸ்க்ருதமும் உருவாக்கப்பட்டன என்பதே என் கருத்து.

பிராகிருதம் எனபது சமஸ்க்ருதத்திலிருந்து எழுந்தது. ஆங்காங்கே பிராந்திய பாஷையில் சமஸ்க்ருதம் கலந்தும், சமஸ்க்ருதத்தின் திரிபாகவும் எழுந்த பல மொழிகள் பிராகிருதம் எனப்பட்டன. எனவே சமஸ்க்ருதம் என்பது பாலியுமல்ல பிராக்ருதமும் அல்ல.
வட மொழி என்பது சமஸ்க்ருதம். வட சொல் என்பது என்பது வடமொழிச் சொல். தொல்காப்பியத்தில் வட சொல் என்பது இரு விதமாகத் தமிழில் உள்ளன என்று சூத்திரங்கள் உள்ளன. வடமொழியை ஆரிய மொழி என்று திருமூலர் கூறுகிறார். வடசொல் என்று கம்பன் சொல்கிறார். எனவே வட மொழி, வட சொல் என்னும் இரண்டுமே சமஸ்க்ருதத்தைக் குறிப்பன என்று தெரிகிறது.

பின் வரும் கம்ப ராமாயணப் பாடல் மூலம், வட சொல் என்பது வடக்குப் பகுதியில் வழங்கும் சொல் என்று கம்பர் காலத்தில் சொல்லப்பட்டது என்று தெரிகிறது.

நன் சொற்கள் தந்து ஆண்டு, எனை
நாளும் வளர்த்த தாதை
தன் சொல் கடந்து, எற்கு
அரசு ஆள்வது தக்கது அன்றால்;
என் சொல் கடந்தால், உனக்கு
யாது உளது ஊற்றம்?’ என்றான் -
தென்சொல் கடந்தான்,
வடசொல் - கலைக்கு எல்லை தேர்ந்தான் (1741)

ஆதியில் வேத மொழி என்றும், பின்னாளில் ஆரிய மொழி என்றும், பிறகு வடமொழி, வட சொல் என்றும் ஆகியிருக்க வேண்டும். ஆலமரத்துக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. அப்படி சம்பந்தப்படுத்துகிறபடி எந்த ஆவணத்தையும் நான் இன்றுவரை கண்டதில்லை.

South Indian said...

வட விடபி சமீபே - தக்ஷிணா மூர்த்தி ஸ்தோத்திரம்! வட என்றால் பரந்து விரிந்தது என்ற பொருள் இருக்கிறது! வடாம் - எண்ணையில் விரியும் பொருள்! பாரத நாடு வட திசையில் விரிவதால் (மாற்றாக தெண் திசையில் குறுகுவதால்) அந்த திசைக்கே வட திசை என்று சொல் வந்தது! வட - ஆல மரம்! பரந்து விரிந்த மரம்!