
நம்ம கலீஞ்சரு கீராரே, படா ஸோக்கா போஸு குட்துக்கிறாரு பாத்தியா?
மஞ்சா துண்டுக்கு ஸோடியா, கை மேல மஞ்சா கலருல கொஸு அடிக்கற மட்ட வச்சிகிறாரு.
நம்ம சனத்துக்கல்லாம் ப்றீயா கொஸு மட்ட தர்றாங்களாம்.
அந்தம்மா சொம்மா கொஸு கொஸுன்னு புடிங்கி தள்ளுதுல்லை.
பாத்தாரு நம்ம கலீஞ்சரு.
அல்லார்க்கும் ப்றீயா கொஸு மட்டைய குடுத்துக்கிறேன்னு சொல்ட்டாரு .
கலீஞ்சரு கொஸு மட்ட திட்டம்னு திட்டம் வந்திர்ச்சி தெர்யுமா?
இன்னா ... எவண்டா அது கஸ்மாலம் தொண தொணன்னு கிராஸ் டாக்கு குட்த்து பேஜார் பண்றது?
இன்னா சொல்ற?
கொஸு மட்ட இல்லீன்க்ர்யா ?
அப்பால இன்னாங்கற?
டென்னிஸு மட்டையா?
அப்டீன்னு மட்ட கீது?
அட்ரா சக்க, அதானா னூசு?
யிப்ப அல்லா மேட்டரும் கப்புனு புறிஞ்சு போச்சு.
நம்ம கலீஞ்சரு ஆட்சில கிறிக்கெட்டு வந்துச்சு.
தோனி அண்ணாச்சி வந்தாங்க.
விளா எடுத்தாங்க .
இப்ப டென்னிஸு வந்துகினே கீது.
அத்தொட்டு விளா எடுக்கணும்.
விளாக்கு கலீஞ்சரு புக்கிங்கு ஆவணும்.
ஸோக்கா மட்டைய ஆட்டிக் காமிச்சு தங்கத்துலய மட்ட வாங்கிடு தம்பீஇன்கறாரு
ஜகத்து ரச்ச்சகனு அண்ணே,
உனிக்குதான் சொல்ட்ராறு
கண்டுகினியா ???
No comments:
Post a Comment