Thursday, May 2, 2013

மழை ஜோதிடம் (பகுதி 7) உதிரித் தகவல்கள்

தமிழில்:- திரு டி.ஜி. ஸாரநாதன்


முந்தைய கட்டுரைகள்

பகுதி 6:- மழை ஜோதிடம் (பகுதி 6) (நக்ஷத்திரங்களும், கிரகங்களும்)



இந்தப்  பகுதியில், வானிலை விஞ்ஞானிகள் நினைத்துப் பார்த்திருக்க முடியாத சில துணுக்கு விவரங்களைக் காண்போம்.  உதாரணத்திற்கு, தேதி மழை அல்லது மழை பெய்யும் நாள், மற்றும் பிறைச் சந்திரனைக் காணும் நாள்,  என்னும் சொற்கள் வழக்கமாக, எல்லா ஹிந்து நாள்காட்டியிலும் பார்க்கக் கூடிய தகவல்கள் ஆகும். அவை பல வருடங்களாக சூரியனையும், சந்திரனையும் கண்டறிந்து மழையைப் பற்றி குறிப்பெடுத்ததின் விளைவாகும்.

பஞ்சாங்கங்களில் சில சமயம் ஒரு குறிப்பிட்ட தினத்தில் மழை பெய்தால், அந்த ஆண்டு முழுமையும் நல்ல மழை இருக்கும், என்று குறிப்பிட்டிருக்கும்.  பழைய வானிலைப் பதிவுகளை  ஆராய்ந்தால் ஒருவேளை இந்த மாதிரி குறிப்புகளை ஏன் கொடுத்தார்கள் என்பதைக் கண்டுபிடிக்கலாம். இதற்கும், ஆண்டு மழைக்கும் எந்த அளவு தொடர்பு இருக்கிறது என்பதையும் கண்டு பிடிக்கலாம். அல்லது இவற்றை நாமே குறிப்பெடுத்து வருடாவருடம் கவனித்து வர வேண்டும். இந்த தினங்கள் எல்லாம் நம் தமிழ் மாத (சௌர மாத) மரபுப் படி கொடுக்கப் பட்டிருக்கும். கீழே தமிழ் மாதங்களும் அவற்றின் தேதிகளும் கொடுக்கப் பட்டுள்ளன. இந்தத் தினங்களில்  மழை பெய்தால், மழைக் காலம் பூராவும் மழை பெய்யும்:

ஆனி (மிதுனம்) = 10-ம் நாள்.

ஆடி (கடகம்)  = 8-ம் நாள்.

ஆவணி (சிம்மம்) = 6-ம் நாள்.

புரட்டாசி (கன்யா)  = 4-ம் நாள்.

ஐப்பசி (துலா) = 2-ம் நாள்.

கார்த்திகை (வ்ருச்சிகம்) = முதல் நாள்.

மார்கழி (தனுர்)  = முதல் நாள்.

இந்த மாதங்கள், தென் மேற்கு, வடகிழக்கு என்னும் இரு பருவ மழைக் காலங்களையும் சேர்ந்தன. -பழைய வானிலைப் பதிவுகளிலிருந்து,  இந்த நாட்களில் ஏற்பட்ட நிகழ்வுகளைச் சரி பார்த்து, அந்த ஆண்டு அந்த மழை காலத்திலோ, அல்லது குறைந்த பட்சம் அந்த மாதத்திலேயோ எவ்வளவு மழை பெய்தது என்பதைக் கண்டுபிடிக்கலாம். அப்படிப் பார்க்கும்போது அது எந்த ஒரு இடத்திற்குப் பொருந்துகிறது என்பதனையும் கண்டறியலாம்.

ஆவணி மாதத்தின் முக்கியத்துவம்

மேற்கண்ட மாதங்களில், ஆவணி (சிம்மம்) மாதத்திற்கு ஒரு சிறப்பு விசேஷம் உண்டு. மேற்கண்ட அட்டவணையின்படி, 6-ம் நாள் மழை இருக்க வேண்டும். மழை இல்லாவிட்டாலும், இடி முழக்கமாவது அன்று கேட்க வேண்டும். அப்படி இருந்தால், அந்த ஆண்டு மழைக் காலத்தில் நல்ல மழையை எதிர்ப் பார்க்கலாம். இதை ஆவணி முழக்கம் அல்லது ஆவணி/ சிம்ம/ ச்ரவண கர்ஜனை என்பார்கள். இடியோசை பலமாக இருக்க வேண்டும். இதுவும்  குறிப்பிட்ட இடங்களைப் பொருத்தது என்று நினைக்கிறேன்.

இன்னொரு காட்சியும் ஆவணி மாதத்தில் உண்டு. அந்த மாதத்தில் (ஆவணி) சந்திரன், மூலம் நக்ஷத்திரத்தைக் கடக்கும் நாளில், உதய சூரியனை மேகங்கள் மூடி எங்கும் மந்தமான வெளிச்சம் இருக்க வேண்டும். அப்படி இருப்பின், மழைக் காலம் வாரி வழங்கும்.

ஆடி மாதத்தின் முக்கியத்துவம்

ஆடி மாதத்தில் கவனிக்க வேண்டியவை. சாந்திர மாதம் ஆஷாடம் ஆரம்பித்திருந்தாலும், தமிழ் மாதம் ஆடியே நாம் கவனிக்க வேண்டியது. ஆடி மாதம் அமாவாசைக்கு அடுத்த ஐந்தாவது நாளை (பஞ்சமி) நாம் கவனிக்க வேண்டும். இந்த பஞ்சமி திதி சில கிழமைகளில் வந்தால், நல்ல மழையை உணர்த்தும். இதை ஆடிக்குறி என்பார்கள்.

அவைகள் பின்வருமாறு (திதி+ கிழமை)

பஞ்சமி + ஞாயிறு  = சராசரிக்குக் கீழே மழை

பஞ்சமி + திங்கள் = சராசரிக்கு மேல், வெள்ளம்.

பஞ்சமி + செவ்வாய் = சராசரிக்குக் கீழ், வெப்பம், வறட்சி.

பஞ்சமி + புதன் =  காற்று, குறைந்த மழை.

பஞ்சமி + வியாழன் = விவசாயத்திற்குப் போதுமான மழை.

பஞ்சமி + வெள்ளி = அபரிதமான மழை

பஞ்சமி + சனிக்கிழமை = வறட்சி.

இந்த தினங்கள், சூரியன் மேஷ இராசியில் பிரவேசிக்கும் நாட்களுடன் ஒத்துப் போவதைக் கவனிக்கலாம்.

ஆடியில் திதி நக்ஷத்திர சேர்க்கையையும் கவனிக்கலாம், இது ஆடி திதிக் குறி எனப்படும். இது முன் பகுதியில் சொன்ன ஆஷாட யோகத்தின் ஒரு நுட்பமான பார்வை என்று சொல்லலாம்.

இங்கு சுக்கில  பட்சம் (அமாவாசைக்குப் பிறகு) கவனிக்கப் படுகிறது.

நவமி, தசமி, ஏகாதசி (9, 10 , 11 வது) தினங்களை குறிப்பிட்ட நக்ஷத்திரங்களுடனும் கவனிக்க வேண்டும். அந்த நக்ஷத்திரங்கள்  சுவாதியிலிருந்து அனுஷம் வரை உள்ளவை. சந்திரன், இந்த ஒவ்வொரு நக்ஷத்திரங்களையும் கடக்கும்போது ஏற்படும் வானிலை நிகழ்வுகளைக் கொண்டு அந்த மழைக் காலம் முழுமையும் அல்லது சிறிதளவே வாரி வழங்குமா என்பதை ஊகிக்கலாம்.

    நவமி + சுவாதி= மேகமூட்டம், மழை, சிறிது தூறலுடன் காற்று, இடிமுழக்கம், மின்னல். இவை மழைக்காலத்தில் நல்ல மழையைக் குறிக்கும்..
    தசமி + விசாகம் = மேற்ச்சொன்ன அதே மாதிரி. மழைக் காலத்தின் மத்தியில் நல்ல மழையைக் குறிக்கும்.
    ஏகாதசி + அனுஷம் = மேற் சொன்ன அதே மாதிரி. மழைக் காலத்தின் இறுதியில் நல்ல மழையைக் குறிக்கும்.   
ஆடி  மாதம் கிருஷ்ண பட்சம் தசமி, ஏகாதசி தினங்களில் ரோஹிணி நக்ஷத்திரம் இருந்தால், மழைக் கால 4 மாதங்களிலும் நல்ல மழை இருக்கும். இதை ரோஹிணி யோகம் என்று முந்தைய பகுதியில் சொல்லப்பட்டது.

சில குறிப்பிட்ட சேர்க்கைகள்- மாதந்தோறும்

கீழே கொடுக்கப் பட்டுள்ளது மழைக் காலத்தில் கவனிக்க  ஒரு சரி பார்ப்புப் பட்டியல்.

·         வைகாசி கிருஷ்ண பட்சம் சதுர்தசியில் (14 வது நாள்) மழை இருந்தால், மழைக் காலம் பூராவும் நல்ல மழை இருக்கும். இல்லையெனில், மிகக் குறைந்த மழை பெய்யும். இந்த ஆண்டு இது ஜூன் 6, 7 தேதிகளில் வருகிறது.

·         ஆடியில், ஞாயிற்றுக் கிழமையில், சுவாதி, உத்திராடம், நவமி, சதுர்தசி, பௌர்ணமி இவற்றில் ஏதாவது இரண்டு சேர்ந்து இருந்தால், மழைக் காலத்தில் நல்ல மழை பெய்யும். இந்த ஆண்டு, ஜூலை 21ம் தேதி சதுர்தசி ஞாயிற்றுக் கிழமை விடிகாலை 330 க்கு வருகிறது. அன்று வானிலையைக் கவனித்து என்ன பலன் என்று பார்க்கலாம்.


·         ஆடி மாதம், சுவாதி - நவமி, உத்திராடம் - பௌர்ணமி அல்லது சதுர்தசி - ஞாயிற்றுக் கிழமை ஜோடிகளில், வானவில், மேகமூட்டம், இடி அல்லது மழை இருந்தால், மழைக் காலம் வாரி வழங்கும்.


·         தமிழ் மாத முதல் தேதியன்று, சந்திரன், திருவாதிரை, புனர்பூசம், ஹஸ்தம், சித்திரை, பூராடம், உத்திராடம் அல்லது உத்திரட்டாதி நக்ஷத்திரங்களைக் கடக்கவில்லை என்றால், அந்த மாதம் மழை இருக்கும். அதாவது, சூரியன் ஒரு இராசியில் பிரவேசிக்கும் நாளன்று, சந்திரன் இந்த நக்ஷத்திரங்களைக் கடந்தால், அந்த மாதங்களில் மழை இருக்காது.

மேகங்கள் + நக்ஷத்திரங்களின் குறிப்புகள்

குறிப்பிட்ட நக்ஷத்திரங்கள் (சந்திரன் கடக்கும் நக்ஷத்திரம்) இருக்கும் நாட்களில், செவ்வானம் இருந்தால், நல்ல மழையை எதிர்ப் பார்க்கலாம். அந்த நக்ஷத்திரங்கள்:

·         மூலம், பரணி, பூரட்டாதி, பூராடமாக இருந்தால், 8 நாள் கழித்து மழை.

·         அஸ்வினி (மதியத்தின் போது) -  5 நாள் கழித்து மழை.

·         உத்திராடம், பிற்பகலில்  - 7 நாள் கழித்து மழை.

·         கேட்டைபிற்பகலில் - 10 நாள் கழித்து மழை.

·         அனுஷம், பிற்பகலில்  - 3 நாள் கழித்து மழை.

இவையெல்லாம் செவ்வானத்தின்போது. 

·         திருவாதிரையன்று பனி போன்று வெண்ணிற மேகம் இருந்தால், 7 நாள் கழித்து மழை  பெய்யும்.

சந்திரனின் தோற்றத்திலிருந்து குறிப்புகள்

1) பிறைச் சந்திரன்.

இயல்பான மழைக் காலம் மூன்றாம் வளர்பிறையை ஒட்டி இருக்கும். இதுதான் புகழ்பெற்ற மூன்றாம் பிறை எனப்படுவது. மக்கள் இதை அபூர்வமாக கருதுவர், ஏனெனில் இந்தச் சந்திரன் கீழ் வானத்தில் இருக்கும். அதோடு மழைக் காலங்களில், மேகத்தால் மறைக்கப்பட்டு இருக்கும். ஆனால் இந்தப் பிறை சந்திரனை எப்படியாவது கவனித்து அதன் முனைகள் நல்ல மழைக்கு அனுகூலமாக இருக்கின்றனவா என்று அறிய வேண்டும். அப்படி இருந்தால் பூமியும், சந்திரனும் மழைக்குச் சாதகமான வட்டப் பாதைகளில் சென்று கொண்டிருக்கின்றன என்று பொருள். இரு முனைகளும் வடக்கு தெற்கில் இருக்கும். வடக்கு முனை தெற்கு முனையைக் காட்டிலும், வைகாசியில் ஆரம்பித்து மார்கழி வரை, எட்டு மாதங்களுக்கு, உயர்ந்து இருக்க வேண்டும். தை, மாசி மாதங்களில் இரு முனைகளும் சம நிலையில் இருக்கவென்டும். பங்குனி, சித்திரை மாதங்களில் தெற்கு முனை, வடக்கு முனையைக் காட்டிலும் உயர்ந்து இருக்க வேண்டும். முனைகள் இந்த மாதிரி அல்லாமல் வேறு விதமாகத் தோற்றமளித்தால், கடும் பஞ்சம் ஏற்ப்படும்

2) சந்திரனைச் சுற்றி ஒளிவட்டம்.

மழைக் காலங்களில், சூரியன் சந்திரனைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் தென்படும். இதை ஜோதிடத்தில், 'பரிவேஷம்' என்று கூறுவார்கள்.

ஆஷாட யோகத்தில் இதைக் கவனிப்பார்கள். ஆடிப் பௌர்ணமியன்று ஒளிவட்டம் தென்படுவது நல்லது. இது மாலைச் சந்திரன் உதயமாகும்போது காணப்பட்டு, விடிகாலை வரை தெரிய வேண்டும். இந்த நேரத்தை நான்கு மணி நேரமாக,  மூன்று பகுதிகளாக வகுத்துள்ளார்கள். 

    ஒளிவட்டம் முதல் பகுதி 4 மணி நேரத்துக்குத் தென்பட்டால், சாந்திர மாதம் ஆஸ்வயுஜ (அக்டோபர்- நவம்பர்) நல்ல மழை பொழியும்.
    ஒளிவட்டம், அடுத்த 4 மணி நேரப் பகுதியில் தெரிந்தால், சாந்திர மாதம் கார்திகாவில் (நவம்பர் - டிசம்பர்) நல்ல மழை பொழியும்.
    ஒளிவட்டம் கடைசி 4 மணி நேரப் பகுதியில் தென்பட்டால், சாந்திர மாதம் மார்கசீராவில் (டிசம்பர்- ஜனவரி) நல்ல மழை பொழியும்.

கிரகங்கள் குரு, சுக்கிரனைச் சுற்றி ஒளிவட்டம் இருந்தாலும், நல்ல மழைக்கான அறிகுறி. ஆனால் செவ்வாய், சனி கிரகங்களைச் சுற்றி ஒளிவட்டம் தெரியக்கூடாது.

3) சூரியன், சந்திரனைச் சுற்றி ஒளிவட்டம் - உடனடி மழை.

    சூரியன், சந்திரனைச் சுற்றி முழுமையாக ஒளிவட்டம் வெண்மையாக, பால் போன்ற நிறத்திலோ, வெள்ளியைப் போன்றோ, பளபளப்பாகவோ இருந்தால் நல்ல மழை உண்டாகும்.
    ஒளிவட்டத்தில், மயில் நீல சாயை இருந்தால், உடனடி மழை வரும்.
    ஒளிவட்டம் சூரியன்/ சந்திரனுக்கு மிக நெருக்கமாக இருந்தால், மழை பார்வையாளரின் இடத்திலிருந்து தள்ளி மழை பெய்யும்.
    ஒளிவட்டம் சூரியன், சந்திரனிலிருந்து சற்று தள்ளி இருந்தால், பார்வையாளரின் இடத்தில் மழை எப்பொழுது வேண்டுமானாலும் பெய்யக் கூடும்.
    ஒளிவட்டம் தடிமனாகவும், பிரகாசமாகவும் இருந்தால், பலத்த மழை பெய்யும்.
    ஒளிவட்டம் அகன்று இருந்தால், மழை பரவலாக இருக்கும்.

முடிவுரை
மழை அளவு கணிப்பைப் பற்றி, வேதம் அறிந்த சான்றோர்களின் முக்கியமான  கருத்துக்கள், இந்த கட்டுரையின் ஏழு பகுதிகளிலும் விளக்கப்பட்டது. கூர்ந்து நோக்கில் அவை எல்லாமே  விஞ்ஞான ரீதியாக, - மதக் கொள்கைகளாக அல்ல, உருவாக்கப் பட்டது தெளிவாகத் தெரியும். அவை எல்லாம் பலவித வானிலை கண்காணிப்புகளை அடிப்படையாகக் கொண்டும், வான சாஸ்திரத்தைக் கொண்டும், உருவாக்கப்பட்டு, அவை இடங்களுக்கு ஏற்ற மாதிரி சரி பார்த்தும் உண்டானவை. அவை இன்றைய வானியல் விஞ்ஞானத்திலிருந்து மாறுபட்டவை. ஆகையால், இன்றைய வானியல் நமது பண்டைய வேத அடிப்படை வானியல் சாஸ்திரத்திலிருந்து கருத்துக்களை பரிமாற்றிக் கொண்டால், நமது தற்கால மழை கணிப்பு இன்னும் செழிப்புறும், அவற்றை ஒவ்வொரு இடத்திற்கும் பரீட்சை செய்து பார்த்து, இன்னும் செழுமையாக்கலாம். தற்கால வானியல் சில நூற்றாண்டுகளே உபயோகத்தில் உள்ளன. ஆனால், வேத அடிப்படை வானியல், 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மக்களுக்கு நம்பிக்கையான கணிப்புகளை கூறி வந்திருக்கிறது. சில பல ஆண்டுகள் முன்பு வரை, தற்காலக் கல்வி முறை வழக்கத்தில் வரும் முன்பு, பழைய கல்வி முறையில்மாணவர்களுக்கு வேத அடிப்படை வானியல் கற்றுத் தரப்பட்டது. ஜோதிட பள்ளிகளிலும் இது கற்பிக்கப் பட்டது.

இந்தத் தொகுப்பு மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை உண்டாக்கவே படைக்கப்பட்டது. இதனால் சாதாரண குடிமகனும், தங்கள் இடத்திற்கு ஏற்றார் போல் மழை அளவைக் கணித்து பயன்பெறும் நோக்கத்துடன் இந்தக் கட்டுரை உருவாக்கப்பட்டது. தற்கால விஞானம், மழைக்காலம் தொடங்குவதை நுட்பமாக கணித்தாலும், அதனுடைய தாக்கம், வீர்யம் மற்றும் பரப்பளவை சரியாக்க் கணிக்க முடியவில்லை. ஆனால் இந்த வேத கால வானியல் உதவியுடன், சாதாரண மனிதனும் தன்னுடைய இடத்தின் மழை அளவை மழைக் காலம் முழுமைக்கும், துல்லியமாகக் கணிக்க முடியும். இந்தக் கட்டுரையில் கொடுத்துள்ள அம்சங்களை 5 லிருந்து 9 வருடங்கள் வரை சரி பார்த்து, இன்னும் நம்பகமான ஒரு ஆதாரத்தை உருவாக முடியும். அப்படிச் செய்ய விரும்புவோர் தாராளமாக அதைச் செயல் படுத்தலாம், ஆனால் அதற்க்கான நன்றியையும், ஒப்புதல்களையும்  தகுந்தவர்களிடம் பெற்றுக் கொள்ள வேண்டும். 

(முற்றும்)   

இந்த்த் தொடரைத் தமிழ் மக்களுக்காக மொழி பெயர்த்த திரு ஸாரநாதன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளும் இந்த நேரத்தில், மழை ஜோதிடம் குறித்து அவர் எழுதிய கருத்தையும் பகிர்ந்து கொள்கிறேன். அவர் கருத்தே என்னுடைய கருத்தும்....
" I am awed at the knowledge our ancestors possessed. I used to think while translating how nice it would be for some very big agency to create a software model, with the technological expertise we possess. I do not think our Met dept, being govt of India, would ever venture or even encourage anyone in developing this indigenous know how, as the govt would think this is purely (Hindu) religious and would go against its false secular credentials. I think with a fraction of the fees they pay to foreign expertise in predicting rains, we could have a reliable method tuned for our country with this knowhow. Only God can identify such a philanthropist to develop Veda based rainfall prediction software!

No comments: