Saturday, April 29, 2023

'ராமானுஜ இதிஹாஸம்' புத்தகம் தமிழில் வெளியீடு

 Ramanuja Itihasa என்னும் புத்தகம் 2022 ஆம் வருடம், ஸ்ரீமத் ராமானுஜரது திருநக்ஷத்திரத்தன்று வெளியிடப்பட்டது. அதைப் பற்றி அப்பொழுது ஒரு அறிமுகக் கட்டுரையும் வெளியிட்டிருந்தோம். அதே புத்தகத்தைத் தமிழில் கொண்டுவரவேண்டும் என்ற அவா இப்பொழுது நிறைவேறியிருக்கிறது.

இதற்கு மிகவும் உறுதுணையாக இருந்து, தமிழில் மொழிபெயர்த்த, வாஸுதேவன் தம்பதியருக்கு எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  கலை, இலக்கிய, தமிழ் ஆர்வலரான திருமதி குமுதா வாஸுதேவன் அவர்கள், ஆங்கிலப் பதிப்பின் பெரும்பான்மையான பகுதிகளை மொழிபெயர்த்துக் கொடுத்தார். அவருடன் அவர் கணவரும், ஆடல்மா என்னும் புனைப் பெயரில் கவிதை, கட்டுரைகள் எழுதுபவரும், பட்டிமன்றப் பேச்சாளருமான  திரு வாஸுதேவன் அவர்கள் மொழிபெயர்ப்பில் உதவியாக இருந்தார். வாஸுதேவன் தம்பதியரது அயராத உழைப்பினால், மிகக் குறுகிய காலக் கட்டத்திலேயே இந்தப் புத்தகம் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.

புத்தகத்துக்கு மெருகூட்டும் வண்ணம் அருமையான அட்டைப்படம் வரைந்து கொடுத்த திரு. ஹயவதன் முரளி அவர்களுக்கும் எனது நன்றி உரித்தாகுக.

இந்தத் தமிழ்ப் பதிப்பில், பல கல்வெட்டுச் சான்றுகள், இலக்கிய, ஆராய்ச்சிக் கட்டுரைச் சான்றுகள் பயன்படுத்தப்பட்டாலும், கதை போல படிப்பவருக்கு எளிதாக இருக்க வேண்டி, அந்தச் சான்றுகளது மூலம் கொடுக்கப்படவில்லை. நூற்றுக்கும் மேற்பட்ட அந்த மூலச் சான்றுகளை அறிய வேண்டுவோர், இந்தப் புத்தகத்தின் ஆங்கிலப் பதிப்பில் அவற்றைப் படிக்கலாம்.

ஆங்கிலப் பதிப்பில் இல்லாத பகுதிகளாக இணைப்புகளை இதில் படிக்கலாம். ஜாதிச் சண்டைகளுக்கு மூலக் காரணமான வலங்கை, இடங்கை மோதல்கள், எழுநூறுக்கும் மேற்பட்ட மண்டயம் ஐயங்கார்கள் திப்பு ஸுல்தானால் ஒரு தீபாவளியன்று கொல்லப்பட்டது, ஹிந்து தெய்வங்கள் மீது முகலாய மன்னர்களது மகள்கள் ஈர்க்கப்பட்டது என்னும் இவை ஆங்கிலப் பதிப்பில் இல்லாதவை. இந்த தமிழ்ப் பதிப்பில் இணைப்புகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

ராமானுஜ இதிஹாஸம் என்னும் இந்த உண்மை வரலாற்றை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் பணியில் வாசகர்களாகிய நீங்களும் என்னும் இணையுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இந்தப் புத்தகத்தின் kindle edition: 

https://www.amazon.com/dp/B0C3WL1P94 (Amazon.com)

https://www.amazon.in/dp/B0C3WL1P94 (For India)

https://www.amazon.com.au/dp/B0C3WL1P94 (For Australia)

https://www.amazon.co.uk/dp/B0C3WL1P94 (For UK) 

இந்தப் புத்தகம் அச்சு வடிவில் பெற jayasreebooks@gmail.com என்னும் முகவரிக்கு எழுதவும். விலை: ரூ. 380/- மட்டுமே. தபால் செலவு தனி.