Friday, April 19, 2013

மழை ஜோதிடம் (பகுதி 3) (உடனடி மழை)

ஆங்கிலத்தில் :- http://jayasreesaranathan.blogspot.com/2013/04/3.html
தமிழில்:- திரு டி.ஜி. ஸாரநாதன்

***********************
சித்திரை மாதத்திலிருந்து,  பருவ மழைக்கு முன்பான தினங்களில், திடீர் மழைகளை எதிர்ப் பார்க்கலாம். அவை, 195 நாட்களுக்கு முன்பே கணிக்கக்கூடிய வானிலை நிலைமைகளில்  இருந்திருந்தாலும், குறிப்பிட்ட ஒரு இடத்தில் திடீர் மழை வர வாய்ப்பு உள்ளதா என்பதை மழை வருவதற்குச் சற்று முன்னாலேயே கணிக்க, சில குறிப்புகள் உள்ளன. மேக மூட்டம் இருந்தால் மட்டுமே மழை வரும் என்று கணிக்க முடியாது. மழை வருவதற்கு முன்னால், தாவரங்களும், விலங்குகளும் நடந்து கொள்வதிலிருந்தும் நாம் ஊகிக்கலாம். சிறுவர்களும் கூட உடனடி  மழை வருவதற்கான  சுற்றுச் சூழலில் ஏற்ப்படும் மாற்றத்தை அறிந்து கொள்வார்கள். இயற்கையே தன்னை மாற்றிக் காண்பிக்கும். கட்டுரையின் இந்த பாகத்தில், ஜோதிட புத்தகங்களில் காணப்படும், அம்மாதிரியான அம்சங்களைக் காண்போம். இந்த அம்சங்களை 'நிமித்தம்' அல்லது அடையாளங்கள் என்று கூறுவார்கள். குறிப்பிட்ட ஒரு நாளில், மழை இன்னும் சில மணி நேரத்தில் பெய்யுமா என்று அறிந்து கொள்ள இவை உதவும். அந்த அடையாளங்கள்:
  • எறும்புகள், நாம் எந்த தொந்தரவும் செய்யாமலேயே, தன்னிச்சையாக, தாங்கள் பதுங்கியிருக்கும் ஒட்டைகளிளிருந்து முட்டைகளை அங்கும் இங்கும் எடுத்துச் செல்வது

  • பாம்புகள் மரத்தின்மேல் ஏறுவது, உறவு கொள்வது.

  • பாம்புகள், புல் தழைகளின் மேல் ஓய்வெடுப்பது.

  • பசுக்கள் கன்றுகளைத் தேடி ஓடி வருதல்

  • பூனைகள் பூமியைப் பிராண்டுவது

  • பச்சோந்திகள் மரத்தின் உச்சியில் ஏறி வானத்தைப் பார்ப்பது.

  • பசுக்கள் சூரியனையோ அல்லது வானத்தையோ பார்த்தல்.

  • பகல் வேளையில் சேவல்கள் கூவுதல்.

  • செம்மறி ஆடுகள் வெளியே வர முரண்டுதல்; காதுகளை ஆட்டியும், நிமிர்த்தியும், கால்களால் தரையை உதைப்பதும்

  • நாய்கள் வீடுகள் மீதேறி வானத்தைப் பார்த்து ஊளையிடுதல்

  • மீன்கள் நீரிலிருந்து திடீரென்று துள்ளி  குதித்தல்.

  • மீன்கள் முன்னோக்கிச் செல்லுதல் (மீன்களின் இந்த இரண்டு நடத்தைகளையும்,மீன்கள் இருக்கும் குட்டை, குளங்களில் கவனிக்க வேண்டும்)

  • தவளைகள், திடீரென்று பருவ மழைக்காலத்திற்கு முன்பாகவும், பருவ மழைக் காலங்களில் நிறுத்தாமலும் கத்துவது.

  • பறவைகள் சிறு தண்ணீர்த் தேக்கங்களில் குளிப்பது
  • செடி கொடிகளின் துளிர் இலைகளின் நுனி வானத்தை நோக்கி இருப்பது

  • சிறுவர்கள் சந்தோஷத்துடன் கூவிக்கொண்டே ஓடி ஆடுவது

  • சூரிய உதய அஸ்தமனத்தின் போது வானம் மயில், கிளி அல்லது நீல வண்ணத்துடன் காட்சி அளிப்பது

  • அல்லது சீன ரோஜா, தாமரைப் போன்று பளபளப்பாக இருப்பது

  • அல்லது அலைகள், மலைகள்,முதலை, கரடி, மீன் போன்றோ தோன்றுவது 

  • அல்லது மிதக்கும் அடுக்குகள் போல் ஒன்றன் மேல் ஒன்றாய் இருப்பது

  • மேகங்கள் சுண்ணாம்பைப் போன்று வெண்மையாகவோசந்திர ஒளியைப் போன்று நடுவில் மை வண்ணத்துடனோ அல்லது பளபளப்பாகவோ இருப்பது

  • அல்லது பல ரூபங்களில் மாடிப் படிகளைப் போன்று இருப்பது

  • சூரிய உதய அஸ்தமனத்தின் போது வானவில்கம்பி போன்ற மேகங்கள், போய்த் தோற்றமான சூரியன் ஆகியவை தென்படுவது 

  • சூரிய உதய அஸ்தமனத்தின் போது வானம் கௌதாரியின் இறக்கைகள் போன்றோ இருப்பது, பட்சிகள் கத்திக் கொண்டு அங்கும் இங்கும் பறந்துகொண்டிருப்பது.

  • மேற்கு மலைத் தொடர் அல்லது மலைப் பாங்கானப் பிரதேசங்களில், சூரிய உதய அஸ்தமனத்தின் போது, நீட்டிய கரங்களைப் போல் சூரிய கிரணங்கள் தெரிவது.

  • சூரிய உதய, அஸ்தமனத்தின் போது கீழ் வானத்தில் இடியோசை கேட்பது.

  • தொலைவில் தெரியும் குன்றுகளும், மலைகளும் நீலமாகத் தெரிவது 

  • பகலில், மின்னல் வட கிழக்கில் தெரிவது

  • பகலில், மின்னல் சிவப்பாக ஒரு நேர்க் கம்பி போல் தெரிவது

  • பொய்த் தோற்றச் சந்திரன் தெரிவது

  • சந்திரனைச் சுற்றி சிவப்புக் கோடு தெரிவது

  • சந்திரன் நிறம் தேன் அல்லது கிளியின் கண் போன்று இருப்பது

  • மழைக் காலத்தில், உதிக்கும் சூரியன் கண்கவரும் பளிச்சுடன் அல்லது உருக்கிய தங்க  நிறத்துடனோ அல்லது பளபளப்பாகவோ அல்லது வைடூர்யம் போன்று தெரிவது

  • அல்லது நண்பகல் வெயில் மிக உக்கிரமாக இருந்தாலும், மழைக் காலத்தில் உடனடி மழை பெய்யும்

  • மழைக் காலங்களில், தண்ணீர் வாசனையற்று இருந்தால், வானம் பசுவின் கண்களைப் போலிருந்தாலோ அல்லது மேகங்களற்று இருந்தாலோ, அல்லது உப்பு தானாக நீர்விட்டுக் கொண்டாலோ, அல்லது சுற்றுப்புறம் சலனமற்று இருந்தாலோ, உடனடி மழை பெய்யும்.

(தொடரும்)

1 comment:

Kamaraj Ragu said...

பயனுள்ள தகவல்
நன்றி