Saturday, September 7, 2024

இராமாயணம் 7000 ஆண்டுகளுக்கு முன் நடந்த உண்மைச் சரித்திரம்

பிராமணனாகப் பிறந்து கிருஸ்துவப் பெண்ணை மணந்து கொண்டு, அதை மறைத்து, பிராம்மணனாகவே தன்னைக் காட்டிக் கொண்டு, பிராம்மணர்களையும், ஹிந்து மதத்தவர்களையும் தாக்கும் கிரிப்டோக்களும் இருக்கிறார்களே, அவர்கள் பரப்பும் பொய்யையும், அவதூறுகளையும் காட்ட உண்மைக் கருத்துக்களை சிறு கட்டுரைகளாக எழுதுகிறேன்

***
இராமாயணம் 7000 ஆண்டுகளுக்கு முன் நடந்த உண்மைச் சரித்திரம்.
அதன் காலக் கட்டத்தை நிரூபிப்பது, கர தூஷண வதம் ஆரம்பிக்கும் போது விழுந்த விண்கல் ஆகும். பதினெட்டு ஸ்லோகங்களில் ஒரு ஸர்கம் முழுவதும் வால்மீகி அதை விவரிக்கிறார். விண்கல் விழுந்த வேகத்தில் காற்றில் நைட்ரஜன் ஆக்சைடுகள் பல உருவாகி இருக்கின்றன. அவை சிவந்த நிறம் கொண்டவை. நீரில் கரைத்து நீரையும் இரத்தச் சிவப்பாக மாற்றுபவை.
பெரும் சத்தத்துடன் விழுந்த விண்கல் குறித்து விளக்கும் அந்தப் பகுதியில் இரத்த மழை பொழிந்தது என்கிறார் வால்மீகி. இராமரும் இரத்த மழையைப் பார்த்தார். பூமி அதிர்ந்தது. தூசிப் படலம் எழுந்தது. சூரியன் தூசியால் மறைந்தது.
இவ்வாறு விளைவுகளை ஏற்படுத்திய விண்கல் GISP2 என்னும் அறிவியல் பட்டியலில் குறிக்கப்பட்டிருக்க வேண்டுமே என்று தேடினால் ஆச்சரியம். நாம் கண்டுபிடித்த வருடமான பொ. மு. 5078 இல் அது பதிவாகி இருக்கிறது. இராமாயணம் நடந்தது உண்மையே அதன் காலம் உண்மையே என்று நிரூபிக்கும் வரைபடம் இது.
அந்த விண்கல் விழுந்த இடம் பஞ்சவடிக்கு அருகே, திரம்பகேஸ்வர் கோயில் அருகே உள்ள வட்ட வடிவ குளங்கள் ஆகும். அவை விண்கல் விழுந்தால் உண்டான பள்ளங்கள் என International catalogue of meteor craters பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இந்த விண்கல் விழுந்த வருடமே இராமாயணம் என்பது உண்மையாக நடந்தது என்பதற்கு அறிவியல் அத்தாட்சி. GISP2 வில் பொ. மு. 5078 வருடம் விண்கல் விழுந்தது என்பது
உலகளாவிய ஆய்வாளர்கள் ஏற்றுக் கொள்ளும் விவரம் ஆகும்.

இராமாயண நிகழ்ச்சிகள் கால அட்டவணை



GISP2 graph for விண்கல் விழுந்த வருடம்



திரம்பகேஸ்வர் கோயில் அருகே விண்கல் விழுந்த பள்ளங்கள்







No comments: