Monday, October 19, 2009

MA in Kalaignar thoughts at Madras University


நதி       எங்கே போகிறது......கடலைத் தேடி
                   நாடெங்கே எங்கே போகிறது......??
 
From

Thursday, October 15, 2009எம்.ஏ கலைஞர் தாட்ஸ்நேற்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் ஜி.திருவாசகம் முக்கியமான இரு கருத்துகளைக் கூறுவதை தொலைக்காட்சியில் பார்க்க/கேட்க நேரிட்டது.


1. இனி சென்னைப் பல்கலைக்கழகத்தின் நிர்வாக மொழியாக தமிழ் இருக்குமாம். முதல் கட்டமாக அனைவரையும் தமிழில் கையெழுத்திடக் கேட்டுக்கொள்ளப்போவதாகத் துணைவேந்தர் கூறினார்.


2. அடுத்த வரியிலேயே, மூன்று புதிய முதுநிலைப் பட்டப்படிப்புகளை அறிமுகப்படுத்துவதாகச் சொன்னார். எம்.ஏ இன் பெரியார் தாட்ஸ், எம்.ஏ இன் அண்ணா தாட்ஸ், எம்.ஏ இன் கலைஞர் தாட்ஸ். (ஆமாம். முற்றிலும் ஆங்கிலத்தில்தான் இந்தப் படிப்புகளின் பெயர்கள் சொல்லப்பட்டன.)


ஜோக்கர்கள்தான் நமக்குத் துணைவேந்தர்களாக வாய்க்கிறார்கள். இது இவரது கண்டுபிடிப்பா அல்லது இவருக்கு முன்னதாகவே கண்டுபிடிக்கப்பட்டு இவரால் நிகழ்த்தப்படுகிறதா என்று தெரியவில்லை.


தமிழில் கையெழுத்து போடுவதுதான் தலையாய விஷயம் என்று நினைக்கிறவர், "முதுகலைப் படிப்பு - கலைஞர் சிந்தனை" என்று சொல்லியிருக்கலாமே?


கையெழுத்து என்பது ஒரு கிறுக்கல். இன்று புதிதாகக் கையெழுத்து போடத் தொடங்குபவர்கள் தமிழிலா, ஆங்கிலத்திலா என்று முடிவு செய்துகொள்ளலாம். ஆனால் பல ஆண்டுகளாக ஏதோ ஒரு மொழியில் கையெழுத்திடுபவர்களை திடீரென தமிழில் கையெழுத்து போடு என்று சொல்வது என்ன அபத்தம்?


அது கிடக்கட்டும். இரண்டு மூன்று நாள்களுக்கு முன்னர்தான் ஜெயலலிதாவும் கருணாநிதியும் யார் பெயரை எதற்கு வைப்பது என்று அடித்துக்கொண்டார்கள். கருணாநிதியின் பெற்றோரின் பெயர்களை ராதாபுரம் பேருந்து நிலையத்துக்கு வைப்பது பற்றி ஜெயலலிதா விடுத்த அறிக்கைதான் பிரச்னையின் ஆரம்பம். அதற்கு கருணாநிதி சரியாகவே பதில் அளித்திருந்தார். இந்த அம்மா முதல்வராக இருந்தபோது ஜெயலலிதா என்றுகூடப் பெயர் வைக்கமாட்டார்கள். 'புரட்சித்தலைவி டாக்டர் அம்மா அவர்களின் காலுக்கு செருப்பு கொடுக்கும் திட்டம்' என்றுதான் பெயர் வைப்பார்கள். எப்போதும்போல கருணாநிதி தன் அறிக்கையின் கடைசியில் sexist remark ஒன்றை வீசிவிட்டுத்தான் போனார். மைசூர் மகாராஜா கொடுத்த ஒட்டியாணம் பற்றிய கமெண்ட் இங்கே தேவையில்லாதது.


அடுத்த நாளே ஒரு பல்கலைக்கழகம் 'எம்.ஏ கலைஞர் தாட்ஸ்' என்ற படிப்பைக் கொண்டுவருகிறது. மூன்று, நான்கு செமஸ்டர்கள் படிக்கவேண்டிய அளவுக்கு இந்த 'தாட்ஸ்'-இல் என்ன இருக்கிறது? ஒரு புண்ணாக்கும் இல்லை. பெரியார் தாட்ஸ்? நிச்சயம் செய்யலாம். அதுகூட ஒரு முதுநிலைப் படிப்பு அளவுக்குத் தேவையா என்று தெரியவில்லை. அண்ணா தாட்ஸ் என்பதே verhy thin! நல்லவேளை... இத்துடன் கலைஞர் தாட்ஸ் என்பதுடன் நிறுத்திக்கொண்டார்கள். எம்.ஏ இன் அஞ்சாநெஞ்சன் தாட்ஸ் என்று எதையும் செய்யாமல் விட்டார்களே!
Posted by Badri at 14:33


__________________________________________________________________________________________________________________________________
 

http://nizhalkal.blogspot.com/2009/10/ma-mokkai-thoughts.html

Sunday, October 18, 2009M.A - Mokkai Thoughtsசென்னைப் பல்கலைக் கழக துணை வேந்தர் தனது முதல் பத்திரிகையாளர் சந்திப்பிலேயே பவுண்டரி அடித்திருக்கிறார். நடப்பட்ட மரத்துக்கு நீரூற்றலா அல்லது புதிய தென்னங்காலா என்பது போகப் போகத்தான் தெரியும். திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்னும் பழமொழியின் நுண்ணர்த்தம் கருணாநிதிக்கும் இந்நேரம் விளங்கியிருக்கும். எம். ஏ. - கலைஞர் எண்ணங்கள். இதை ஏற்படுத்தும் கையோடு, எம். ஏ. காந்திய எண்ணங்களை நீக்கவும் துணை வேந்தர் அவர்கள் பெருமனது செய்து முயற்சி எடுக்கவேண்டும். கருணாநிதியையும் காந்தியையும் ஒரே இடத்தில் வைக்கும் எண்ணத்தை கருணாநிதி பெருமனம் செய்து பொறுத்துக்கொண்டாலும், அவரது தொண்டரடிகள் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள் என்பதையும் நாம் பொறுத்துக்கொண்டாலும், கருணாநிதி எண்ணங்களையும் காந்தி எண்ணங்களையும் படிக்கும் மாணவர்கள் ஒரு சேர சந்திக்கும்போது, இந்த காந்தி என்ன செய்தார் என்று இவரைப் பற்றிய எண்ணங்களைப் படித்து பட்டம் வாங்க வேண்டி கிடக்கிறது என்று கலைஞர் எண்ணக்காரர்கள் கேட்டால், காந்திய மாணவர்கள் திருதிருவென்று முழிக்க நேரிடும். இதே கதியே காந்திய எண்ணங்களைக் கற்பிக்கும் பேராசிரியர்களுக்கும் ஏற்படும். இத்தகைய அவமானங்களைக் காந்திய மாணவர்கள் பெறக்கூடாது என்ற பொதுநல நோக்கை மனதில் கொண்டு, துணைவேந்தர் அவர்கள் காந்திய எண்ணங்களை நீக்கிவிட்டால் நல்லது. பிழைத்துப் போகட்டும் காந்தி.சோ தனது கருத்தை டிவியில் இப்படி சொன்னார். எம்.ஏ. ஸ்டாலின் எண்ணங்கள், எம்.ஏ. அழகிரி எண்ணங்கள், எம்.ஏ. கனிமொழி எண்ணங்கள் என்றெல்லாம் ஏற்படுத்தவேண்டும் என்றார். கூடவே எம்.ஏ. மொக்கை எண்ணங்களையும் ஏற்படுத்தலாம். என்னைப் போன்ற வலைப்பதிவாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்கலாம். ஜோக்கர்களின் பூமியான நம் தமிழ்நாட்டில் எம்.ஏ. மொக்கை எண்ணங்கள் என்கிற படிப்பு இத்தனை நாள் இல்லாததே தவறு என்பதை திருவாசகம் அவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.இதற்கு முன்பு இருந்த துணை வேந்தர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தில் செய்யவேண்டிய எல்லா வேலைகளையும் முடித்துவிட்டார்கள் என்பதில் ஐயமில்லை. உலகின் முன்மாதிரி பல்கலைக்கழகங்களில் சென்னையே முதலிடம் வகிக்கிறது. இத்தனை நடந்த பிறகு திருவாசகம் அவர்கள் இப்பதவிக்கு வந்திருப்பதால், எல்லா வகையிலும் தன்னிறைவுக்கும் மேலாக நிறைவு பெற்றுவிட்ட சென்னைப் பல்கலைக்கழகத்துக்கென, புதிய ஒன்றை யோசித்துச் செய்யவேண்டிய கடும்பணி அவருக்கு இருக்கிறது. அதற்காகவே யோசித்து இந்த அரிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருக்கிறார். எம்.ஏ. கலைஞர் எண்ணங்கள் என்று ஓர் அறிவிப்பைக் கண்டபின்பு கருணாநிதியின் பொறுப்புணர்வும் கூடியிருக்கும். திருவாசகம் அவர்களின் புதிய முயற்சிகள் இப்படி தமிழக அரசியலைப் பாதித்து, அதன் வழியாக இந்திய அரசியலையும், அதனால் உலக அரசியலையும் கருணாநிதியின் வழியாகப் பாதிக்கவிருக்கிறது என்பதைத் துணைவேந்தரே அறிந்திருக்கமாட்டார்.எம்.ஏ. களையெடுப்பு என்ற ஓர் பட்டப்படிப்பையும் திருவாசகம் அவர்கள் யோசிக்கவேண்டும். பிற்காலத்தில் இதுவே அதிகம் பயன்படும் என்பதால் இதனை உடனடியாகக் கொண்டுவருவதில் திருவாசகம் அவர்கள் சிறிது நேரம் செலவிட்டால் தேவலை.

___________________________________________________________________________________________________ 
 
 

http://tinyurl.com/ygan949

MA in Kalaignar Thoughts at Madras University 


First Published : 15 Oct 2009 03:17:00 AM IST
Last Updated : 15 Oct 2009 06:21:48 AM ISTCHENNAI: For fans of Chief Minister M Karunandhi, there is something to cheer. G Thiruvasagam, the new vice-chancellor of the University of Madras, on Wednesday announced a slew of new schemes, including a postgraduate course in Kalaignar Thoughts.

Addressing his first press conference after assuming charge, the vice-chancellor informed that the university would introduce MAs in Periyar Thoughts and Anna Thoughts as well.No comments: