Wednesday, August 31, 2011

Ecological angle to Ganesha worship



Given below is my article in Tamil published in Avani issue of Poojari Murasu, a monthly magazine circulated among temples priests of Tamilnadu. The article is about the ecological aspects connected with the worship of Lord Ganesha.

Usually this lord is found in numerous places particularly near water bodies and at the base of trees such as Peepal and Banyan.



One reason for this can be deciphered from the offerings made to him. The verse starting as "Gajananam" says that Ganesha relishes two fruits namely Kapiththa and Jumbu. 


The uniqueness of these two fruits is that they grow in places where there is underground water. They are called as "Jalanadis". South India is particularly crisscrossed by a net work of underground passages -perhaps formed by oozing lava at the time of formation of the Deccan Plateau. These passages are filled with rain water during the rainy season and at places where water runs for most part of the year, certain tress grow near them. Approximately 50 trees have been identified by Brihad samhitha as growing near these Jalanadis. Where the water flow is abundant and near the surface, ant hills are formed and trees such as Kapiththa and Jumbhu grow in specific distance and direction from the Jalanadi and the anthills.

Therefore protection of these trees helps us in identifying the Jalanadis and to draw water from them. It may be for this reason the fruits of these trees have been identified as offerings to Lord Ganesha. Trees such as Peepal, Banyan and Neem also grow near underground waterways. All these trees have been identified as sacred ones by our ancients. One reason for the sacredness is to protect them as they give valuable clues to identify the water sources.

The protection of anthill where snakes live also seems to have this purpose. The practice of sprinkling milk in the anthills where snakes reside has an ecological reason. In summer the Jalanadis may dry up, thereby making the underground dwelling of the snakes hot enough to drive them out. When people regularly worship the snakes in the anthill by offering milk in the holes, the snake- dwellings would remain cool in summer also. This makes the snakes remain in their dwellings and not venture out posing a threat to people.

-Jayasree

பிள்ளையார் என்னும் இயற்கைக் காவலன்!

பிள்ளையார் வழிபாட்டுக்கென்று தனி இடம் இந்து மதத்தில் இருக்கிறது. ஆனால் அவர் அமர்வதற்கென்று தனி இடம் தேவையில்லை என்று சொல்லும் வண்ணம் எல்லா இடங்களிலும் அவரைக் காணலாம். இன்றைக்கு நகரங்கள் பெருகிவிட்ட நிலையில், மூலை முடுக்குகளில் எல்லாம் பிள்ளையாரை பிரதிஷ்டை செய்து விடுகிறார்கள். ஆனால் முற்காலத்தில் பிள்ளையாருக்கென தனி இடங்கள் இருந்தன. குறிப்பாக மரத்தடியிலும், குளத்தங்கரையிலும், பிள்ளையாரை பிரதிஷ்டை செய்து விடுவார்கள். இதற்கு ஒரு முக்கியக் காரணம் இருக்கிறது. அந்தக் காரணம் நம்மை வாழ வைக்கும் சுற்றுப்புற இயற்கை வளத்தை, நாம் வாழ்விப்பதற்காக ஏற்பட்டது.

அந்தக் காரணம் என்னவென்று தெரிய வேண்டுமென்றால், பிள்ளையாருக்குச் செய்யும் நைவேத்தியப் பொருட்கள் எவை என்று தெரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக எல்லோரும் நினைக்கும் நைவேத்தியப் பொருட்கள் பால், தேன், பாகு, பருப்பு என்று ஔவை மூதாட்டிச் சொன்னவையாகும். ஆனால் இவற்றைப் பெற ஒரளவேனும் முயற்சிகள் செய்ய வேண்டும். எந்த முயற்சியும் இல்லாமல், எளிதில் இயற்கையில் கிடைக்கும் பொருட்களைப் பிள்ளையார் விரும்புகிறார். இதைச் சொல்லும் ஒரு வடமொழி ஸ்லோகம் இருக்கிறது. கஜானனம் பூத கணாதி சேவிதம்என்று தொடங்கும் அந்த ஸ்லோகத்தில், பிள்ளாயாருக்குப் பிடித்த பழங்கள் என்று இரண்டு பழங்களின் பெயர்கள் சொல்லப்பட்டுள்ளன. அவை விளாம் பழமும், நாகப்பழமும் ஆகும். இந்த விவரத்தைக்கபித்த ஜம்பூ பலசார பக்ஷிதம்என்று அந்த ஸ்லோகம் சொல்கிறது. (கபித்தம் = விளாம்பழம், ஜம்பூ = நாகப்பழம் அல்லது நாவல் பழம்).

இந்த இரண்டு பழங்களைத் தரும் மரங்கள், நம் பாரத நாடெங்கும் இயற்கையாகவே ஆங்காங்கே வளருகின்றன. இவற்றுக்குள்ள ஒரு விசேஷம் என்னவென்றால், இவை நிலத்தடி நீர் ஓடும் இடங்களுக்கருகே வளருகின்றன. நமது நாடு வானம் பார்த்த பூமியாகும். வருடத்தில் சில மாதங்களில் பெய்யும் மழை நீரானது பூமிக்குள் சென்று அங்கு நிலத்தடி நீராகத் தங்குகிறது. ஒரு இலையில் நரம்புகள் இருப்பது போல, நமது நாட்டின் நிலத்துக்கடியில் நரம்புகள் போல குறுக்கும் நெடுக்குமாக பாதைகள் இருக்கின்றன. பூமிக்குள் செல்லும் மழை நீரானது இந்தப் பாதைகளில் தங்குகின்றன. இந்தப் பாதைகளை ஜல நாடிஎன்கிறார்கள். அந்த ஜலநாடி சில இடங்களில் பூமிப்பரப்புக்கு அருகிலும், சில இடங்களில் ஆழத்திலும் செல்கின்றன. அவை பூமிக்கருகில் அருகில் இருக்கும் இடங்களில் எறும்புப் புற்று உண்டாகிறது. அந்தப் புற்றுகள் பூமிக்கடியில் ஜலநாடிகளுடன் இணைகின்றன. அங்கு நீர் இருக்கவே மரங்களும் வளருகின்றன. அப்படி வளரும் மர இனங்கள் 50 க்கும் மேல் என்று ரிஷிகள் எழுதி வைத்துள்ளார்கள். அவற்றுள் முக்கியமான இரண்டு மரங்கள் விளா மரமும், நாவல் மரமும் ஆகும்.

இந்த மரங்கள் கண்ணில் பட்டால், அங்கு அருகில் நீரோட்டம் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம். இந்த மரங்களே நீரோட்டத்தை அடையாளம் காட்டும் கருவிகள் ஆகும். எனவே இந்த மரங்களைப் பாதுகாத்தால், நீரோட்டம் எங்கிருக்கிறது என்பதை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.

ஓரிடத்தில் இருக்கும் நிலத்தடி நீரோட்டத்துக்கு ஏற்றாற்போல ஒரு குறிபிட்ட கோணாத்தில், குறிப்பிட்ட திக்கில்தான் இந்த மரங்கள் வளருகின்றன. உதாரணமாக, நாவல் மரத்துக்கு வடக்கில் நாலரை அடி தூரத்தில் கிழக்கு- மேற்காக ஜலநாடி ஓடும். அங்கேஒரு மனிதன்ஆழத்துக்குத் தோண்டினால், நல்ல சுவையுள்ள நீர் கிடைக்கும், ஒரு மனிதன் ஆழம் என்பது அதிக பட்சம் ஆறடி என்பதாகும்.

அது போல நாவல் மரத்துக்குக் கிழக்கே புற்று இருந்தால், அந்தப் புற்றுக்குத் தென்புறத்தே இரண்டு மனித ஆழத்தில் தண்ணீர் கிடைக்கும்.

அது போல விளாமரம் ஒன்று கண்ணில் தென்பட்டதென்றால், அதற்குத் தெற்கில் பெரும்பாலும் ஒரு புற்று தென்படும். அந்தப் புற்றுக்கு வடக்கில்  பத்தரை அடி தூரத்தில் தோண்டினால், ஐந்து மனித ஆழத்தில் நல்ல சுவையான நீர் கிடைக்கும்.

இவ்வாறு மரங்களின் மூலம் நிலத்தடி நீரை அடையாளம் கண்டார்கள். அங்கு நிலத்தைத் தோண்டி சுனைகளும், குளங்களும் வெட்டினார்கள். அந்த நீர் ஆதாரங்களை மக்கள் மாசு படுத்தி விடாமல் இருக்க, அங்கே பிள்ளையாரையும், புற்றுடன் கூடிய மரமாக இருந்தால் நாகத்தையும் பிரதிஷ்டை செய்தார்கள். புற்றாக இருந்தால் அதில் பால் தெளிப்பதன் மூலம், வெயில் காலங்களில் ஜலநாடி வற்றினாலும், அங்குள்ள மண் குளிர்ந்தே இருக்கும், இதனால், புற்றுக்குக் கீழே நிலத்தடியில் வாழும் பாம்புகள் வெளியே வராது. புற்றுக்குப் பால் தெளிப்பதில் இந்த நன்மையும் இருக்கிறது.

பிள்ளையார் வழிபாட்டில், ஜலநாடியை அடையாளம் காட்டும் மரங்களின் பழங்களைப் பயன்படுத்தினால் அந்த மரங்களை மக்கள் அழிந்துவிடாமல் காப்பாற்றுவார்கள் என்ற எண்ணத்தில் இப்படி ஏற்படுத்தி இருக்கிறார்கள். இந்த இரு மரங்களைப் போல அரச மரம், ஆல மரத்துக்கு அருகிலும் நீரோட்டம் செல்லும். ஆனால் அவற்றுக்கு ஒரு தெய்வீகத்தன்மை இருப்பதால் நினைத்த மாத்திரத்தில் மக்கள் அந்த மரங்களை அழிப்பதில்லை. ஆனால் விளாமரத்துக்கும், நாவல் மரத்துக்கும் அந்த மரியாதை கொடுப்பதில்லை. அவற்றை அழித்து விட்டால், நீரோட்டம் கண்டுபிடிப்பது கடினமாகி விடும். இதன் காரணமாக இந்த மரங்களின் பழங்களை நைவேத்தியப் பொருட்களாக ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

இன்று இந்த மரங்களை நாம் தேடிப்பார்க்க வேண்டும். அந்த அளவுக்கு அவற்றை அழித்து விட்டார்கள். அதனால் மக்களுக்குத்தான் தொல்லை. நீரோட்டம் எங்கு செல்கிறது என்று தெரியாததால், ஜலநாடிகள் ஓடும் இடங்களில் இன்று குடியிருப்புகளைக் கட்டி விடுகிறார்கள். மழை பெய்தால், எங்கோ பெய்த மழை நீராக இருந்தாலும், இந்த ஜல நாடிகளில் வந்து சேர்ந்து விடும். அதனால் மழை பெய்து பல நாட்களான பிறகும், வீட்டைச் சுற்றிக் குளம் போல தண்ணீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்படுகிறது. அதற்குப் பிறகு பிள்ளையாரே, பெருமாளே எனக்கு நிம்மதி இல்லையே என்று கேட்டு என்ன பயன்? இயற்கைக்கும் நல்லது, மக்களுக்கும் நல்லது என்று நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்த வழி முறைகளைப் பின் பற்றாததால் வந்த வினை இது. இனியேனும் மரங்களைக் காப்போம். பிள்ளையார் வழிபாட்டில் இருக்கும் இயற்கைப் பாதுகாப்பைத் தெரிந்து கொண்டு மரங்களைப் பராமரிப்போம்.

Related post:-

Science of detecting underground water veins.