தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு
நெருங்கி கொண்டிருக்கிறது. இந்த வேளையில் குடமுழுக்கை சமஸ்க்ருதத்தில் செய்யக்கூடாது
என்றும் தமிழில்தான் செய்ய வேண்டும் என்றும் ஆர்பாட்டம் செய்து
கொண்டிருக்கிறார்கள். இது தொடர்பான விளக்கங்களைக் காணொளி
மூலமாக மக்களுக்கு எடுத்துச் சொல்ல விரும்புகிறேன். அந்த முயற்சியின் முதல்
பகுதியாக ராஜராஜன் தமிழன் தானா என்ற கேள்விக்கு இந்தக் காணொளி விடை
கொடுக்கிறது.
இதில் முதலாவதாக தஞ்சாவூர் என்பதே
தமிழ்ச் சொல்லா என்று ஆராய்ந்து அது தஞ்சலா
என்னும் சாதகப் பறவையின் பெயரால் அழைக்கப்படுகிறது என்று தெளிவு படுத்தி உள்ளேன்.
தஞ்சலா என்பது சமஸ்க்ருதப் பெயர்!
அடுத்ததாக சோழர் வம்சாவளியை
ஆராய்ந்துள்ளேன். ராஜராஜன் மகன் முதலாம் ராஜேந்திரனின் ஆறாம் ஆண்டில்
வெளியிடப்பட்ட திருவாலங்காடு செப்பேட்டில்
கொடுக்கப்பட்டுள்ள சோழர் வம்சாவளியை சுட்டிக் காட்டியுள்ளேன். அதில் சோழன்
பரம்பரை மனுவில் ஆரம்பித்து
ராமனின் வம்சாவளியுடன் ஒத்துப் போவதைக் காட்டியுள்ளேன். அந்த வம்சாவளியில் சிபியும், அவனுக்குப் பின்னாளில் துஷ்யந்தனும்
வருகிறார்கள். துஷ்யந்தன்-சகுந்தலைக்குப் பிறந்த மகனே பரதன்.
அவனுக்குப் பிறந்த மகன் சோழ
வர்மன் என்பவன். அவனே சோழ தேசத்தையும் சோழ வம்சத்தையும் உருவாக்கினவன் என்பதையும் சுட்டிக்
காட்டியுள்ளேன்.
தொடர்ந்து சோழன் என்றால் என்ன அர்த்தம் என்று ஆராய்ந்துள்ளேன்.
சோழன் என்பதற்குத் தமிழில் பொருள் இல்லை என்பதையும் அது சமஸ்க்ருதத்திலிருந்து
வந்தது என்பதையும் நிரூபித்துள்ளேன்.
இந்த ஆதாரங்களின் மூலம் சோழர்கள்
வடக்கிலிருந்து வந்தவர்கள் என்பது தெளிவாகிறது. அவ்வாறு வந்தவர்களைத் தமிழன் என்பதா? வந்தேறி என்பதா? காணொளியைப் பார்க்கவும். பகிரவும்.