Tuesday, January 13, 2009

Absurdity of தை as Tamil New Year!



Much has been written in this blog about how the 1st day of தை can not be considered as the New year.
The present post is about establishing this fact from inputs from Sangam texts.


The oft quoted பாரதிதாசனார் poem on தை as the first month has no textual basis.
The other pet subject often circulated is the date of திருவள்ளுவர் as the beginning of Tamil Year.
This date as coinciding with St Thomas's date looks like an attempt to further the claims of Christian influence on திருவள்ளுவர் and not based on any love of Tamil or understanding of Tamil culture whose roots date back to 10,000 years ago.



சங்கத் தமிழ் நூல்களில் 'தை' என்பது திருநாளாக சொல்லப்படவில்லை.
அது ஒரு விழாவும் அல்ல.
அதே போல் புத்தாண்டும்
ஒரு விழா அல்ல.
ஆண்டுத் துவக்கத்தை வழி பாடுகள் மூலம், வரும் ஆண்டு நல்ல ஆண்டாக இருக்க வேண்டும் என்றே வரவேற்றிருக்கிறார்கள்.



சங்க காலத்தில், பல விழாக்கள் இருந்திருக்கின்றன.
"அழியா விழவு" என்று பதிற்றுப்பத்து (29) கூறுகிறது.
டாக்டர் உ. வே. ச. அவர்கள் கண்டெடுத்த பழைய உரையில், இதைப்பற்றி சொல்கையில், அந்நாளைய தமிழகம் என்றென்றும் விழாக்கோலம் பூண்டிருந்தது என்பர்.
நாள்தொறும் மணவிழா மற்றும் பிற விழாக்கள் நடை பெற்றுக் கொண்டிருந்தன.



விழாக்களைப் பற்றிச் சொல்கையில், நீர் வரவு பற்றியே அவ்விழாகள் நிகழ்திருக்கின்றன.
அதே போல் எல்லா விழாக்களிலும் மலர்களும், கரும்பும் உண்டு!
இன்று நாம் நினைப்பது போல, கரும்பு என்பது பொங்கல் விழா ஒன்றை பற்றியது மட்டுமல்ல.



பதிற்றுப்பத்து 30 சொல்கிறது,
"காலமன்றியும் கரும்பருத்தொழியாது அரிகால வித்துப் பல பூ விழவில்"

நீர் வளம் இடையறாது இருந்தமையால், காலமில்லாத காலத்தும், கரும்பு முற்றி விளைவதும், அறுக்கப்படுவதும் உண்டென்று உரை கூறுகிறது.


கரும்புப்பாத்தியில், பல் வகை மலர்ச் செடிகளும் வளர்க்கப்பட்டன.

இதனை
"வயலே நெல்லின் வேலி நீடிய கரும்பின், பாத்திப் பன்மலர்ப் பூத்ததும்பின "
என்று புற நானுறு (386 ) கூறுகிறது.

கரும்பும், பல வகை மலர்களும், எந்த ஒரு விழாவிலும் முக்கிய அங்கம் வகித்தன.


"இந்திரவிழாவில் பூவினன்ன " என்று ஐம்குறு நூறு (62) கூறுவதைக் காண்க.

புனலும், பூவும், கரும்பும் எந்த ஒரு விழாவிலும், முக்கிய செய்திகளாக இருந்தன.
இன்றைய காலம் போல் தை மாதம் மட்டிலுமே கரும்பு என்ற கதை அன்று இல்லை.




மேலும், புனல் இல்லாமல் எந்த கொண்டாட்டமும் அந்நாளில் இல்லை.
புனல் என்றால், இள வேனிலில் அதிர்ந்து
ஓடி வரும் முதல் மழை நீர் முதல்,
வேனில் காலத்தில் குளுமையைத் தரும் கோடைபுனலும் சேர்த்து,
கார் துவங்கும் வேளையில் நிறைந்த ஆறுகள் வரை,
இவ்வெல்லாக்காலங்களும், விழவில் முழங்கும் காலங்கள்.
புனலோடு கூடியே விழாக்கள் வந்திருக்கின்றன.



'தீநீர் நீர் விழவு' என்னும் வேனில் விழா புது நீர் ஓடி வரும் போது, கொண்டாடப்பட்டது.
பதிற்றுப்பத்து (48) சொல்கிறது, தீ போன்ற வெம்மை நீக்கி, தண்மை தரும்படி
மழை நீர் வந்ததால் கொண்டாடப்படுவது என்று.


சித்திரை பவுர்ணமியில் ஆரம்பிக்கும் இந்திர விழாவிலும்,
புனலாடலும், பூக்கள் சொரிதலும் உண்டு.
இது கோடை மழையின் போது கொண்டாடப்படுவது.
இந்த் விழாவைக் காண இமய புலத்திநின்று மக்கள் வந்தனர் என்று சிலப்பதிகாரம் சொல்கிறது.


'பறை' போல ஒலி எழுப்பும் விழவுகள், பறை ஒலி போல புனல் நீர் வருவதைப்பற்றியே
என்று கலித் தொகையும் சொல்கிறது. (22 & 92)


இவை எல்லாம் கோடையில் அல்லது, சூரியனின் வடக்கு அயனத்தில் மழை பொழியும் காலத்தில் எல்லாம் நிகழ்ந்தவை.



கார் காலம் முழுவதும், வீட்டு விரதங்களும், வீட்டு வழிபாடுகளுமே நடை பெற்றன.


கார் முடிந்து, வெள்ளம் பெருக்கெடுத்து எங்கும் வெள்ளக் காடாய் இருக்கும் காலம் மார்கழி.
ஆற்றில் ஓடும் நீரும் கலங்கி இருக்கும்.
எங்கும் குளம் போலத் தேங்கி இருக்கும்.
ஆகவே மார்கழி மாதம் 'குளம்' எனப்பட்டது.


பரிபாடல் ௧௧ (வைகை) மூலம் மார்கழி மற்றும் தை மாத நீர் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

மழை நின்றவுடம், மக்கள் மீண்டும் வெளியே வந்து விடுவர்.
ஆனால் குளிரும், பனியும் கூர் வேலாகக் குத்தும் மாதங்கள் இவை.



"தையும் மாசியும் வையகத்து உறங்கு" என்று பதிற்றுப்பத்து உரை-காரர் கூறுகிறார்.

வையகம் உறங்கும் தை எவ்வாறு ஆண்டுத் துவக்கமாக இருக்க முடியும்?


தை- மாசியின் கொடுமையை, பதிற்றுப்பத்து (59) "மாகூர் திங்கள்"
வாயிலாகத் தெரிந்து கொள்கிறோம்.


ஆடு கோட் பாட்டுச் சேரலாதனை பாடும் 'காக்கைப் பாடினியார்',
பாணர்கள் பரிசில் தேடி வீட்டை விட்டு வெளியே வர முடியாமல்,
மாசித் திங்கள் எவ்வளவு கடினமாக இருக்கிறது என்கிறார்.


மாசி என்றால் மேகம் என்பது பொருள்.
மாசி மாதத்தில் மேகமே இறங்கி வந்தாற்போல், பின் பனி மூடி இருக்கும்.
ஆகவே இம் மாதம், மாசி எனப்பட்டது.
இது 'மாகூர் மாசி' என்கிறார்
காக்கைப் பாடினியார்.


மாக்கள், குளிர் மிகுதியாள் இறை தேடச் செல்லாது,
பசி மிக்கு, உடல் சுருங்கி, ஒடுங்கிக் கிடப்பது குறித்து,
"மாகூர் திங்கள் மாசி' என்றார் என்று உரை கூறுகிறது.



இச் செய்தியை நெடு நாள் வாடையும், (6) " மாமேயல் மறப்ப, மந்தி கூற" என்று கூறுகிறது.
ஆடு-மாடுகள் மேயச் செல்வதில்லை.
மந்தி உடல் குறுகி ஒடுங்கி நிற்கும் மாதம் மாசி மாதம் ஆகும்.

இப்படிப்பட்ட மாசியில், பாணர்கள்,
எப்பொழுது பனி விலகி, கதிர் உதயம் ஆகும் என்று காத்திருப்பார்,
என்கிறார்
காக்கைப் பாடினியார்.


கோடையில், கதிர் உதயம் ஆவதற்குள் பாணர்கள் கிளம்பி விடுவர்.
வெயில் வருவதக்ற்குள் அரசனை வந்து பார்ப்பர்
.


ஆனால் மாசியில், வெயில் வராதா என்று காத்திருப்பார்.
எப்பொழுது குளிர் விலகும் என்று பார்த்திருப்பார்.

இப்படி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் மாசி தொடரும், தைத் திங்களா ஆண்டு முதலாக இருந்திருக்கும்??


எல்லாவிதத்திலும் முடக்கிப் போடும் தை - மாசி ஆகிய பனிக் காலம் ஒரு விழாக் காலம் அல்ல.


"பனி நீர் தோய்தலும் பாவை ஆடலும்" (பிங்கலந்தை நிகண்டு - சூ- 1369)
என்று மார்கழி மாதம் முழுவதும், கன்னியர் ஆற்றுத் துறையில், நோன்பு நூற்பர்
மழை வேண்டி செய்யப்படும் நோன்பு இது. (முன்பே எழுதி உள்ளோம்

http://jayasreesaranathan.blogspot.com/2008/12/paavai-nonbu-how-it-was-done.html




மார்கழி நீர் கலங்கிய நீர்.
கார் காலம் ஓய்ந்து காட்டாறு அடங்கி, கலங்கி ஓடியும், குளமாகத் தேங்கியும் இருக்கும் காலம் இது.
இந்தக் காலத்தில், மழை நோன்பு நோற்றால், அடுத்த கார் காலம் வளமான மழை பொழியும்.


கலங்கிய நீர் குறித்து, எந்த விழவுகளும்
நடத்த முடியாது.

ஆனால் மார்கழி முடிந்து வரும் தை தெள்ளிய நீர் ஓடும் காலம்.
அன்ன நடை, அழகு நடையுடன் வரும் ஆற்றுக் கன்னி,
மக்கள் எண்ணங்களை தைத்துக் கொள்கிறாள்.
தை- என்னும் சொல் சங்க நூல்களில் பல இடங்களிலும் வருகிறது.
தை என்றால், தைத்தல் என்று பொருள்.
தைத்தல், பின்னுதல், பொருத்துதல், சேர்த்தல் என்னும் பொருளிலேயே வருகிறது.


இதன் பொருளை நன்கு உணர்த்துவது போல, பரிபாடல் (11) கூறிகிறது.

"நீ தக்காய் தைந்நீர்"


கார் கால நீர் போலன்றி, தெளிவாக இருக்கும் தை மாத நீர்,
மக்கள் தம் எண்ணங்களைத் தைத்துக் கொள்ளும் பளிங்கு போல இருக்கிறது.
இந்த மாதத்திற்கு நேர் எதிரில் இருக்கும் மாதம்,
தைக்கப்பட்ட எண்ணங்களை பிரதி பலிக்கச் செய்தார் போல கண்ணாடி போல் இருக்கவே
அது "ஆடி" மாத்ம் என்றாயிற்று.
தையில், நீரில் கண்ட பிம்பம், ஆடியில் - கண்ணாடியில் நேர் முகமாகத் தெரிய வேண்டும்.

தையில் உள் வாங்கிய வேண்டுதல்கள், ஆடிக்குள் நிகழ்ந்து விட வேண்டும்.
எண்ணங்கள் நிகழும் காலம் புனல் ஓடும் விழாக் காலங்கள் ஆகும்.
இதுவே சூரியனின் வடக்கு ஊர்வலத்தின் கோலாகலம் ஆகும்.


இதன் உச்சிக் காலம், சூரியன் தலை மேல் சஞ்சரிக்கும் காலமான, சித்திரை.
அதுவே இந்திர விழாவின் காலம்.
மன்மதனின் காலம்.
இதை இந்திர விழா பற்றிய காதையில், சிலம்பில் படிக்கலாம்.
இதுவே ஆண்டு முதலாகக் கொண்டாடப் பட்டிருக்க வேண்டும்.
கோலாகலமான ப்ரமோத்சவம் போல இந்திர விழாவை சிலம்பு விவரிக்கின்றது.
ஆடல் பாடல் முதல், கடவுள் வழிபாடு வரை, மேலும் தெய்வ சொற்பொழிவுகள் வரை
சித்திரை பௌர்ணமியில், இந்திர விழவில் நடந்திருக்கின்றது என்பதற்கு ,
சிலப்பதிகாரமே ஆதாரம்.


ஆனால் தையில், வேண்டுதல்கள் செய்யப்படுகின்றன.
நல்ல
கணவன் வேண்டும் என்று கன்னிப் பெண் வேண்டுகிறாள்.
கணவன் நன்கு ஆயுளுடன் இருக்க வேண்டும் என்று மனைவி வேண்டுகிறாள்.
தை என்பது தவத்தின் காலம் ஆகும.


நீரின் கண் நின்றும் செய்யும் தவம், மற்றும்,
நெருப்பின் கண் நின்று (ஹோம குண்டம் சுற்றி)
செய்யும் தவம்,
ஆக பாவை நோன்பு முடித்து, "தவத்தை நீராடி" (பரி பாடல் 11) ,
புலனடக்கி, காக்கும் தெய்வமான ஆற்று நீரின் கண்,
தங்கள் வேண்டுதல்களைக் கொட்டி,
செய்யப்படுவதே 'தை- நீராடல்' ஆகும்.


தைத் திங்களில் தவத்தை முடித்த கையுடன்,
வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டியவாறு, பனிக் காலம் வந்து விடுகிறது.

பாவை ஆடிய இளம் பெண், அவளைப் பார்த்து ஏங்கும் தலைவனைக் காணாள் இல்லை.
அவளிடம் மனம் பறி கொடுத்த தலைவன் சொல்கிறான்,
"நீ தையில் நீராடிய தவம் தலைப் படுவாயோ?' (கலித் தொகை 59)


இவளோ என்னைப் பார்க்கவே மாட்டேன் என்கிறாள்.
ஆனால், வருடம் தோறும் , தையில் நீராடி,
நல்ல கணவன் வேண்டும் என்று மட்டும் வேண்டிக் கொள்கிறாள்.
என்னைக் காணாது இருக்கையில், தை நீராடி தவம் இருந்து என்ன பயன்? என்று கேட்கிறான்.


தையின் முக்கியத்துவம், நோன்பின் வேண்டுதலைத் தைத்தலே என்று,
ஐம்குறு நூறும் (84) நற்றிணையும் (22) கூறுகின்றன.


இந்த தவத்திற்கு பலன் கிடைக்க, நடத்த ப்படும் வேட்டையே, 'ஏறு தழுவுதல்'.
இது முல்லை நிலத்தில் மட்டுமே, ஆயர் குலத்தில் மட்டுமே நடி பெற்றது.
ஆயர் மகள் தான் வளர்க்கும் காளையை எவன் அடக்குகிறானோ,
அவனே அவளுக்கு ஏற்ற கணவன் என்று முடிவு செய்யப் படுவான்.
இதில், காளையை யாரும் (இந்த நாளில் செய்வது போல) ஆவேசப் படுத்தவோ,
கொடுமைப் படுத்தவோ கூடாது.
அந்தக்
காளை அந்தக் கன்னி வளர்ப்பது.
அதற்கு ஒரு தீங்கையும் அவள் பொறுக்க மாட்டாள்.
எவன் அவள் கைத் தலம் பற்ற விரும்புகிறானோ,
அவன, அதை அடக்க முற்படுவான்.
இவ்வாறுதான் மஞ்ச விரட்டு அந்நாளில் நிகழ்த்து.
இந்த வழக்கம், முல்லை நிலம் தவிர வேறு இடங்களில் இல்லை.
முல்லை நிலத்தில் இருந்ததற்கு காரணம்,
ஆயர் மகளை மணப்பவன் அவர்கள் குலத் தொழிலான, மாடு மேய்ப்பதில் ,
காளை அடக்கி மேய்ப்பதில் வல்லவனாக இருக்க வேண்டும் என்பதே.


மற்ற நிலங்களில் இவ்வழக்கம் இல்லை.
மறவர் குடியில், வீரத்தைக் காட்டும் வண்ணம், வீர விளையாட்டில் வெற்றி பெற்று
கன்னியைக் கைப் பிடிக்க வேண்டும்.
சூடாமணி நிகண்டில் 'மற வழி மணம்' பற்றிய குறிப்பின் மூலம் இது தெரிகிறது.


மற்ற படி, மற்ற நிலங்களில் ஏறு தழுவும் வழக்கம் இலலை.
திரு 'டு செ' ஒப் தமிழர் அனைவரின்,
அடையாள விளையாட்டு என்பது போல் இன்று சொல்கிறார்களே அதற்கு என்னவென்று சொல்ல.


தவத்தை நீராடிய, திருமண வயது அடைந்த கன்னிகைக்கு,
தவம் கூடிய விதமாக நல்ல வரன் கூடி வரும் காலமாக இருப்பதனால்,
'தை பிறந்தால் வழி பிறக்கும்" என்னும் மொழி வழக்கில் வந்த்து.
இதனை, புத்தாண்டின் அறிகுறியாக நினைப்பதை என்னவென்று சொல்வது!


தை முடிந்து, மாசி பிறந்தால், "மாசிப் பனியில் மச்சும் குளிரும்".
இந்த நேரமா புத்தாண்டு புகு நேரம்??


ஆனால் மண விழவு, புள் நிமித்தம் பார்த்து , நாள் நேரம் பார்த்து, இள வேனில் காலத்தே ரோதினியுடன் , சந்திரன் கூடிய காலத்தே நிகழ்ந்ததாக, அகம், சிலம்பு மூலம் தெரிகிறது.

ஆக, மணவிழாவுக்கு பிள்ளையார் சுழி போடும் காலம் தை.
கன்னியின் புது வாழ்வு நோக்கி முயற்சிகள் செய்யப்படும் தை,
ஒட்டு மொத்த மக்களின் புத்தாண்டு என்று கூறுவதற்கு வாட் இலலை.
மாகூர் திங்களாய் குறுக வைக்கும் காலம், புத்தாண்டின் துவக்கமாக
இருக்க வேண்டும் என்று நினைப்பதை என்னவென்று சொல்ல!!




******************************************

Related articles:-


http://jayasreesaranathan.blogspot.com/2009/01/how-to-determine-tamil-new-years-day.html

http://jayasreesaranathan.blogspot.com/2008/12/connection-between-paavai-nonbu-and.html

http://jayasreesaranathan.blogspot.com/2008/04/tamil-new-year-at-avani.html

http://jayasreesaranathan.blogspot.com/2008/04/thiruvalluvar-aandu-what-karunanidhi.html

http://jayasreesaranathan.blogspot.com/2008/04/tamil-new-year-latest-explanation-from.html

http://jayasreesaranathan.blogspot.com/2008/04/it-is-varusha-p-pirappu-not-chitthirai.html

http://jayasreesaranathan.blogspot.com/2008/04/yugadhi-vishu-new-years-at-their.html

http://jayasreesaranathan.blogspot.com/2008/02/new-year-for-tamils-suggestion-to-mr.html

http://jayasreesaranathan.blogspot.com/2008/02/cosmology-of-hindu-calendar-does-not.html

http://jayasreesaranathan.blogspot.com/2008/02/karunanidhis-tryst-with-calendar.html