Tuesday, October 7, 2008

A sample case of what is happening in Tamil nadu!

Deiva thamizh naattinilE veNNilaavE – naangaL
Dheeram indri pEdaiyar pOl vaazhindhirunthOm …
(Kalki)


The crisis that has enveloped this Tamil land of devotees and God-fearing people is something that is going on un-checked.
It is good to see that we still have some hope in persons like Sri AMR who is fearlessly
condemning the atrocities.
May his tribe grow.
May this land be released from atheistic and adharmic elements.

- jayasree


**********************************************************






தெய்வத் தமிழகத்தின் பிரசித்திபெற்ற பல திருக்கோயில்கள் காலமனைத்தையும் கடந்து கிருதயுகம் முதல் இறைநெறியை ஊட்டிவரும் திவ்யதேசங்களாகும்! அவற்றில் ஒன்றுதான், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம் தேசூரை அடுத்து நிற்கும் திருமால்பாடி திருத்தலமாகும்.


இத்திருக்கோயில் கவனிப்பாரின்றி தாய், தந்தையரை இழந்த அனாதை குழந்தையைப் போல் பல ஆண்டுகளாகக் கிடந்தது. இதனைக் கண்டு மனம் வருந்திய அரங்கனின் பரமபக்தரான திரு. டி.எஸ். பாஸ்கர் என்பவர், ஊர்மக்களின் ஆதரவையும், உதவியையும் கொண்டு, `திருமால்பாடி ஸ்ரீரங்கநாதர் ஆலய ஸ்ரீசுகப்பிரம்ம மகரிஷி திருப்பணிக்குழு' என்ற திருக்கோயில் சீரமைப்புக் குழுவினை அமைத்து அரசுடன் பதிவும் செய்யப்பட்டது (அரசுப் பதிவு எண். 382/07) இதற்குத் தமிழக அரசின் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை அங்கீகாரம் அளித்தது.


திருப்பணிக் குழுவினர் வீடு வீடாகப் படியேறி, கையேந்தி ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என்று நன்கொடைகள் பெற்று கிராமப் பொதுமக்களின் உழவாரப் பணி மூலம் கல்லும், மண்ணும் சுமந்து ஓரளவு திருப்பணியும் 2007-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நிறைவு பெற்றது. இதற்காக இவர்கள் பட்டபாடு சொல்லி மாளாது!


சர்வஜித் வருடம் கார்த்திகை மாதம் 6-ம் தேதி வியாழக்கிழமைக்கு (22.11.2007) காலை 7.30 மணிக்கு மேல் 9.00 மணிக்குள் குடமுழுக்கு வைபவம் செய்ய தீர்மானித்து அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது.


அரசியல் தலையீடு!


குன்றிலிட்ட விளக்காய் அழகான ஒரு சிறு குன்றின் மேல் விளங்கும் இத்திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகத்தைத் தரிசித்து மகிழ அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தவேளையில்தான் எதிர்பாராத பிரச்சினை உருவாகியது.


தெள்ளாறு ஊராட்சி ஒன்றிய தலைவர், தமிழக ஆளும் கட்சியைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் ஒருவர், மற்றும் திருமால்பாடி ஊராட்சி மன்றத் தலைவர் ஆகிய மூவரும் சேர்ந்து குடமுழுக்கு வைபவம் நிறைவேறாமல் தடுத்துவிட்டனர். தங்களுக்குரிய `மரியாதை' தரவில்லை என்றும், மாமூலாகத் தங்களுக்குச் சேரவேண்டிய பணத்தைத் தரவேண்டும் என்றும், அதுவரை குடமுழுக்கு விழாவை நடத்தவிட மாட்டோம் என்று கூறி, 15.6.2008 அன்று ஊர்மக்கள் திருக்கோயிலில் கூடியிருந்தபோது அடியாட்களை வெளியூரிலிருந்து கூட்டிக்கொண்டு வந்து தாக்கினர். அன்றைய தினமே தேசூர் காவல்நிலையத்தில் இதுபற்றி திருக்கோயில் திருப்பணிக் குழுவினர் புகார் செய்தனர் (புகார் எண் : 4573894 / நாள் : 15.6.2008)


காவல்துறை அதிகாரிகள் இதுபற்றி விசாரணை நடத்தினர். ஆனால், மேற்கூறிய மூவரும் ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்ததால் தீவிர நடவடிக்கை எடுப்பதற்கு அதிகாரிகள் தயங்கினர்! ஆதலால், தமிழக அரசிடம் முறையாகப் புகார் செய்யப்பட்டது. ஆனால், இங்கும் மேற்கூறிய மூவருக்கும் உள்ள அரசியல் செல்வாக்கைக் கண்டு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவிட்டனர் அந்த அதிகாரிகளும்!


இன்றுவரை அற்புதமான இத்திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறாமல் உள்ளது. பக்தர்கள் மனம் வெதும்பி, செய்வதறியாது நிற்கின்றனர். திருக்கோயிலின் புனர்நிர்மாணத்திற்கு ஒரு செங்கல்கூட கொடுக்காதவர்கள் அல்லது ஒரு பிடி மணலைக்கூட அளிக்காதவர்கள் இவ்விதம் கட்சிச் செல்வாக்கைப் பயன்படுத்தி மாமூல் கேட்பதும், மரியாதை தரவேண்டும் என்று கேட்பதும் எவ்விதம் நியாயமாகும்?


தெய்வத்தைவிட அரசியல் பிரமுகர்கள் உயர்ந்தவர்களா?


எங்கு போய்விட்டன சட்டமும், நியாயமும்? அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, நியாயம் வழங்குமா? அல்லது நீதிமன்றத்திற்குச் சென்றால்தான் நீதி கிடைக்குமா?

நிலைகண்டு கண்ணீர் வடிக்கும்,
ஏ.எம்.ஆர்.

No comments: